6th Science First Term SA Exam Question Paper with Answers 2024-25
முதல் பருவம்- தொகுத்தறி மதிப்பீடு(SA)-2024-25
வகுப்பு: 6 | பாடம்: அறிவியல் | மொத்த மதிப்பெண்கள்: 60 | நேரம்: 2.00 மணி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (8x1=8)
1. அளவிடப்படக்கூடிய அளவிற்கு __________ என்று பெயர்.
2. வேகத்தின் அலகு __________
3. __________ பருப்பொருளால் ஆனதல்ல.
4. தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை __________ முறையில் நீக்கலாம்?
5. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல?
6. ஆகாயத் தாமரையின் வாழிடம் __________
7. குளம் __________ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்
8. பாக்டீரியா, ஒரு சிறிய __________ நுண்ணுயிரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக. (8x1=8)
9. ஊட்டச்சத்துக் குறைபாடு __________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.
10. அயோடின் சத்துக் குறைபாடு பெரியவர்களில் __________ நோயை ஏற்படுத்துகிறது.
11. டைபாய்டு நோய், __________ மற்றும் நீர் மாசுபடுவதால் பரவுகிறது.
12. செல் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை __________ மற்றும் __________ என வகைப்படுத்தலாம்.
13. அமீபா __________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.
14. புவிப்பரப்பு __________ % நீரால் மூடப்பட்டுள்ளது பூமியில் காணப்படும் மிகவும் வறண்ட பகுதி __________.
15. ஊன்றுதல், உறிஞ்சுதல் ஆகிய இரண்டு __________-ன் வேலை
16. பருப்பொருள் என்பது __________-ஆல் ஆனது.
III. பொருத்துக. (5x1=5)
| 17. வைட்டமின் A | அ) ரிக்கெட்ஸ் |
| 18. வைட்டமின் B | ஆ) மாலைக்கண் நோய் |
| 19. வைட்டமின் C | இ) மலட்டுத் தன்மை |
| 20. வைட்டமின் D | ஈ) பெரி பெரி |
| 21. வைட்டமின் E | உ) ஸ்கர்வி |
சரியான விடைகள்:
17. வைட்டமின் A - ஆ) மாலைக்கண் நோய்
18. வைட்டமின் B - ஈ) பெரி பெரி
19. வைட்டமின் C - உ) ஸ்கர்வி
20. வைட்டமின் D - அ) ரிக்கெட்ஸ்
21. வைட்டமின் E - இ) மலட்டுத் தன்மை
IV. எவையேனும் 12 வினாக்களுக்கு குறுகிய விடையளிக்கவும். (12x2=24)
22. நிறை - வரையறு.
23. ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் யாவை?
24. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
வளைவுப்பாதை இயக்கம்: ஒரு பொருள் முன்னோக்கிச் சென்று, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருத்தல். (எ.கா: வீசி எறியப்பட்ட பந்தின் இயக்கம்).
25. பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் - காரணம் கூறு.
26. கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?
- கலவையில் உள்ள தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற பொருட்களை நீக்க.
- பயனுள்ள பொருட்களைத் தனியாகப் பிரிக்க.
- ஒரு பொருளை மிகவும் தூய்மையான நிலையில் பெற.
27. பருப்பொருள் வரையறு.
28. வாழிடம் என்பதை வரையறு.
29. பாலைவனத் தாவரங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
30. இலைக்கும் ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
31. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
32. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?
33. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் வேறுபடுத்தி எழுதுக.
புரதம்: உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவு. (எ.கா: முட்டை, பருப்பு).
34. சரிவிகித உணவு - வரையறு.
35. பழங்களையும், காய்கறிகளையும் வெட்டிய பின் அவற்றை நீரில் கழுவக் கூடாது ஏன்?
36. வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.
V. விரிவான விடையளிக்கவும்: (எவையேனும் மூன்று வினாக்களுக்கும் மட்டும்) (3x5=15)
37. வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
| வைட்டமின் | குறைபாட்டு நோய் |
|---|---|
| வைட்டமின் A | மாலைக்கண் நோய் |
| வைட்டமின் B | பெரி பெரி |
| வைட்டமின் C | ஸ்கர்வி |
| வைட்டமின் D | ரிக்கெட்ஸ் |
| வைட்டமின் E | மலட்டுத்தன்மை |
| வைட்டமின் K | இரத்தம் உறையாமை |
38. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
- நீண்ட கண் இமைகள் மற்றும் தோல்: பாலைவன புழுதி மற்றும் மணலிலிருந்து கண்களையும் காதுகளையும் பாதுகாக்கின்றன.
- திமில்: கொழுப்பைச் சேமித்து, ஆற்றல் மற்றும் நீர் தேவைப்படும்போது சிதைத்துக்கொள்கிறது.
- தடித்த தோல்: சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், நீர் இழப்பைத் தடுக்கவும் உதவுகிறது.
- அகன்ற பாதங்கள்: மணலில் புதைந்து விடாமல் எளிதாக நடக்க உதவுகின்றன.
- நீர் சேமிப்பு: ஒரே நேரத்தில் அதிக அளவு நீரை அருந்தி, அதை உடலில் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
- சிறுநீர் மற்றும் சாணம்: குறைந்த அளவு நீரையே வெளியேற்றி, நீரைச் சேமிக்கிறது.
39. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடுக.
வேரின் பணிகள்:
- தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்துகிறது.
- மண்ணிலிருந்து நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சுகிறது.
- சில தாவரங்களில் உணவைச் சேமிக்கிறது (எ.கா: கேரட், பீட்ரூட்).
தண்டின் பணிகள்:
- கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகளைத் தாங்குகிறது.
- வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்களை இலைகளுக்குக் கடத்துகிறது.
- இலைகளால் தயாரிக்கப்பட்ட உணவைத் தாவரத்தின் மற்ற பாகங்களுக்குக் கடத்துகிறது.
- சில தாவரங்களில் உணவைச் சேமிக்கிறது (எ.கா: கரும்பு).
40. பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.
- நேர்க்கோட்டு இயக்கம்: பொருள்கள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்குதல். (எ.கா: நேராகச் செல்லும் வண்டியின் இயக்கம்).
- வளைவுப் பாதை இயக்கம்: பொருள்கள் முன்னோக்கிச் சென்று, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருத்தல். (எ.கா: வீசி எறியப்பட்ட பந்தின் இயக்கம்).
- வட்டப் பாதை இயக்கம்: பொருள்கள் வட்டப் பாதையில் இயங்குதல். (எ.கா: கயிற்றின் முனையில் கட்டப்பட்ட கல்லின் இயக்கம்).
- சுழற்சி இயக்கம்: ஒரு பொருள் அதன் அச்சைப் பற்றி சுழலுதல். (எ.கா: பம்பரத்தின் இயக்கம்).
- அலைவு இயக்கம்: ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்தல். (எ.கா: தனி ஊசலின் இயக்கம்).
- ஒழுங்கற்ற இயக்கம்: வெவ்வேறு திசைகளில் இயங்கும் பொருளின் இயக்கம். (எ.கா: மக்கள் கூட்டத்தின் இயக்கம், பூக்களில் தேனைச் சேகரிக்கும் தேனீ).