OMTEX AD 2

Thiruvilaiyadal Puranam: Idaikkadan Pinakku Theertha Padalam - 5 Mark Question

Thiruvilaiyadal Puranam: Idaikkadan Pinakku Theertha Padalam - 5 Mark Question

5 மதிப்பெண் வினா: திருவிளையாடல் புராணம் - இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்


இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்கு செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

திருவிளையாடல் புராணம்

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

  1. கபிலரின் நண்பரான புலவர் இடைக்காடனார், கல்வியறிவில் மிக்க குசேல பாண்டியனின் அவையில் கவிதை படித்தார்.
  2. அக்கவிதையைச் சிறிதேனும் சுவைத்துத் தலையை அசைக்காமல் புலமையை அவமதித்ததாக, திருஆலவாய் இறைவனிடம் முறையிட்டார்.
  3. இறைவனிடம், "பாண்டியன் என்னைக் இகழவில்லை. சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்" என்றான்.
  4. இறைவன், இடைக்காடனாருக்கும் கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்; திருக்கோவிலை விட்டு வெளியேறி வைகை ஆற்றின் தென்புறம் கோவில் கொண்டார்.
  5. "இறைவனே, எதனால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டது? யானறியேன்" என்று குசேல பாண்டியன் வேண்டினான்.
  6. "இடைக்காடனார் பாடலை இகழ்ந்தது குற்றம்; வேறு குற்றமில்லை. இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்" என்றார் இறைவன்.
  7. இறைவனின் சொல் கேட்ட பாண்டியன், "சிறியேன், யான் செய்த குற்றம் பொறுக்க வேண்டும்" என்று வேண்டிப் போற்றினான்.
  8. பாண்டியன், அழகுமிக்க அரண்மனையில் புலவர்கள் சூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.
  9. "புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்று பணிந்து வேண்டினான்.
  10. நுண்ணிய கேள்வியறிவுடைய புலவர்கள், " மன்னா, நீ கூறிய அமிழ்தம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது" என்றனர்.

"பாண்டியன் தமிழ்க்கவிதையை அவமதித்தான். அது தமிழின் வடிவான இறைவனை அவமதித்ததற்குச் சமம்" என்று இடைக்காடனார் கூறுவது நயமிக்கது.

தமிழ்ப் புலவரை மகிழ்விக்க, இறைவன் தன் இருப்பிடத்தை மாற்றியது சுவை தருகிறது. மன்னன் தன் தவறுக்கு வருந்தி, புலவர்களைப் போற்றியமை வரலாற்றுச் சிறப்புமிக்கதது.

"இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல்லொழுக்கத்தில் குறைந்தனரோ? தானமும் தவமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியிலிருந்து தவறினவோ? நான் அறியேன்" என்ற மன்னனின் வேண்டுதல் அவனது செங்கோல் ஆட்சியை வெளிப்படுத்துகிறது.

OMTEX CLASSES AD