2வது கணக்கு : பருவம்-3 அலகு 6 : தகவல் செயலாக்கம்

படிநிலைகளும் வழிமுறைகளும்

கலைச்சொற்கள் : படிகளை வகுத்தல், கட்டளைகள்


படிநிலைகளும் வழிமுறைகளும்

கற்றல்

விளையாட்டு நேரம்

கலைச்சொற்கள் : படிகளை வகுத்தல், கட்டளைகள்

குழலி தாயம் விளையாட்டை விளையாடும் படிகளை விளக்கினாள்.

1. இரண்டு முதல் நான்கு போட்டியாளர் இவ்விளையாட்டை பகடையை உருட்டி விளையாடலாம்.

2. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களது குழியில் நான்கு வில்லைகள் இருக்கும். போட்டியின் நோக்கம் நான்கு வில்லைகளையும் பழத்திற்கு எடுத்துச்செல்வதாகும். இதை முதலில் செய்து முடிக்கும் போட்டியாளர் வெற்றியாளர் ஆவார்.

3. போட்டியாளர்கள் பகடையில் தாயம் விழுந்தால்தான் தனது குழியிலிருந்து ஆரம்பப்புள்ளிக்கு ஒரு வில்லையை எடுத்துச் சென்று அங்கிருந்து அவ்வில்லையை நகர்த்திச் செல்ல முடியும்.

4. ஒரு போட்டியாளர் எதிர்ப்போட்டியாளரின் வில்லை இருக்கும் கட்டத்தை அடைந்தால் அவ்வில்லையை மீண்டும் குழிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

5. எதிர்ப் போட்டியாளர், தாயம் விழுந்தால்தான் அவ்வில்லையை மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்து நகர்த்திக் கொண்டு வர இயலும்.

பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளைச் சரியான எண்களைக் கொண்டு பொருத்துக.

கண்கள் மற்றும் மூக்கு வரைதல் (3)

ஒரு வட்டம் வரைதல் (1)

பூனைக்கான வண்ணம் தீட்டுதல் (7)

கழுத்து உடல் இரண்டு கால்கள் வரைதல் (5)

வாய் மற்றும் மீசை வரைதல் (4)

இரண்டு காதுகள் வரைதல் (2)

வால் வரைதல் (6)

மகிழ்ச்சி நேரம்

படிகளைக் கட்டளைகளைப் பின்பற்றிக் காகிதக் கப்பல் செய்வோம்.

* ஒரு சதுர காகிதத்தை எடுக்கவும்.

* அதனைப் பாதியாக மையத்தில் மடிக்கவும்.

* காகிதத்தைக் காற்பகுதியாக்க இரண்டாம் முறை மடிக்கவும்.

* நான்கில் ஒரு மூலைவிட்டத்தின் வழியாக / குறுக்கில் மடிக்கவும்.

* மற்ற மூன்று பக்கங்களை ஒன்றாகச் சேர்த்து எதிர்த் திசையில் மடிக்கவும்.

* மடிப்புகளைத் திறக்கவும். இப்போது காகிதக் கப்பல் தயார்.