ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு – 2024 | விடைகளுடன்
I. சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து எழுதுக (8x1=8)
1. ஆரியர்கள் ___________ லிருந்து வந்தனர்.
2. ___________ இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள் ஆகும்.
3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
4. பொருந்தாததை வட்டமிடுக?
5. வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் : 1. வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் : 2. வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
6. ___________ பிறந்த நாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்.
7. தேசிய கீதத்தை இயற்றியவர் ___________
8. வேளாண்மை என்பது ___________ நிலைத் தொழிலாகும்.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக (8x1=8)
1. ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
2. வேத காலத்தில் மக்களிடமிருந்து பாலி என்ற வரி வசூலிக்கப்பட்டது.
3. பௌத்தத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார்.
4. மனித வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
5. இந்தியாவின் மிக நீளமான ஆறு கங்கை.
6. நம் மாநில பறவை மரகதப்புறா.
7. தேன் சேகரித்தல் என்பது முதன்மை நிலை தொழில்.
8. சேமிப்பு என்பது எதிர்கால தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
III. பொருத்துக (8x1=8)
| 1. கீழடி | தந்தத்திலான பகடை |
| 2. மகாவீரர் | வர்த்தமானர் |
| 3. இயற்கை வளம் | காற்று |
| 4. சத்யமேவ ஜெயதே | வாய்மையே வெல்லும் |
| 5. ₹ | உதயகுமார் |
| 6. குடியிருப்புகள் | மனிதர்கள் வாழுமிடம் |
| 7. பங்கிம் சந்திர சட்டர்ஜி | தேசியப் பாடல் |
| 8. வங்கி | பண பரிவர்த்தனை |
IV. சரியா? தவறா? கூறு (4x1=4)
1. படைத்தளபதி ‘கிராமணி’ என அழைக்கப்பட்டார். - தவறு
2. விகாரைகள் என்பன கோவில்களாகும். - தவறு
3. மணிமேகலை ஒரு சமண இலக்கியமாகும். - தவறு
4. மூன்றாவது பௌத்த மாநாடு பாடலிபுத்திரத்தில் நடைபெற்றது. - சரி
V. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி (ஏதேனும் 6) (6x2=12)
1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக?
2. நடுகற்கள் குறிப்பு தருக?
3. ‘ஜினா’ என்பதின் பொருள் என்ன?
4. வளங்கள் என்றால் என்ன? அதன் வகைகளில் ஏதேனும் இரண்டினை எழுதுக?
வகைகள்: 1. இயற்கை வளங்கள் 2. மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்.
5. கடல் ஈஸ்ட் பயன்களை எழுதுக?
6. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
7. தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
8. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
9. பண்டமாற்று முறை என்றால் என்ன?
VI. விரிவாக விடையளி (ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும்) (1x5=5)
1. வேத காலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக?
சமுதாயத்தில் பெண்களுக்கு நல்ல மதிப்பும், சுதந்திரமும் இருந்தது. பெண்கள் கல்வி கற்றனர். மனைவியாக மதிக்கப்பட்டனர். பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். சொத்துரிமை மறுக்கப்பட்டது.
பின் வேத காலம்:
பெண்களின் நிலை குறைந்தது. கல்வி, சொத்துரிமைகள் மறுக்கப்பட்டன. குழந்தை திருமணம் வழக்கத்தில் இருந்தது. உடன்கட்டை ஏறுதல் இல்லை.
2. வளங்களை பாதுகாப்பது எப்படி?
- குறைத்தல் (Reduce): வளங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
- மறுபயன்பாடு (Reuse): ஒரு பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல்.
- மறுசுழற்சி (Recycle): பழைய பொருட்களை புதிய பொருட்களாக மாற்றுதல்.
- மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துதல்.
- காடுகளைப் பாதுகாத்தல், மரங்களை நடுதல்.
3. இயற்கை தேசியச் சின்னங்களில் எவையேனும் ஐந்தினை பற்றி குறிப்பு வரைக.
- தாமரை: இந்தியாவின் தேசிய மலர். இது 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சேற்றில் வளர்ந்தாலும் அழகிய மலராக மலர்கிறது.
- ஆலமரம்: இந்தியாவின் தேசிய மரம். இது 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பெருமையின் சின்னமாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் விளங்குகிறது.
- மயில்: இந்தியாவின் தேசியப் பறவை. இது 1963-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவை தாயகமாகக் கொண்டது.
- புலி: இந்தியாவின் தேசிய விலங்கு. இது 1973-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பூனை இனத்தில் இதுவே பெரியது.
- கங்கை ஆறு: இந்தியாவின் தேசிய ஆறு. இது 2008-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது வற்றாத ஆறு ஆகும்.
VII. கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்கண்ட பகுதிகளை குறிக்கவும் (ஏதேனும் ஐந்து மட்டும்) (5x1=5)
வரைபடத்தில் குறிக்க வேண்டிய இடங்கள்:
- அ) தட்சசீலம்: தற்போதைய பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
- ஆ) அயோத்தி: உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
- இ) இந்திரபிரஸ்தம்: தற்போதைய டெல்லி பகுதி.
- ஈ) ஹரப்பா: தற்போதைய பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
- உ) இந்தியப் பெருங்கடல்: இந்தியாவின் தெற்கே அமைந்துள்ள பெருங்கடல் பகுதி.
- ஊ) அரபிக்கடல்: இந்தியாவின் மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி.