பிறமொழி கலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

Question 1: பிறமொழி கலப்பின்றித் தனித்தமிழில் இரண்டு மணித்துளிகள் வகுப்பறையில் பேசுக. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசுதல்:

Answer:

அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

என் உரையைக் கேட்க ஆவலுடன் அமர்ந்திருக்கும் எங்கள் தமிழ் ஐயா அவர்களே! என் உடன் பயிலும் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! உங்கள் முன் தனித்தமிழில் உரையாடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

நான் உரையாற்ற எடுத்துக்கொண்ட தலைப்பே, “தனித்தமிழ்” என்பதுதான்.

நாம், நம் அன்றாட வாழ்வில் தமிழ்மொழியைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருக்கிறோம். பிறமொழிச்சொற்களைத் தமிழ்மொழி போலவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்பது, பள்ளிக்கு வருவது, கடைக்குச் செல்வது என அனைத்து நிலைகளிலும் நம்மை அறியாமலே பிறமொழிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்று கவிஞர் வருந்தியது போலவே எனக்கும் வருத்தமாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே! அனைத்துத் துறை சார்ந்த சொற்கள், கலைச்சொற்கள் மட்டும் அல்ல அனைத்துத் தரவுகளும் நம் அமுதத் தமிழில் வலம்வந்து கொண்டிருக்கிறது.

கணினியைப் பயன்படுத்தும் நாம்… எப்படித் தமிழைப் பயன்படுத்துவது என தயங்காதீர். அனைத்து கணினி சார்ந்த ஆங்கில வார்த்தைக்கும் செயலி, விரலி, சுட்டி, உலவி… என தமிழில் சொற்கள் உண்டு.

எனவே, தனித்தமிழ் பயன்படுத்துவோம்! நம் கன்னித்தமிழை வளர்ப்போம்!!

Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View