10th Social Science Quarterly Exam 2024 - Original Question Paper
தேர்வு: காலாண்டுத் தேர்வு – 2024
வகுப்பு: 10 - ஆம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
காலம்: 3.00 மணி
மதிப்பெண்கள்: 100
பிரிவு - I
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். (14 X 1 = 14)
1. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
2. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _____ ஆகும்.
4. எந்த ஆண்டில் உடன் கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
5. 'ராஸ்ட் கோப்தார்' யாருடைய முழக்கம்?
6. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _____ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
7. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு _____ ஆகும்.
8. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது _____.
9. இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது _____.
10. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் _____.
11. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ii) இலக்கியம் அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
12. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
13. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு 'கோல்டன் ஃபயர்மான்" வழங்கியவர் யார்?
14. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக்கொண்ட ஒரே மாநிலம் _____.
பிரிவு - II
எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். (வினா எண். 28க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.) (10 X 2 = 20)
15. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
16. “டாலர் ஏகாதிபத்தியம்” - தெளிவுபட விளக்குக.
17. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
18. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
19. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?
20. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
21. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
22. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
23. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
24. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
25. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
26. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
27. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
28. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
பிரிவு - III
எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். (வினா எண். 42க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.) (10 X 5 = 50)
29. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- 1) நாசிச ஜெர்மனியின் ரகசிய காவல் படை .......... என அழைக்கப்பட்டது.
- 2) நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ............. ஆவார்.
- 3) தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் .............
- 4) அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ................ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 5) இந்தியாவில் ................ துறை முதன்மை துறையாகும்.
30. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
31. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
32. 19-ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
33. அ) வேறுபடுத்துக. i) வானிலை மற்றும் காலநிலை ii) உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
ஆ) காரணம் கூறுக. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
34. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
35. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
36. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
37. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
38. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
39. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி.
40. பொது விநியோக முறையை விவரிக்கவும்.
41. 1910 முதல் 1940 வரையிலான முக்கிய ஐந்து உலக நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
42. உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களை குறிக்கவும்.
1) ஜெர்மனி 2) இத்தாலி 3) ஜப்பான் 4) சான்பிரான்சிஸ்கோ 5) சீனா
பிரிவு - IV
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். (2 X 8 = 16)
43. அ) ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
(அல்லது)
ஆ) பெண்களின் மேம்பாட்டிற்கு 19-ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
44. அ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களை குறிக்கவும்.
1) தார் பாலைவனம் 2) தக்காண பீடபூமி 3) மலைக் காடுகள் 4) தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை 5) பருத்தி விளையும் பகுதி 6) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 7) ஏதேனும் ஒரு சர்வதேச விமான நிலையம் 8) ரான் ஆப் கட்ச்
(அல்லது)
1) K₂ 2) மாளவ பீடபூமி 3) மேற்குத் தொடர்ச்சி மலைகள் 4) பாக் நீரிணைப்பு 5) வண்டல் மண் 6) காவிரி ஆறு 7) ஏதேனும் இரும்புத் தாது கிடைக்கும் இடம் 8) பாரதீப்