Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

3rd Maths: Term 3 Unit 5 Money | Addition and Subtraction of Money Exercise

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 5

பணம்

பயிற்சி (பணத்தின் கூட்டலும் கழித்தலும்)

கேள்வி 1

செங்கோதை புத்தகப் பையை ₹.210.30 க்கும் ஒரு விளையாட்டுக் காலணியை ₹.260.20 க்கு வாங்குகிறார் அவர் கடைக்காரரிடம் 500 ரூபாயைக் கொடுத்தார் எனில் கடைக்காரர் அவருக்குத் தர வேண்டிய மீதித் தொகை எவ்வளவு?

தீர்வு

பணத்தைக் கூட்டுதல்

புத்தகப் பையின் விலை = ரூ 210.30

காலணியின் விலை = ரூ 260.20

மொத்த விலை = ரூ 470.50

பணத்தைக் கழித்தல்

செங்கோதை கடைக்காரரிடம் கொடுத்த தொகை = ரூ 500.00

மொத்த விலை = ரூ 470.50

கடைக்காரர் தர வேண்டிய தொகை = ரூ 29.50

கேள்வி 2

குமரனின் தந்தை அவன் மாமாவிடமிருந்து ₹200.00 க்குச் சில்லறை வாங்கி வரச் சொன்னார். அவனுடைய மாமா ஒரு நூறு ரூபாய் தாளையும் ஒரு ஐம்பது ரூபாய் தாளையும் அவனிடம் கொடுத்தார். எனில் மாமா அவனுக்கு மேலும் தர வேண்டிய தொகையானது எவ்வளவு?

தீர்வு

பணத்தைக் கூட்டுதல்

குமரன் மாமா கொடுத்தது = 100.00

= 50.00

மொத்த தொகை = 150.00

பணத்தைக் கழித்தல்

குமரனின் தந்தை கொடுத்த தொகை = 200.00

குமரனின் மாமா கொடுத்த தொகை = 150.00

குமரனின் மாமா தர வேண்டிய மீதித் தொகை = 50.00