3rd Standard Tamil | Term 1 Chapter 4: Kalyanamam Kalyanam Poem

3 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 இயல் 4: கல்யாணமாம் கல்யாணம்!

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கல்யாணமாம் கல்யாணம்!

4. கல்யாணமாம் கல்யாணம்!

கல்யாணமாம் கல்யாணம் பாடல் иллюстрация 1

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்

யானை மேலே ஊர்கோலமாம்

ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்

கொர்கொர் குரங்கு பின்பாட்டாம்

தடபுடலான சாப்பாடாம்

கல்யாணமாம் கல்யாணம் பாடல் иллюстрация 2

தாலிகட்டும் வேளையிலே

மாப்பிள்ளை பூனையக் காணோமாம்

சந்தடி புந்தடி செய்யாமல்

சமையல்கட்டில் நுழைந்தாராம்

வாங்கிவச்சப் பாலையெல்லாம்

ஒரே மூச்சில் குடித்தாராம்

கல்யாணமாம் கல்யாணம் பாடல் иллюстрация 3

பார்த்துவிட்ட பெண்ணின் தாயும்

பலத்த சத்தம் போட்டாராம்

திருட்டு மாப்பிள்ளைக்கு என் பெண்ணை

திருமணம் செய்ய முடியாது

வேண்டாம் இந்த சம்பந்தம்

வெட்கக்கேடு போய் வாரோம்

- நாட்டுப்புறப் பாடல்

சிந்திக்கலாமா?

இப்பாடலில் வரும் பூனைக்கும் பூனைக்கும் பதிலாக யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தால் எவ்வாறு இருக்கும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.

சிந்திக்கலாமா? பகுதி иллюстрация