Patterns in Body Movements and Sound | 2nd Maths Term 1 Unit 3

உடலசைவுகளுடன் கூடிய ஒலி அமைப்புகள் | 2வது கணக்கு பருவம்-1 அலகு 3

2வது கணக்கு : பருவம்-1 அலகு 3 : அமைப்புகள்

உடலசைவுகளுடன் கூடிய ஒலி அமைப்புகள்

ஆசிரியருக்கான குறிப்பு : கும்மி மற்றும் கோலாட்டப் பாடலைச் செய்கையுடன் பாடிக் காண்பித்து அவற்றிலுள்ள அமைப்புகளைக் குழந்தைகள் அறிய ஆசிரியர் உதவி செய்யலாம்.

பயணம் செய்வோம்

கும்மியாட்டம்

கும்மியாட்டம் illustration showing women dancing in a circle

உற்று நோக்கிக் கலந்துரையாடு :

(1) மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பது என்ன? விடை: பெண்கள் வட்டத்தில் நடனமாடுகிறார்கள்

(2) இம்மாதிரியான நடனம் எந்தத் தருணங்களில் நடைபெறும்? விடை: கோவில் திருவிழா

(3) எந்த ஒலி கும்மியாட்டத்திற்கு அடிப்படையாக அமைகிறது? விடை: டப் டப் டப்

கலைச் சொற்கள் : உடல் அசைவுகள், ஒலிகள்

ஆசிரியருக்கான குறிப்பு

கும்மி மற்றும் கோலாட்டப் பாடலைச் செய்கையுடன் பாடிக் காண்பித்து அவற்றிலுள்ள அமைப்புகளைக் குழந்தைகள் அறிய ஆசிரியர் உதவி செய்யலாம்.

கற்றல்

பூமி - வானம் விளையாட்டு

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பூமி - வானம் விளையாட்டை விளையாடுக.

ஆசிரியர் பூமி எனக் கூறினால் மாணவர்கள் தங்கள் கைகளைக் கீழ்ப்பக்கமாகப் படத்தில் உள்ளவாறு தட்டுதல் வேண்டும்.

பூமி விளையாட்டு - கைகளை கீழே தட்டுதல்

ஆசிரியர் வானம் எனக் கூறினால் மாணவர்கள் படத்தில் உள்ளவாறு மேல் நோக்கிக் கைகளைத் தட்டுதல் வேண்டும்.

வானம் விளையாட்டு - கைகளை மேலே தட்டுதல்

உடலசைவுடன் ஒலி அமைப்பை விளையாடி மகிழ்வோம்.

செய்து பார்

ஆட்டம் ஆட்டம் ஆட்டம்

கொடுக்கப்பட்டப் படத்திலுள்ள அமைப்பினை உற்று நோக்குக. பொருள்களைக் கொண்டு உடலசைவுடன் கூடிய ஒலி அமைப்புகளை உருவாக்குக.

ஒலி அமைப்புகளை உருவாக்கும் கருவிகள் - தட்டு, மணி, ஜால்ரா

ஆசிரியருக்கான குறிப்பு

வேறுபட்ட வரிசைகளில் மாணவர்கள் அமைப்புகளை உருவாக்க ஆசிரியர் உதவலாம். அவர்களுக்கு 1, 2, 3, 4 எனக் கூறி உடலசைவுடன் கூடிய ஒலி அமைப்புகளை உருவாக்க வழிகாட்டலாம்.

கூடுதலாக அறிவோம்

கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் உள்ளிட்ட நடன வகைகளில் உடலசைவுடன் கூடிய ஒலி அமைப்புகளே இடம் பெறுகின்றன.

பல்வேறு நடன வகைகள் - கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம்