விடியும் வேளை: கேள்விகள் மற்றும் பதில்கள்
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8
வாங்க பேசலாம்
வண்டுகள் ரீங்காரமிட்டு பறந்தன. இளந்தென்றல் வீசிக்கொண்டிருந்தன. மக்களும் மாக்களும் தம் இருப்பிடங்களை நோக்கி நகர ஆரம்பித்தன. நிலவும் கண்ணில் பட தொடங்கியது. ஊரே அமைதி காத்தது. மலைகள் கரு நிறத்தில் தோன்ற ஆரம்பித்தது. மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள் தென்றலின் போக்கிற்கு ஏற்ப நடனமாடின. இப்படியாக இனிய இரவும் வந்து சேர்ந்தது.
சிந்திக்கலாமா!
நம் முன்னோர்கள் பசுமையான கிராமத்தில் வாழ்ந்ததனால், இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர். பருவமாற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தனர். சுத்தமான காற்றையே சுவாசித்தனர். இயற்கையை மிகவும் நேசித்தனர். இயற்கையும் அவர்களை நேசித்தது. கூட்டு வாழ்வு வாழ்ந்தனர். இல்லங்களிலும், ஊர்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவின. சத்தான உணவுகளையே உண்டனர். இயற்கை உரங்களையே பயன்படுத்தினர். மரங்களையும் செடி கொடிகளையும் அதிகம் வளர்த்தனர். இத்தகைய கிராமத்தில் வாழவே நான் விரும்புகிறேன்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
வினாக்களுக்கு விடையளி
எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
- சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
- வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்.
- கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென.
- வரகரிசிக்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.
உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
சிறு தானிய உணவுகளே நம் உடல்நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு, பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்த பிறகுதான், அடுத்தவேளை உணவை நாம் உண்ண வேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள், "பசித்துப் புசி" என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளை உண்ணத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
சிறு தானிய உணவுகளை உண்போம்!
வளமான வாழ்வைப் பெறுவோம்!
கலையும் கைவண்ணமும்
தேவையான பொருட்கள்: வெள்ளை வரைபட அட்டை, சிறிதளவு மணல், பசை, கரிக்கோல், வண்ணப் பொடி.
செய்யும் முறை:
வெள்ளை வரைபட அட்டையில் உனக்குப் பிடித்த படத்தினை வரைந்து கொள். வரைந்த பகுதிக்குள் மட்டும் பசையினைத் தடவு. தடவிய பசை காய்வதற்குள் மணலைத் தூவு. நன்றாகக் காய்ந்த பின் அட்டையைக் கவிழ்த்துவிட்டு, பிறகு திருப்பினால் அழகிய மணல் ஓவியம் கிடைக்கும். தேவையான இடத்தில் வண்ணப் பொடிகளைத் தூவி மேலும் அழகுப்படுத்து. இதனை வாழ்த்து அட்டையாகவும் பயன்படுத்தலாம்.
அறிந்து கொள்வோம்
● நேரிணை: இரண்டு சொற்கள் ஒரே கருத்தினை வலுப்படுத்துவது நேரிணை.
எ.கா: சீரும் சிறப்புமாக, ஓங்கி உயர்ந்த.
● எதிரிணை: இரண்டு எதிர்ச்சொற்கள் எதிரெதிர் கருத்தினைவலுப்படுத்துவது எதிரிணை.
எ.கா: இரவு பகல், மேடு பள்ளம்.
செயல் திட்டம்
● சிறுதானியங்கள், நவதானியங்கள் ஆகியவற்றைச் சேகரித்து, ஒட்டி அதன் பெயரை எழுதிப் படத்தொகுப்பு தயார் செய்க.