முதல் இடைப் பருவத் தேர்வு - 2024
9 ஆம் வகுப்பு - தமிழ் வினாத்தாள்
வகுப்பு: 9 ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
காலம்: 1.30 மணி
மதிப்பெண்கள்: 50
பகுதி - I (மதிப்பெண்கள்: 10)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10 x 1 = 10)
1. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தாமணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
2. 'தமிழ்விடு தூது' ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
3. 'மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?
4. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
5. 'நான் திடலில் ஓடினேன்' - எவ்வகை வினை?
6. "பக்திச் சுவை நனிச் சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று பாராட்டப்பட்டவர்
7. 'தண்ணீர் தேசம்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
"உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே!"
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே!"
8. இப்பாடலடிகள் இடம் பெற்ற நூலின் பெயர்?
9. இப்பாடலின் ஆசிரியர் யார்?
10. நீரும் நிலமும் - எவ்வகைத் தொடர்?
பகுதி - II (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கனுக்கு விடையளிக்க. (4 x 2 = 8)
- கண்ணி என்பதன் விளக்கம் யாது?
- 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' - குறிப்புத் தருக.
- உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைக் குறிப்பிடுக.
- 'கூவல்' என்று அழைக்கப்படுவது எது?
- கலைச் சொற்களை மொழிபெயர்க்க: அ. Water Management, ஆ. Lexicon
பகுதி - III (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடையளிக்க. (3 x 2 = 6)
- பொருத்தமான வினையடைகளைத் தேர்வு செய்க. (அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)
அ. ஊர்தி ________ ஓடுகிறது.
ஆ. காலம் ________ ஓடுகிறது. - தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.
அ. இளமையில் கல்வி _________
ஆ. கற்றோர்க்குச் சென்ற _________ - சொல்லுக்குள் சொல் தேடுக.
அ. பாய்மரக்கப்பல் ஆ. எட்டுக்கால் பூச்சி - பிழை நீக்கி எழுதுக.
அ. சர் ஆர்தர் காட்டன் கல்லனையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அனையை கட்டியது.
ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழ பெருந்துணை புரிகின்றன.
பகுதி - IV (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி. (3 x 4 = 12)
- காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
- நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
- பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
- தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.
- அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
பகுதி - V (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் ஒன்றனுக்கு விடையளிக்க. (1 x 8 = 8)
- (அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
(ஆ) உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
பகுதி - VI (மதிப்பெண்கள்: 6)
அடிபிறழாமல் எழுதுக. (3 + 3 = 6)
- அ) "தித்திக்கும் தெள்ளமுதாய்..." எனத் தொடங்கும் தமிழ்விடு தூது பாடலை எழுதுக.
- ஆ) "காடெல்லாம்..." எனத் தொடங்கும் பெரிய புராணப் பாடலை எழுதுக.
விடைக்குறிப்பு
பகுதி - I
1. இ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2. அ. சிற்றிலக்கியம்
3. இ. கீழே
4. ஈ. வளம்
5. அ. தன்வினை
6. இ. சேக்கிழார்
7. இ. வைரமுத்து
8. ஈ. புறநானூறு
9. அ. குடபுலவியனார்
10. ஈ. எண்ணும்மை
பகுதி - II
11. இரண்டு கண்களைப் போல இரண்டிரண்டு அடிகள் கொண்டு எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
12. நீர் இன்றி அமையாதது உடல்; அவ்வுடல் உணவால் அமைவது. உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.
13. ஆறு, குளம், கிணறு, ஏரி, அணை, அகழி. (மாணவர்கள் தங்கள் பகுதிக்கு ஏற்ப எழுதலாம்).
14. வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர், கிளியே பேசு - விளித்தொடர்.
15. 'கூவல்' என்பது உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ஆகும்.
16. அ. நீர் மேலாண்மை, ஆ. பேரகராதி
பகுதி - III
17. அ. ஊர்தி மெதுவாக ஓடுகிறது. ஆ. காலம் வேகமாக ஓடுகிறது.
18. அ. இளமையில் கல்வி முதுமையில் இன்பம். ஆ. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
19. அ. பாய்மரக்கப்பல்: பாய், மரம், கப்பல். ஆ. எட்டுக்கால் பூச்சி: எட்டு, கால், பூச்சி.
20. பிழை திருத்திய வடிவம்:
அ. சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் தௌலீசுவரம் அணையைக் கட்டினார்.
ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
அ. சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் தௌலீசுவரம் அணையைக் கட்டினார்.
ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
பகுதி - IV
21. தமிழ்மொழி, உலகில் மூத்த மொழியாகத் திகழ்கிறது. கால மாற்றத்திற்கேற்ப தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு, அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாறி, கணினியிலும் இணையத்திலும் வலம் வருகிறது. இவ்வாறு கால மாற்றத்திலும் அழியாமல் தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது தமிழ்மொழி.
22. நிலைத்த புகழைப் பெற விரும்பினால், நீர்நிலைகளைப் பெருக்க வேண்டும். உணவைத் தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார். உணவு என்பது நிலத்துடன் நீரும் சேர்ந்தது. நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்தவர், இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர் ஆவார். அவர்களைப் போற்றிப் புகழ வேண்டும் என குடபுலவியனார் கூறுகிறார்.
23. தன் மீது பறவைகள் வந்து அமர்ந்து ஓய்வெடுத்தன; சிறுவர்கள் ஏறி விளையாடினர்; வழிப்போக்கர்கள் நிழல் தேடி அமர்ந்தனர். ஆனால், இன்று யாருமின்றி பட்டமரமாக நிற்பதை எண்ணி பட்ட மரம் வருந்துகிறது.
24. தன்வினை: எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை. (எ.கா: பந்து உருண்டது.)
பிறவினை: எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை. (எ.கா: பந்தை உருட்ட வைத்தான்.)
பிறவினை: எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை. (எ.கா: பந்தை உருட்ட வைத்தான்.)
25. அடுத்த தலைமுறைக்குத் தண்ணீர் தேவை என்பதால், நாம் மழைநீரைச் சேமிக்க வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீரை வீணாக்கக் கூடாது. நீர்நிலைகளான ஆறு, குளம், ஏரி போன்றவற்றை மாசு படுத்தக்கூடாது. நீரின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பகுதி - V
26. (அ) திருநாட்டின் சிறப்பு (பெரியபுராணம்):
காவிரி நீர் புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அந்தப் பூக்களில் உள்ள தேனைக் குடிக்க வரும் வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரவி எங்கும் ஓடுகிறது. காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன. சோலைகளில் மலர் அரும்புகள் உள்ளன. பக்கங்களில் எல்லாம் கரிய குவளை மலர்கள் பூத்துள்ளன. கரைகளில் இளைய அன்னங்கள் உலவுகின்றன. நீர்நிலைகளில் எருமைகள் மூழ்கிக் கிடக்கின்றன. அதனால் அங்குள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகிலுள்ள பாக்கு மரங்களில் பாய்கின்றன. இக்காட்சி வானவில்லைப் போன்று விளங்குகிறது.
(ஆ) கடிதம் (கால் முளைத்த கதைகள்):
(மாணவர்கள் கடித வடிவத்தில் எழுத வேண்டும். கீழே கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.)
அன்புள்ள நண்பா/நண்பி,
நலம், நலமறிய ஆவல். நீ பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எஸ். ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்" என்ற நூல் கிடைத்தது. மிக்க நன்றி. முப்பது பழங்குடியினர் கூறிய கதைகளின் தொகுப்பே இந்த நூல். கொசு ஏன் கடிக்கிறது? பூனையை எலி ஏன் துரத்துகிறது? போன்ற பல விடைதெரியாத கேள்விகளுக்கு இக்கதைகளில் விடை உள்ளது. இது போன்ற நல்ல நூல்களைத் தொடர்ந்து படிப்போம்.

பகுதி - VI
27.
அ) தமிழ்விடு தூது:
அ) தமிழ்விடு தூது:
தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படுந்தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்.
ஆ) பெரியபுராணம்:முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படுந்தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்.
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்.
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்.
தயாரிப்பு
எஸ். ஜெயசெல்வன்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
பாணாதுறை மேல்நிலைப்பள்ளி,
கும்பகோணம்.