Sandroor Mozhi - Iniyavai Narpathu | 3rd Standard Tamil Term 1 Chapter 7

சான்றோர் மொழி - இனியவை நாற்பது | 3 ஆம் வகுப்பு தமிழ்

சான்றோர் மொழி

7. சான்றோர் மொழி

சான்றோர் மொழி - இனியவை நாற்பது விளக்கம்

இனியவை நாற்பது

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே

எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது

- பூதஞ்சேந்தனார்

பாடல் பொருள்

கற்றவர்களின்முன் தான் கற்ற கல்வியைக் கூறுதல் இனிமையானது. அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது மிகவும் இனிமையானது. எள் அளவு சிறியதாயினும் தான் பிறரிடம் கேட்டுப் பெறாமல், பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும்விட இனிமையானதாகும்.

பொருள் அறிவோம்

மிக்கார் : அறிவில் மேம்பட்டவர்

எள்துணை : எள் அளவு

எத்துணையும் : எல்லாவற்றிலும்

மாண்பு : பெருமை

நூலைப்பற்றி....

இந்நூல் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனாரால் எழுதப்பட்டது. வாழ்க்கைக்கு நன்மை தரும் இனிய கருத்துகளைக் கூறுவது. நாற்பது பாடல்களைக் கொண்டது. எனவே இனியவை நாற்பது என்று அழைக்கப்படுகிறது.

செய்யுளைத் தெளிவான உச்சரிப்புடன் படித்தல், அதன் சரியான பொருளைப் புரிந்து கொண்டு கருத்தை வெளிப்படுத்துதல்.