2nd Maths Term 1 Unit 6: Information Processing - Collection of Data

2nd Maths Term 1 Unit 6: Information Processing - Collection of Data

2வது கணக்கு : பருவம்-1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

தகவல்களைத் திரட்டுதல்

பயணம் செய்வோம்

அளவீடுகளின் மூலமாகத் தகவல்களைத் திரட்டுதல்

அபிஷேக் தன் தந்தையுடன் பொம்மைக் கடைக்குச் செல்கிறான். கடையில் உள்ள பொம்மைகளைச் சரியாக எண்ணிக் கூறினால் பொம்மை வாங்கித் தருவதாகத் தந்தை கூறுகிறார். அவனுக்குத் தங்களால் உதவ முடியுமா?

கலைச் சொல்: தகவல்

பொம்மைக் கடை

விடையைக் கண்டுபிடிக்க அபிஷேக் பொம்மைகளைக் கீழ்க்கண்டவாறு குழுக்களாகப் பிரித்து வரிசைப்படுத்தினான்.

பொம்மைகளின் வகைகள்

விடை கூறுக.

1. எந்தப் பொம்மை வகை அதிகமான எண்ணிக்கையில் உள்ளது?

கரடி பொம்மைகளின் எண்ணிக்கை 10 ஆகும்

2. கடையில் உள்ள பொம்மைகளில் எது குறைவாக உள்ளது?

கடையில் வாத்து பொம்மைதான் குறைவு

3. லாரி மற்றும் ராக்கெட் பொம்மைகளைத் தங்களால் ஒரே தட்டில் வைக்க முடியுமா? விவரி?

இல்லை, அவைகள் இரண்டும் அதனுடைய உயரத்தில் வேறுபடுகிறது.

கற்றல்

கொடுக்கப்பட்டுள்ள மரங்களின் உயரங்களை உற்றுநோக்கி விடையளிக்க.

மரங்களின் உயரங்கள்

1. கீழ்க்கண்ட மரங்களின் உயரங்கள் (மீட்டரில்) என்ன?

மரங்களின் பெயர்கள் மற்றும் உயரங்கள்

2. உயரமான மரத்தின் பெயர் என்ன?

பனை மரம்

3. குட்டையான மரத்தின் பெயர் என்ன?

வாழை மரம்

4. 4 மீட்டர் உயரமுள்ள மரத்தின் பெயர் என்ன?

மாம்பழம்

5. 4 மீட்டர் மற்றும் 6 மீட்டர் உயரத்திற்கு இடைப்பட்ட உயரமுள்ள மரம் எது?

தென்னை மரம்

செய்து பார்

மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்துள்ளனர்.

விளையாடும் மாணவர்கள்

மேலே உள்ள படத்தைக் கவனமாக உற்று நோக்கிக் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளி.

1. எத்தனை மாணவர்கள் நடைப்பந்தயம் விளையாட்டை விளையாடுகின்றனர்?

2 ஆண் 4 பெண்

2. எத்தனை மாணவர்கள் தவளை ஓட்டம் விளையாடுகின்றனர்?

4 ஆண் 4 பெண்

3. எத்தனை மாணவர்கள் ஓட்டப்பந்தயம் விளையாடுகின்றனர்?

6 ஆண் 7 பெண்

4. எந்த விளையாட்டு அதிக மாணவர்களால் விளையாடப்படுகின்றது?

விடை : ஓட்டப்பந்தயம்

5. நடைப்பந்தயம் மற்றும் தவளை ஓட்டம் விளையாட்டில் உள்ள பெண்களின் எண்ணிக்கை

விடை : 4

6. எந்த விளையாட்டு குறைந்த மாணவர்களால் விளையாடப்படுகிறது?

விடை : நடைப் பந்தயம்

7. நடைப் பந்தயம் மற்றும் ஓட்டப் பந்தயம் ஆகிய இரண்டிலும் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

விடை : 13 மாணவர்கள் (மொத்தம் 19 பங்கேற்பாளர்கள்)