3rd Grade Maths: Measurements - Centimeter and Meter | Term 1 Unit 4 Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : அளவீடுகள் - சென்டிமீட்டர் மற்றும் மீட்டர்

அளவீடுகள்: சென்டிமீட்டர் மற்றும் மீட்டர்

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : அளவீடுகள்

100 சென்டிமீட்டர்கள் (செ.மீ) = 1 மீட்டர் (மீ)

சென்டிமீட்டர் மற்றும் மீட்டர்

தெரிந்து கொள்வோம்

100 சென்டிமீட்டர்கள் (செ.மீ) = 1 மீட்டர் (மீ)

இவற்றை முயல்க

a. கோடிட்ட இடத்தில் மீட்டர் அல்லது சென்டிமீட்டர் என்று எழுதவும்

(1) எனது பென்சில் 6 செ.மீ நீளம்.

(2) இந்த மரம் 3 மீ உயரம்.

(3) என் உயரம் 80 செ.மீ

(4) என் கொண்டை ஊசியின் நீளம் மிமீ நீளம்.

(5) தென்னை மரத்தின் உயரம் 15 மீ நீளம்

b. மீனாவிடம் 50 சென்டிமீட்டர் ரிப்பன் மற்றும் ரீனாவிடம் 110 சென்டிமீட்டர் ரிப்பனும் உள்ளது யாருடைய ரிப்பன் மிகவும் பெரியது?

மீனா ரிப்பன் அளவு = 50 செ.மீ

ரீனா ரிப்பன் அளவு = 110 செ.மீ

ஃ ரீனா ரிப்பன் அளவு பெரியது.

செயல்பாடு 6

உன் வகுப்பறையில் உள்ள பின்வரும் பொருள்களின் நீளத்தை, மீட்டர் அளவு நாடா உதவியுடன் அளந்து அட்டவணையில் எழுதவும்.

வகுப்பறை பொருட்களின் நீளத்தை அளவிடும் அட்டவணை

சென்டிமீட்டர், மீட்டர் மற்றும் கிலோ மீட்டரில் எவை சிறியது, பெரியது என்று புரிந்து கொள்ளுதல்

இவற்றை முயல்க

கீழே உள்ள பெட்டிகளில் சரியான குறியீட்டை '< மற்றும் >' குறியிடவும்.

a. சென்டிமீட்டர் < மீட்டர்

b. மீட்டர் < கிலோ மீட்டர்

c. கிலோ மீட்டர் > சென்டி மீட்டர்

பயிற்சி செய்

பின்வருவனவற்றை பொருத்துக.

பொருத்துக பயிற்சி - நீளங்களை சரியான அலகுகளுடன் பொருத்துதல்