7th Social - Term 1 Exam 2024 - Original Question Paper | Krishnagiri District
வகுப்பு: 7 ஆம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
தேர்வு: முதல் பருவ தொகுத்தறி தேர்வு – 2024
மதிப்பெண்கள்: 60
பகுதி - I : சரியான விடையைத் தேர்வு செய்க. (5 X 1 = 5)
-
______ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது?
அ) சோழர் ஆ) பாண்டியர் இ) ராஜபுத்திரர் ஈ) விஜய நகர அரசர்கள்
விடை: அ) சோழர் -
சோழர் கட்டடக் கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ) கண்ணாயிரம் ஆ) உறையூர் இ) காஞ்சிபுரம் ஈ) தஞ்சாவூர்
விடை: ஈ) தஞ்சாவூர் -
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம் ______.
அ) அமெரிக்கா ஆ) இந்தியா இ) சீனா ஈ) பிரேசில்
விடை: இ) சீனா -
உலக மக்கள் தொகை தினம் ______ ஆகும்.
அ) செப்டம்பர் 1 ஆ) ஜூன் 17 இ) ஜூலை 11 ஈ) டிசம்பர் 2
விடை: இ) ஜூலை 11 -
இந்தியாவில் காணப்படும் கட்சிமுறை ______.
அ) ஒரு கட்சி முறை ஆ) இருகட்சிமுறை இ) பல கட்சி முறை ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை: இ) பல கட்சி முறை
பகுதி - II : கோடிட்ட இடத்தை நிரப்புக. (5 X 1 = 5)
- காந்தர்யா கோவில் ______ல் அமைந்துள்ளது.
விடை: மத்தியப் பிரதேசம்
- புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ______ ஆதரித்தார்.
விடை: பால்பன் / அலாவுதீன் கில்ஜி
- நிலநடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் ______.
விடை: நில அதிர்வுமானி (Seismograph)
- தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ______ உரிமை ஆகும்.
விடை: அரசியல்
- ______ என்பது நிலையான அளிப்பினை உடையது.
விடை: நிலம்
பகுதி - III : பொருத்துக. (5 X 1 = 5)
- 11. மதுரை- பாண்டியர்களின் தலைநகர்
- 12. அலாவுதீன்- காராவின் ஆளுநர்
- 13. தென் இந்தியா- குழுமிய குடியிருப்பு
- 14. பெரும்பான்மைக் கட்சி- அரசாங்கத்தை அமைப்பது
- 15. மனித மூலதனம்- கல்வி, உடல் நலம்
பகுதி - IV : பின்வரும் வினாக்களுக்கு விடையளி. (4 X 1 = 4)
சரியா, தவறா?
- சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை: சரி
- குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.
விடை: தவறு (போலோ விளையாடும் போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்).
சரியானதை தேர்வு செய்யவும்.
- கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று சரி காரணம் தவறுவிடை: ஈ) கூற்று சரி காரணம் தவறு
தவறான இணையைக் கண்டறியவும்.
-
அ) மதுரா விஜயம் - கங்கா தேவி
ஆ) அபுல் பாசல் - அயினி அக்பரி
இ) இபன் பதூதா - தாகுயூக் - இ - ஹிந்த்
ஈ) அமுக்தமால்யதா - கிருஷ்ணதேவராயர்விடை: இ) இபன் பதூதா - தாகுயூக் - இ - ஹிந்த் (தாகுயூக் - இ - ஹிந்த் எழுதியவர் அல்-பிருனி)
பகுதி - V : எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி. (8 X 2 = 16)
- வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
முதல்நிலைச் சான்றுகள் மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகள்.
- தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
1. அபூபக்கர், 2. உமர்.
- பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த கற்கள், மிளகு, எண்ணெய், நெல், உப்பு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
- பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
பிரோஷாபாத், ஜான்பூர் போன்ற புதிய நகரங்களை உருவாக்கினார். விவசாய மேம்பாட்டிற்காக பல கால்வாய்களை வெட்டினார். தகுதியற்ற வரிகளை ரத்து செய்தார்.
- நிலநடுக்கம் வரையறு.
புவியின் மேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் திடீர் நடுக்கம் அல்லது அதிர்வே நிலநடுக்கம் எனப்படும்.
- அரித்தல் வரையறு.
புவிப்பரப்பின் மீதுள்ள பாறைகள் சிதைவுற்று அதன் துகள்கள் நீர், காற்று, பனியாறு போன்ற காரணிகளால் அரிக்கப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடத்தப்படுவது அரித்தல் எனப்படும்.
- இனங்களின் வகைகள் யாவை?
காகசாய்டு (வெள்ளை இனம்), நீக்ராய்டு (கருப்பு இனம்), மங்கோலாய்டு (மஞ்சள் இனம்), ஆஸ்ட்ரலாய்டு.
- சமத்துவம் என்றால் என்ன?
சாதி, மதம், இனம், பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துவதே சமத்துவம் ஆகும்.
- மூன்று வகை கட்சிமுறைகளைக் குறிப்பிடுக.
ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை, பல கட்சி முறை.
- பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
வடிவப் பயன்பாடு, இடப் பயன்பாடு, காலப் பயன்பாடு.
பகுதி - VI : வேறுபடுத்துக. (எவையேனும் இரண்டு) (2 X 2 = 4)
30. செயல்படும் எரிமலை மற்றும் உறங்கும் எரிமலை.
| செயல்படும் எரிமலை | உறங்கும் எரிமலை |
|---|---|
| தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும். | வெகு காலமாக எரிமலைச் செய்கைகள் ஏதுமின்றி காணப்படும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் செயல்படலாம். |
| எ.கா: மத்திய தரைக்கடலில் உள்ள ஸ்ட்ராம்போலி. | எ.கா: ஜப்பானில் உள்ள ஃபியூஜியாமா. |
31. கண்டப் பணியாறு மற்றும் மலைப் பணியாறு.
| கண்டப் பணியாறு | மலைப் பணியாறு |
|---|---|
| கண்டப் பகுதியில் பரந்து காணப்படும் பனிப்படலம் கண்டப் பணியாறு ஆகும். | மலையின் சரிவுகளில் பள்ளத்தாக்கின் வழியே நகரும் பணியாறு மலைப் பணியாறு ஆகும். |
| எ.கா: அண்டார்டிகா, கிரீன்லாந்து. | எ.கா: இமயமலை, ஆல்ப்ஸ். |
32. மொழி மற்றும் மதம்.
| மொழி | மதம் |
|---|---|
| மொழி என்பது மக்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு கருவியாகும். | மதம் என்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் ஒழுக்க நெறிகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். |
| இது ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய பகுதியாகும். | இது தனிநபரின் ஆன்மீக வாழ்க்கையுடன் தொடர்புடையது. |
பகுதி - VII : விரிவான விடையளி. (3 X 5 = 15)
- காரணம் கூறு: புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
புவியின் உட்புறம் செல்லச் செல்ல வெப்பமும் அழுத்தமும் மிக அதிகமாக அதிகரிக்கிறது. புவியின் மையப்பகுதியில் வெப்பநிலை சுமார் 6000°C வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக, எந்த ஒரு கருவியாலும் புவியின் உட்புறத்தைத் துளைத்துச் சென்று மாதிரிகளை சேகரிப்பது என்பது இயலாத காரியமாகும். எனவே, நிலநடுக்க அலைகளின் ஆய்வு போன்ற மறைமுக ஆதாரங்கள் மூலமே புவியின் உட்புறம் பற்றிய தகவல்களை நாம் அறிகிறோம்.
- சிந்துவை அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்.)
- சிந்து மக்கள் இஸ்லாமை தழுவினர், மேலும் இஸ்லாமிய சமூக அமைப்பு அப்பகுதியில் நிறுவப்பட்டது.
- அரேபிய அறிஞர்கள் இந்தியாவிற்கு வந்து இந்திய இலக்கியம், வானியல், தத்துவம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கற்றனர்.
- இந்திய எண்களான பூஜ்யம் உட்பட தசம முறையை அவர்கள் கற்றுக் கொண்டு, அதை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றனர்.
- சதுரங்கம், மருத்துவ அறிவு போன்றவை அரேபியர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
- பாக்தாத் போன்ற நகரங்களில் இந்திய மருத்துவர்களும், அறிஞர்களும் தங்கி தங்கள் அறிவைப் பரப்பினர். இது கலாச்சார மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது.
- கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
- நிலத்தோற்றம்: சமவெளிப் பகுதிகளில் வளமான மண் இருப்பதால் மக்கள் விவசாயம் செய்ய எளிதாக உள்ளது. எனவே, அங்கு குழுமிய குடியிருப்புகள் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில் சிதறிய குடியிருப்புகள் காணப்படுகின்றன.
- நீர்நிலைகள்: ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் அமைகின்றன. ஏனெனில் நீர் விவசாயத்திற்கும், அன்றாடத் தேவைகளுக்கும் அவசியமாகும்.
- மண் வளம்: வளமான வண்டல் மண் உள்ள பகுதிகளில் விவசாயம் செழிப்பதால் மக்கள் அடர்த்தியாக வாழ்கின்றனர்.
- சமூகக் காரணிகள்: பாதுகாப்பு, மத நம்பிக்கை, மற்றும் கலாச்சார ஒற்றுமை போன்ற காரணங்களுக்காக மக்கள் ஒன்றிணைந்து வாழ விரும்புகின்றனர்.
- பொருளாதார நிலை: வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பொறுத்து குடியிருப்புகளின் அமைப்பு மாறுபடும்.
- அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
- தேர்தலில் போட்டியிடுதல்: அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி, வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைக்க முயல்கின்றன.
- கொள்கைகளை உருவாக்குதல்: நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் உருவாக்கி மக்களிடம் முன்வைக்கின்றன.
- அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் இயக்குதல்: தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி அரசாங்கத்தை அமைத்து, தனது கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை நிர்வகிக்கிறது.
- எதிர்க்கட்சியாக செயல்படுதல்: தேர்தலில் வெற்றி பெறாத கட்சிகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டு, ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி, மக்கள் கருத்தை பிரதிபலிக்கின்றன.
பகுதி - VIII : இந்திய வரைபடத்தில் குறிக்கவும். (5 X 1 = 5)
- டெல்லி
- நாளந்தா (பீகார்)
- மும்பை (மகாராஷ்டிரா)
- மெட்ராஸ் (சென்னை, தமிழ்நாடு)
- மதுரை (தமிழ்நாடு)