பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ்சிலம்பே ! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
2. இப்பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பின் பெயர் யாது?
3. 'தென்னன் மகள்' என்பதன் பொருள் யாது?
4. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை குறிப்பிடுக.
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்பதறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்!
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
1. இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
2. இப்பாடலின் தலைப்பு யாது?
3. மானிடத்துவம் என்று எதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
4. பாடலில் அமைந்துள்ள அடி மோனைச் சொற்களை எழுதுக.
மேகங்கள் ரொம்ப அற்புதமானவை
தண்ணீரும் இல்லாமல்
தன்னுயிரும் போகாமல்
வான் வெளியில்
மிதந்து செல்லும் போது
மேகங்கள் மிகவும் மென்மையானவை.
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்ற கவிதைத் தலைப்பு
2. இப்பாடலின் ஆசிரியர் யார்?
3. இப்பாடலின் அடிமோனைச் சொற்கள்
4. தண்ணீரும் தன்னுயிரும் - இலக்கணக்குறிப்பு
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
2. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
3. 'முகமன்' - சொல்லின் பொருள்
4. இப்பாடலில் பயின்றுவரும் அடியெதுகைகளை எழுதுக.
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?
2. இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது?
3. அள்ளல் என்பதன் பொருள்
4. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்.
1. 'பெரும்பாண்' என்பதன் பொருள்
2. பாடலில் இடம்பெறும் அடிஎதுகைகள்
3. 'வழு' என்பதன் பொருள்
4. இப்பாடலின் ஆசிரியர்
விரிந்தன கொம்பில் கொய்த
வீயென உள்ளம் வாட
எரிந்தன நுதிநச்சு அம்புண்டு
இரும்புழைப் புண்போல் நோகப்
பிரிந்தன புள்ளின் கானில்
பெரிதழுது இரங்கித் தேம்பச்
சரிந்தன அசும்பில் செல்லும்
தடவிலா தனித்தேன் அந்தோ!
1. இப்பாடல் இடம்பெற்ற நூல்
2. இப்பாடலில் இடம்பெறும் அடியெதுகைகள்
3. "அசும்பு" என்பதன் பொருள்
4. "கொம்பு" என்பதன் பொருள்
செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்.......
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
2. 'செந்தீ' என்பதன் இலக்கணக் குறிப்பு
3. 'தண்பெயல்' என்பதன் பொருள்
4. இப்பாடலின் ஆசிரியர்
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
1. 'ஊழ் ஊழ்' என்பதன் இலக்கணக்குறிப்பு
2. இப்பாடலின் ஆசிரியர்
3. பாடலில் உணர்த்தப்படும் கருத்து
4. விசும்பு, இசை, ஊழி - பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
No comments:
Post a Comment