OMTEX AD 2

3rd Tamil: Term 3 Chapter 5 - The Crow and the Snake Story | காகமும் நாகமும்

3rd Tamil: Term 3 Chapter 5 - The Crow and the Snake Story | காகமும் நாகமும்

பருவம் 3 இயல் 5: காகமும் நாகமும்

3 ஆம் வகுப்பு தமிழ்

காகமும் நாகமும்

காகமும் நாகமும் கதை иллюстрация

நீதிக் கருத்து : பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்தல்

காகம் ஒன்று ஆலமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது

காகம் வெளியே இரை தேடச் சென்றது

தினந்தோறும் பாம்பு ஒன்று வந்து முட்டைகளை உடைத்தது

தினந்தோறும் உடைந்த முட்டைகளைப் பார்த்த காகம் மிகவும் வருத்தம் அடைந்தது

காகம் தன் நண்பன் நரியிடம் அறிவுரை கேட்டது

நண்பனே! அந்தக் கொடிய பாம்பை அழிப்பதற்கு ஒரு வழி சொல்

இளவரசியின் விலையுயர்ந்த பொருள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து முட்டைகள் இருக்கும் கூட்டின் அருகே போட்டுவிடு

சரி! நீ சொன்னபடியே கொண்டுவந்து போடுகிறேன். அப்படிப் போட்டால் என்ன நடக்கும்?

முதலில் நீ கொண்டுவந்து போடு. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!

இளவரசி தன் தோழிகளுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருக்க, கரையில் முத்துமாலை இருப்பதை காக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

காக்கை, இளவரசியின் முத்துமாலையைக் கொத்திக்கொண்டு பறந்தது

யாரங்கே?... காவலர்களே அந்தக் காகம் என் முத்துமாலையை எடுத்துச்செல்கிறது அதைப் பிடியுங்கள்

காவலர்கள் வேல்களுடன் காக்கையைத் துரத்திக் கொண்டு ஓடினர்

காக்கை, தன் கூட்டினருகே முத்துமாலையைப் போட்டது.

அதைப்பார்த்த வீரன் மரத்தில் ஏறி காகத்தின் கூட்டினருகே முத்துமாலையைப் பார்த்தான்

முத்துமாலையை எடுக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த பாம்பு சீறிக்கொண்டு வீரனைக் கடிக்க வந்தது

அதைப்பார்த்துக் கோபமடைந்த வீரன் பாம்பை வேலால் குத்திக் கொன்றான்

முத்துமாலையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இளவரசியிடம் முத்துமாலையை வீரர்கள் கொடுத்தனர்

மிக்க நன்றி

காகம் பாம்பின் தொல்லை இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது

கீச்.... கீச்.... கீச்.

நீதிக் கருத்து : பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்தல்