6th Science 2nd Mid Term Exam Solutions 2024
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு – நவம்பர்-2024
6 - ஆம் வகுப்பு - அறிவியல்
காலம்: 1.00 மணி | மதிப்பெண்கள் : 30
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5 X 1 = 5)
1.30°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை...
2.வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்...
3.கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
4.ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு...
5.கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல ?
II. கோடிட்ட இடத்தை நிரப்புக: (5 X 1 = 5)
6.வெப்பநிலையின் SI அலகு __________.
7.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு __________ ஆகும்.
8.முட்டையை வேகவைக்கும் போது __________ மாற்றம் நிகழ்கிறது.
9.__________ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.
10.நெருப்புக் கோழியின் முட்டை __________ தனி செல் ஆகும்.
III. பொருத்துக: (5 X 1 = 5)
11.குறியீடுகளை அதன் விளக்கத்துடன் பொருத்துக.
Solution
IV. பின்வரும் வினாக்களில் ஏதேனும் 5 வினாகளுக்கு மட்டும் விடையளிக்கவும். (5 X 2 = 10)
12.வெப்பநிலை என்றால் என்ன?
13.வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
வெப்பநிலை: இது ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் அளவீடு. இதன் SI அலகு கெல்வின் (K).
14.பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக. (காவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி)
காரணம்: காவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு ஆகியவை ஒரு எளிய மின்சுற்றின் கூறுகள். ஆனால், மின்னியற்றி மின்சாரத்தை உருவாக்கும் ஒரு சாதனம்.
15.பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக. (மாற்றும் சாதனம் மின்னாற்றலாக ஆற்றலை மின்கலன் வேதி ஆகும்)
16.மெதுவான மாற்றத்தை வரையறு.
17.காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
18.அளவின் அடிப்படையில் சரியான முறையில் வரிசைப்படுத்துக.
(அ) பாக்டீரியா, ரோஜாச் செடி, பசு, யானை, மாமரம்.
(ஆ) பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.
19.ஒப்புமை தருக.
(அ) புரோகேரியோட் : பாக்டீரியா :: யுகேரியோட் : அமீபா
(ஆ) உணவு உற்பத்தியாளர் : பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : மைட்டோகாண்டிரியா
V. பின்வரும் வினாக்களில் ஏதேனும் 1 வினாவிற்கு மட்டும் விடையளிக்கவும். (1 X 5 = 5)
20.வெப்ப விரிவடைதலை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
வெப்ப விரிவடைதல்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அதன் பரிமாணத்தில் (நீளம், பரப்பு, பருமன்) ஏற்படும் அதிகரிப்பு வெப்ப விரிவடைதல் எனப்படும்.
காரணம்: பொருளை வெப்பப்படுத்தும்போது, அதன் துகள்கள் ஆற்றலைப் பெற்று வேகமாக அதிர்வடைவதால், துகள்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து, பொருள் விரிவடைகிறது.
உதாரணங்கள்:
1. ரயில் தண்டவாளங்கள்: கோடை காலத்தில் வெப்பத்தால் விரிவடைவதற்கு வசதியாக, தண்டவாளங்களுக்கு இடையே சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும்.
2. மின்சாரக் கம்பிகள்: மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின்சாரக் கம்பிகள் கோடை காலத்தில் வெப்ப விரிவடைவதால் தொய்வாகக் காணப்படும்.
3. வெப்பநிலைமானி: இதில் உள்ள திரவம் (பாதரசம்/ஆல்கஹால்) வெப்பத்தால் விரிவடைந்து வெப்பநிலையைக் காட்டுகிறது.
21.உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
(அ) மெதுவான மாற்றம் / வேகமான மாற்றம்
மெதுவான மாற்றம்: விதை செடியாக வளர்தல்.
வேகமான மாற்றம்: பட்டாசு வெடித்தல்.
(ஆ) மீள் மாற்றம் / மீளா மாற்றம்
மீள் மாற்றம்: பனிக்கட்டி நீராக உருகுதல்.
மீளா மாற்றம்: பால் தயிராக மாறுதல்.
(இ) உணவு கெட்டுப்போதல் __________ மாற்றம் (விரும்பத்தக்க / விரும்பத்தகாத).
விடை: விரும்பத்தகாத மாற்றம்.
22.பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் ஐந்து பாகங்களைக் குறி.
தாவர செல்லின் பாகங்கள்:
- செல் சுவர்: செல்லின் வெளிப்புற அடுக்கு.
- உட்கரு: செல்லின் மையத்தில் உள்ள பகுதி.
- பசுங்கணிகம்: ஒளிச்சேர்க்கைக்கு உதவும் பச்சை நிற உறுப்பு.
- மைட்டோகாண்டிரியா: செல்லின் ஆற்றல் மையம்.
- கோல்கை உடலங்கள்: புரதங்களைச் சேமிக்கும் பகுதி.
- எண்டோபிளாச வலைப்பின்னல்: செல்லுக்குள் பொருட்களைக் கடத்தும் பாதை.