Class 9 Tamil Iyal 3 Ullathin Seer Manimekalai | Book Back Questions and Answers

Class 9 Tamil Iyal 3 Ullathin Seer Manimekalai | Book Back Questions and Answers

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப் பேழை: இயல் மூன்று - மணிமேகலை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

  • அ) திசைச்சொற்கள்
  • ஆ) வடசொற்கள்
  • இ) உரிச்சொற்கள்
  • ஈ) தொகைச்சொற்கள்

விடை: ஈ) தொகைச்சொற்கள்

குறுவினா

1. பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்: கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர்.

பொருள்: விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

விளக்கம்: மணிமேகலைக் காப்பியத்தில் முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன் அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான்.

2. பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.

பட்டி மண்டபம் என்பது இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டி மன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சு வழக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

“மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்”
பகைப் புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்

எனச் சிலப்பதிகாரத்திலும்,

“பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்”

என மணிமேகலையிலும்,

“பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;
எட்டினோடு இரண்டும் அறியனையே"

என்று திருவாசகத்திலும்,

"பன்னரும் கலை தெரி பட்டி மண்டபம்''

எனக் கம்பராமாயணத்திலும் இச்சொல் பயின்றுவருதலை அறியலாம்.

சிறுவினா

1. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

விழா முன்னேற்பாடுகள் ஒப்பீடு

கற்பவை கற்றபின்

1. உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.

| ஸ்ரீ அருள்மிகு கோட்டை மாரியம்மன் மாசிப் பெருவிழா |

திண்டுக்கல்

திருவிழா அழைப்பிதழ்

அன்பார்ந்த கோட்டை மாரியம்மன் பக்தகோடிகளே!

இந்தாண்டு ஸ்ரீஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் திண்டுக்கல் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் மாசிப் பெருவிழா நடைபெறும். அப்பொழுது கீழ்க்குறித்த நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தகோடிகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகக் குழுவினர்,
ஸ்ரீ அ/மி கோட்டை மாரியம்மன் மாசிப் பெருவிழாக் குழுவினர்
திண்டுக்கல்.

நிகழ்ச்சி நிரல்

திருவிழா நிகழ்ச்சி நிரல்

பூஞ்சோலை: சிரிக்கும் மலர்கள் - பசுமையான புல்வெளி - கூவும் குயில் - வீசும் தென்றல் - விளையாடும் குழந்தைகள் - அழகிய காட்சிகள்.

அந்திவானம் செம்மை படர்ந்து செக்கச் செவேல் எனத் தோன்றியது. பச்சை மரங்களடர்ந்த சோலை, சோலைகளில் பூச்செடிகள், செடிகள் தோறும் மலர்கள், அம்மலர்கள் சிரிப்பை உதிர்க்கும். எங்கும் மணம் பரப்பும் மகரந்தங்கள்! வண்டினங்கள் வந்து அமரும்.

பச்சைப் போர்வை போர்த்தியது போல் பசும்புல் தரை, புல் நுனி முழுவதும் வரகரசி ஒட்டிக் கொண்டது போல் சிறுசிறு விதைகள், தனிமையில் அமர்ந்து கூவும் குயில், சோகத்தைக் கீதமாக இசைக்கும் மாங்குயில்கள்!

தெற்குப் பகுதியில் சில்லென்று வீசும் தென்றல் பொதிகைச் சந்தனத் தாது பொங்கும் வாசனை! பசும்புல் தரையில் எங்கும் சிரித்திடும் பூக்கள்! அழகிய குழந்தைகள் வண்ண உடையில்! இத்தகைய இயற்கைக் காட்சிகள்! “கைபுனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பு இயற்கை” என்னே அழகு! வண்ணத் தியல்பு!