Showing posts with label Answer Key - Ranipet. Show all posts

📘 12th Tamil - Quarterly Exam 2024 - Answer Key - Ranipet, Vellore District

காலாண்டுத் தேர்வு 2024 - தமிழ் விடைக்குறிப்பு

இராணிப்பேட்டை & வேலூர் மாவட்டம்

வகுப்பு: 12 | பாடம்: தமிழ்

ஒரு மதிப்பெண் விடை

1. இ) தொல்காப்பியம்
2. இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
3. அ) பொருட்குறிப்பு
4. இ) மழைத்துளிகள்
5. ஆ) மணல் அள்ளுதல்
6. ஆ) திருமணமும் குடும்பமும்
7. ஈ) இவை அனைத்தும்
8. அ) செய்யாமல் செய்த உதவி
9. ஆ) காவியம்
10. இ) காட்சி
11. இ) 4 1 2 3
12. ஆ) ஏப்ரல் 22
13. இ) 2017
14. ஆ) பூமணி

பகுதி – II

பிரிவு – 1

15. தமிழின் துணை

  • i) செந்நிற மேகம், சிவந்து காணப்படும் உழைப்பாளர்களின் கைகள்.
  • ii) அவர்களின் தோள் மீது காணப்படும் வியர்வைத் துளிகள் இவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும்.

16. உலகப்பற்று அழிதல்

  • i) என் பொய்யான உலகப்பற்று அழிந்தது.
  • ii) என் தவம் பலித்தது.
  • iii) என் பிறவி ஒழிந்தது.

17. நன்மை, தீமை

  • i) நன்மையை மறக்கக் கூடாது.
  • ii) தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும்.

18. கலிவிழா, ஒலிவிழா

  • கலிவிழா: ii) மக்களுக்கு எழுச்சி தரும் விழா.
  • ஒலிவிழா: iii) வழிபடவருவோரின் கூட்டம் மிகுதியால் ஆரவாரமாகக் காட்சியளிக்கும் விழா.

பிரிவு – 2 (எவையேனும் இரண்டு)

19. நடை குறித்த தொல்காப்பியர் கருத்து

  • i) ‘நடைபெற்றியலும், நடைநவின்றொழுகும்’
  • ii) “ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை வெண்பா நடைத்தே கலி”

20. தாய்வழிச் சமூகம்

  • i) பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.
  • ii) தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்து வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சேர்ந்தன.

21. சரசுவதி மகால் நூலகம்

  • i) காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக்கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட நூலகம்.
  • ii) அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

பிரிவு – 3 (எவையேனும் ஏழு)

22.

வினாவிற்கு ஏற்ற விடை எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

23.

அ) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது நீயும் புரிந்துகொள்.

ஆ) இரவுக்கு சிற்றப்பனைக் காவலுக்குப் போகச் சொல்.

24. புணர்ச்சி விதிகள்

அ) பூம்பாவாய்: பூ + பாவாய்

விதி 1: "பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்"

ஆ) வெங்கதிர்: வெம்மை + கதிர்

விதி 1: "ஈறுபோதல்”, விதி 2: “முன்னின்ற மெய் திரிதல்”

25.

அ) அடுக்குத்தொடர் ஆ) வினையெச்சம்

26. பகுபத உறுப்பிலக்கணம்

அ) விளங்கி: விளங்கு + இ

விளங்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி

ஆ) பேசுவார்: பேசு + வ் + ஆர்

பேசு – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

27.

அ) நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

ஆ) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

28.

அ) நுழைவு இசைவு ஆ) கடவுச்சீட்டு

29.

ஏற்ற விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

30.

திருவளர்செல்வன். (வினைத்தொகையில் வல்லினம் மிகாது)

பகுதி – III

பிரிவு – 1 (இரண்டு வினாக்கள்)

31. கோவலர்களின் நிலை

  • i) கோவலர்கள் தங்கியிருந்த மலையைச் சூழ்ந்து மழை பெய்தது.
  • ii) எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலத்தில் மேய விட்டனர்.
  • iii) பழகிய நிலத்தை விட்டுப்பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.

32. இடம் சுட்டிப் பொருள் விளக்கம்

  • இடம்: விருந்தினர் இல்லம்
  • ஆசிரியர்: ஜலாலுத்தீன் ரூமி
  • பொருள்: வக்கிரம், அவமானம், வஞ்சனை எதுவாயினும் வரவேற்று நன்றி கூறு.
  • விளக்கம்: இன்பம், துன்பம், வேண்டியது, வேண்டாதது விரும்பியும் விரும்பாமலும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக்கொள்வதே நன்று என்பது பொருளாகும்.

33. செய்ந்நன்றி அறிதல்

  • i) ஓர் உதவியும் செய்யாதிருந்தும் உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
  • ii) காலத்தில் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும்.
  • iii) பயன் எதிர்பார்க்காமல் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.
  • iv) தினையளவு உதவியை பயன் தெரிந்தவர்கள், பனையளவாகப் போற்றுவர்.

34. வள்ளலார் வேண்டும் வரம்

  • உத்தமர் உறவு: ஒரு நெறிப்பட்ட மனத்துடன் இறைவனது மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு தனக்கு வேண்டும் என்கிறார்.
  • வஞ்சகர் உறவு: தம் உள்ளத்தில் ஒன்றை நினைத்துக்கொண்டு புறத்தில் வேறொன்றாகப் பேசும் வஞ்சகர்களின் உறவு தனக்கு ஏற்படாமல் காக்குமாறு கந்தவேளிடம் வள்ளலார் வேண்டுகிறார். மேலும், புகழ் பேசவும், பெண்ணாசை மறக்கவும், உன்னை மறவாதிருக்கவும், நோயற்ற வாழ்வு வாழவும் வரம் கேட்கிறார்.

பிரிவு – 2 (இரண்டு வினாக்கள்)

35. கவிதைகளில் ஒலிப்பின்னல்

ஒலிப்பின்னல்: இசையோடும் இசைக்கருவியோடும்தான் கவிதை பிறக்கிறது. ஓசையும், பொருளும் இணைந்து கவிதை வடிவம் பெறுகிறது.

சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம்:

சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி (புறநானூறு)”

இப்பாடலில் வன்மையான உணர்ச்சியைக் காட்டுகிற விதத்தில் க, த, ட, ற - வல்லின மெய்கள், பிற மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகின்றன. இதன் மூலம் ஒலிக்கோலத்தின் வலிமையை அறிந்து கொள்ளலாம்.

36. பேரிடர் மேலாண்மை

  1. பேரிடர்க் காலங்களில் தாங்கக்கூடிய புதிய கட்டுமானங்கள் கட்ட வேண்டும்.
  2. நீர்நிலைகளை அழித்துக் கட்டடங்கள் கட்டக்கூடாது.
  3. திடக்கழிவுகளால் நீர்வழிப் பாதைகளை அடைக்கக்கூடாது.
  4. ஆற்றுமணலை அளவுக்குமேல் அள்ளக்கூடாது.
  5. சமூகக் காடுகளை வளர்க்க வேண்டும்.

37. சங்க காலக் குடும்ப அமைப்பு

  • சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது. இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தை உடன்வாழும் விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.
  • ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் (பாடல் 279) கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தையும் சேர்ந்து வாழ்ந்த நேர் வழி விரிந்த குடும்பமுறையைப் பாடுகிறது.
  • தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன் --தொல்காப்பியம் பதிவு செய்கிறது.
  • இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக் குடும்பம் தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டுள்ளது.
  • ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ குறுந்தொகைப் பாடல், பெண் கணவனை சார்ந்திருக்கிறாள்.

38.

வினாவிற்கு ஏற்ற விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

பிரிவு – 3 (மூன்று வினாக்கள்)

39. அணி இலக்கணம்

அ) நிரல் நிறை அணி: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது நிரல்நிறை அணி.

எ.கா : அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

விளக்கம்: அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

ஆ) உவமையணி: உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு வெளிப்படையாகவும் வந்தால் உவமை அணியாகும்.

சான்று : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று.

40.

மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்கள் எழுதியிருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

41.

பழமொழி வாழ்க்கை நிகழ்வோடு எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

42. வெண்பாவின் பொது இலக்கணம்

  • i) இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்.
  • ii) ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.
  • iii) ஈரசைச்சீர்களில் மாச்சீரும் விளச்சீரும், மூவசைச்சீரில் காய்ச்சீரும் வரும்.
  • iv) ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
  • v) செப்பலோசைப் பெற்று வரும்.

43. மொழிபெயர்ப்பு

அ) கற்றல் என்பது எல்லா இடங்களிலும் அதன் உரிமையாளரைப் பின்தொடரும் ஒரு பொக்கிசம்.

ஆ) புதிய மொழி என்பது புதிய வாழ்க்கை போன்றது.

இ) பிறர் உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அவர்மொழியில் பேசு.

ஈ) மொழிகளின் அறிவு ஞானத்தின் திறவுகோல் / வழித்தடம்.

பகுதி – IV

44. நெய்தல் நிலக் காட்சி

  1. மழை பெய்தல்: பருவம் தப்பாது பெய்யும் மேகம் புதுமழை பெய்ததனால் உலகம் குளிர்ந்தது.
  2. புலம் பெயர்தல்: கோவலர் வெள்ளத்தை வெறுத்தனர். ஆடு மாடுகளை மேட்டிற்கு ஓட்டிச் சென்றனர். அவர்களின் காந்தள் மாலை மழைநீர் பட்டுக் கசங்கியது.
  3. குளிர் காய்தல்: கோவலர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். கைகளைச் சூடாக்கிக் கன்னத்தில் வைத்தனர். இருந்தும் தாடைகள் பறை அடிப்பது போல் நடுங்கின.
  4. குன்றும் குளிரச் செய்யும் குளிர்:
    • விலங்குகள் மேய்ச்சலை மறந்தன.
    • குரங்குகள் நடுங்கின.
    • பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
    • மாடுகள் கன்றுகளைத் தவிர்த்தன.
    • மலையே குளிரும்படியாகக் குளிர் இருந்தது.

44. (ஆ) செய்ந்நன்றி அறிதல்

  • i) தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
  • ii) உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும்.
  • iii) பயனை ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.
  • iv) ஒருவர் தினையளவு உதவி செய்தாலும், பயன் தெரிந்தவர் அதனை பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
  • v) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடவேண்டும்.
  • vi) எந்த அறத்தை அழித்தவருக்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஒருவர் செய்த உதவியை மறந்துவிட்டால் அவருக்கு உய்வே இல்லை.

பகுதி – V

47. மனப்பாடப் பகுதி

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!

திருக்குறள்

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. – குறள் வெண்பா