6th Social Science - Term 1 Exam 2024 - Original Question Paper | Theni District | Tamil Medium

6th Social Science First Term Exam Question Paper with Answers 2024 | Theni District

6th Social Science - First Term Exam Question Paper with Answers 2024

6th Social Science Question Paper

முதல் பருவ பொது தொகுத்தறித் தேர்வு – 2024
ஆறாம் வகுப்பு - சமூகஅறிவியல்

நேரம்: 2.00 மணி

மதிப்பெண்கள்: 60

6th Social Science Question Paper 6th Social Science Question Paper

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (5x1=5)

  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை _______.
    • அ) வணிகம்
    • ஆ) வேட்டையாடுதல்
    • இ) ஓவியம் வரைதல்
    • ஈ) விலங்குகளை வளர்த்தல்

    விடை: ஆ) வேட்டையாடுதல்

  2. பரிணாமத்தின் வழிமுறை _______.
    • அ) நேரடியானது
    • ஆ) மறைமுகமானது
    • இ) படிப்படியானது
    • ஈ) விரைவானது

    விடை: இ) படிப்படியானது

  3. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
    • அ) வியாழன்
    • ஆ) சனி
    • இ) யுரேனஸ்
    • ஈ) நெப்டியூன்

    விடை: ஆ) சனி

  4. உறைந்த கண்டம் _______.
    • அ) வட அமெரிக்கா
    • ஆ) ஆஸ்திரேலியா
    • இ) அண்டார்டிகா
    • ஈ) ஆசியா

    விடை: இ) அண்டார்டிகா

  5. இந்தியாவில் _______ மாநிலங்கள், _______ யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
    • அ) 27, 95
    • ஆ) 29, 7
    • இ) 28, 7
    • ஈ) 28, 8

    விடை: ஈ) 28, 8

II. கோடிட்ட இடத்தை நிரப்புக (5x1=5)

  1. _______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.

    விடை: கலப்பை

  2. _______ தானியங்கள் சேகரித்து வைக்க பயன்பட்டது.

    விடை: தானியக் களஞ்சியம்

  3. புவியின் சாய்வு கோணம் _______.

    விடை: 23 ½°

  4. தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது _______.

    விடை: ஆஸ்திரேலியா

  5. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சர் _______.

    விடை: ஜவஹர்லால் நேரு

III. பொருத்துக (5x1=5)

  • 11. அசோகர்  -  மிகவும் புகழ் பெற்ற அரசர்
  • 12. மொகஞ்சதாரோ  -  இறந்தோர்மேடு
  • 13. வெப்பமான கோள்  -  வெள்ளி
  • 14. மரியான அகழி  -  பசிபிக் பெருங்கடல்
  • 15. சட்டப்பிரிவு  -  தீண்டாமை ஒழிப்பு

IV. சரியா? தவறா? (5x1=5)

  1. அசோகர் காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.

    விடை: சரி

  2. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.

    விடை: தவறு

  3. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.

    விடை: தவறு (நாய்)

  4. தானிய களஞ்சியம் தானியங்களை சேகரித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

    விடை: சரி

  5. உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா.

    விடை: சரி

V. எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளி (7x2=14)

  1. வரலாறு என்றால் என்ன?

    விடை: வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவாகும்.

  2. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.

    விடை: கூரான கற்கள், எலும்புக் கருவிகள், மரக்கிளைகள், ஈட்டி மற்றும் கற்கோடாரி.

  3. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுதுக.

    விடை: 1. நிமிர்ந்து நடந்தனர். 2. சிந்திக்கும் திறன் பெற்றிருந்தனர்.

  4. மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்கள் பற்றி கூறு.

    விடை: கூடல் நகர், தூங்கா நகர், திருவிழா நகர்.

  5. உட்புறக்கோள்களைப் பெயரிடுக.

    விடை: புதன், வெள்ளி, புவி, செவ்வாய்.

  6. கண்டம் என்றால் என்ன?

    விடை: கடலால் சூழப்பட்ட மிகப்பெரிய பரந்த நிலப்பரப்பைக் கண்டம் என்கிறோம்.

  7. வட தென் அமெரிக்காவை சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

    விடை: பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் (வட அமெரிக்கா), தென் பெருங்கடல் (தென் அமெரிக்கா).

  8. பன்முகத் தன்மையை வரையறு.

    விடை: இனம், மொழி, சமயம், நில அமைப்பு, பண்பாடு போன்றவற்றால் மக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையாக வாழ்வதே பன்முகத்தன்மை ஆகும்.

  9. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

    விடை: பரதநாட்டியம் (தமிழ்நாடு), கதகளி (கேரளா), குச்சிப்புடி (ஆந்திர பிரதேசம்), ஒடிசி (ஒடிசா), கதக் (வட இந்தியா).

  10. பாரபட்சம் என்றால் என்ன?

    விடை: மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதே பாரபட்சம் ஆகும்.

VI. எவையேனும் மூன்றுக்கு விடையளி (3x5=15)

  1. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றை கூறு.

    விடை:
    - இது மொகஞ்சதாரோவில் காணப்படுகிறது.
    - இது செவ்வக வடிவில் நன்கு அகன்று அமைந்துள்ளது.
    - குளத்தின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருக்க இயற்கை தார் கொண்டு பூசப்பட்டுள்ளது.
    - குளத்தின் இருபுறமும் படிக்கட்டுகள் உள்ளன.
    - குளத்தின் அருகே மக்கள் உடை மாற்றும் அறைகளும் இருந்தன.

  2. கோயில்களின் நகரம் - குறிப்பு தருக.

    விடை:
    - காஞ்சிபுரம் ‘கோயில்களின் நகரம்’ என அழைக்கப்படுகிறது.
    - இது பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது.
    - இங்கு புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் போன்ற பல கோயில்கள் உள்ளன.
    - சீனப் பயணி யுவான் சுவாங் கல்வி கற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளார்.
    - இது ‘ஏரிகளின் மாவட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

  3. உட்புறக் கோள் மற்றும் வெளிப்புறக் கோள் - வேறுப்படுத்துக.

    விடை:

    உட்புறக் கோள்கள் வெளிப்புறக் கோள்கள்
    புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை உட்புறக் கோள்கள். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக் கோள்கள்.
    இவை பாறைகளால் ஆனவை. இவை வாயுக்களால் ஆனவை.
    இவற்றின் அடர்த்தி அதிகம். இவற்றின் அடர்த்தி குறைவு.
    அளவில் சிறியவை. அளவில் பெரியவை.
  4. நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.

    விடை: நிலத்தோற்றங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
    1. முதல் நிலை நிலத்தோற்றங்கள்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்.
    2. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்: மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்.
    3. மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்: பள்ளத்தாக்குகள், கடற்கரைகள், மணல் குன்றுகள்.

  5. பாகுபாட்டிற்கான காரணங்களை விவரி.

    விடை: பாகுபாட்டிற்கான முக்கிய காரணங்கள்:
    - பாலின வேறுபாடு: ஆண், பெண் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டுதல்.
    - சாதி அமைப்பு: சமூகத்தில் உள்ள சாதிப் பிரிவுகளால் ஏற்றத்தாழ்வு.
    - மத நம்பிக்கைகள்: வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவதால் ஏற்படும் வேறுபாடுகள்.
    - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்: ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு.
    - மொழி வேறுபாடுகள்: பேசும் மொழியின் அடிப்படையில் பாகுபாடு.

VII. கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும் (1x5=5)

  1. தமிழ்நாடு
  2. ஆந்திரபிரதேசம்
  3. கேரளா
  4. கர்நாடகா
  5. டெல்லி
கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்

VIII. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும் (1x6=6)

  1. வட அமெரிக்கா
  2. தென் அமெரிக்கா
  3. ஆசியா
  4. ஐரோப்பா
  5. ஆப்பிரிக்கா
  6. ஆஸ்திரேலியா
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்