நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.
திருமதி. த.ஆனந்தலட்சுமி
மெல்ல கற்போருக்கான வினா விடை வங்கி
வகுப்பு : 12
பாடம் : தமிழ்
இவ்வினா வங்கியில் உள்ள வினா விடைகள் மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 70% மதிப்பெண்களை பெற்று தரும் என்பது உறுதி
ஒருமதிப்பெண் வினாக்கள் (செய்யுள், உரைநடை, துணைப்பாடம்) (6)
-
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
இ) தொல்காப்பியம்
-
"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்.
-
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்”! - இவ்வடியில் பயின்று வந்துள்ள தொடைநயம்
இ) அடிஎதுகை, சீர் மோனை
-
கருத்து: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு,
கருத்து : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
இ) இரண்டு கருத்தும் சரி
-
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
இ) மழைத்துளிகள்
-
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
ஆ) மணல் அள்ளுதல்
-
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
-
உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது
அ. கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது.
-
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.
ஆ) திருமணமும் குடும்பமும்
-
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
ஆ. அஞ்ஞாடி - 2. பூமணி
-
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது?
ஈ) இவை அனைத்தும் (வக்கிரம், அவமானம், வஞ்சனை)
-
“உவா உறவந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" - யார் யார்?
இ) இராமன், சுக்ரீவன்
-
“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
ஈ) தந்தைவழிச் சமூகமுறை
-
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க. (பக்க எண் 77)
இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்.
-
கடலின் பெரியது எது?
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர்செய்த உதவி
-
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
அ) இருவேறு உலகத்து இயற்கை: திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.
-
கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க. (பக்க எண் 77)
செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?
-
வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
அ. செய்யாமல் செய்த உதவி
-
“காவினெம் கலனே: சுருக்கினெம் கலப்பை” - இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள்
இ) இசைக்கருவி
-
சுரதா நடத்திய கவிதை இதழ்...........
ஆ) காவியம்
-
“விண்வேறு: விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” - தொடர் தரும் முழுமையான பொருள்.
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
-
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
இ) கடுக்காய்
-
‘குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?
ஆ) கணிதம்
-
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம் காரணம்-
-
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
ஈ) கூற்று சரி, காரணம் சரி
-
‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும் பண்பு
ஆ) எதிர்மறைப் பண்பு
-
‘விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
இ) நாய்
-
ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம் : மகா மௌனம் - அடிகள் புலப்படுத்துவது
ஈ) புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது
-
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்...
தொடர்களில் வெளிப்படும் செய்திகள்
- மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்
- ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
ஈ) கூற்று 1சரி 2 சரி
-
வேறுபட்டதைக் குறிப்பிடுக.
இ) காட்சி மறைவு
-
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க. (பக்கம் .160)
ஆ) உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
-
கவிதைக்குப்பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. (பக்கம் .160)
அ) எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
-
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை: தீயினத்தின் அல்லல் படுத்தூஉம் இல்.
-
அல்லல் படுப்பதூம் இல் - எவரோடு பழகினால்?
ஈ) தீயினத்தார்
-
திண்ணியர் என்பதன் பொருள்
ஆ) மன உறுதியுடையவர்
-
ஆராய்ந்து சொல்கிறவர்
இ) தூதுவர்
-
நடுங்கும்படியான துன்பம் யாருக்கில்லை?
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
-
எளியது, அரியது எது?
ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது
-
கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று - பொருள் கூறுக.
நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது ஆகும்.
-
‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்' - விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்
ஆ) சோழன் நலங்கிள்ளியை கோவூர்கிழார்
-
அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது
இ) அனைத்தையும்
-
முச்சந்தி இலக்கியம் என்பது
கூற்று 1 : கதை வடிவிலான வடிவம் உடையது
கூற்று : பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது.
ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
-
உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் பெயரெச்சம்
இ) வளர்ந்த
-
யானை புக்க புலம்போல - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
ஆ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது.
-
சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத்தலைவனின் இன்றைய நிலப்பகுதி
ஆ) விழுப்புரம்
-
ச.த சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்
ஈ) கிறித்தவமும் தமிழும்
-
நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி... என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது
இ) தமது அடையாளத்தை
-
கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
ஆ) நல்லியக்கோடனும் குமணனும்
-
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
(விடை: அ) தனித்தமிழ் தந்தை - 1. மு.வரதராசனார்)
-
பொருத்துக
அ) தமிழ் அழகியல் - 2. தி.சு. நடராசன்
ஆ) நிலவுப்பூ - 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்
இ) கிடை - 4. கி.ராஜநாராயணன்
ஈ) உய்யும் வழி - 1. பரலி.சு.நெல்லையப்பர்
ஈ) 2,3,4,1
-
பொருத்துக.
அ) குரங்குகள் - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
ஆ) பசுக்கள் - 1. கன்றுகளைத் தவிர்த்தன
இ) பறவைகள் - 4. மேய்ச்சலை மறந்தன
ஈ) விலங்குகள் - 3. குளிரால் நடுங்கின
புத்தக விடை தவறு (சரியான விடை: அ-2, ஆ-1, இ-4, ஈ-3)
(வழங்கப்பட்ட விடை: அ) 3, 1,2, 4)
-
பொருத்துக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - தெய்வத்துள் வைக்கப்படும்
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - நன்மை கடலின் பெரிது
இ) சினம் - சேர்ந்தாரைக் கொல்லி
ஈ) பழிப்படுவ செய்யார் - நடுவன்மை நாணுபவர்
உ) காலத்தினாற் செய்த நன்றி - ஞாலத்தின் மாணப் பெரிது
-
பொருத்துக:
அ) திருவல்லிக்கேணி - 4) கூவம்
ஆ) பக்கிங்காம் கால்வாய் - 2) கல் கோடரி [சரி செய்யப்பட வேண்டியது, மூலத்தில் 1) மாவலிபுரச் செலவு என இருக்க வேண்டும்]
இ) பல்லாவரம் - 1) மாவலிபுரச் செலவு [சரி செய்யப்பட வேண்டியது, மூலத்தில் 2) கல் கோடரி என இருக்க வேண்டும்]
ஈ) எழும்பூர் - 3) அருங்காட்சியகம்
(சரியான விடை: அ-4 ஆ-1 இ-2 ஈ-3)
(வழங்கப்பட்ட விடைகள்: அ) 1, 2, 4, 3 ஆ) 4, 2, 1, 3 இ) 4,1,2,3 ஈ) 2, 4, 3, 1)
குறிப்பு: மூலத்தில் உள்ள "பக்கிங்காம் கால்வாய் - 2) கல் கோடரி" மற்றும் "பல்லாவரம் - 1) மாவலிபுரச் செலவு" விடைகள் சரியான விடையுடன் முரண்படுகின்றன. சரியான விடைக்கு ஏற்ப மாற்றியுள்ளேன்.
-
பொருத்துக.
அ. பாம்போடு உடன் உறைந்தற்று - 4) உடம்பாடு இலாதவர்
ஆ. செத்தார் - 3) கள் உண்பவர்
இ. வறுமை தருவது - 2) சீர் அழிக்கும் சூது
ஈ. இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுதல் - 1) தீக்காய்வார்
ஈ) 4,3,2,1
-
பொருத்துக:
அ) ஆமந்திரிகை - 3) இடக்கை வாத்தியம்
ஆ) அரசு உவா - 1) பட்டத்து யானை
இ) கழஞ்சு - 4) எடை அளவு
ஈ) கழை - 2) மூங்கில்
அ) 3142
ஒரு மதிப்பெண் வினாக்கள் இலக்கணம், மொழிப்பயிற்சி (8+8) = 16
- இளந்தமிழே - சிற்பி பாலசுப்பிரமணியன்
- தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்காரம் (தண்டி)
- பிறகொரு நாள் கோடை - அய்யப்ப மாதவன்
- நெடுநல்வாடை - நக்கீரர்
- விருந்தினர் இல்லம் - ஜலாலுத்தீன் ரூமி
- கம்பராமாயணம் - கம்பர்
- இதில் வெற்றிபெற - சுரதா
- இடையீடு - சி.மணி
- புறநானூறு - ஔவையார்
- தெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்
- தேவாரம் - திருஞானசம்பந்தர்
- அகநானூறு - அம்மூவனார்
- கவிதைகள் - நகுலன்
- சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் (அரங்கேற்று காதை) -இளங்கோவடிகள்
- தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் (தொல்காப்பியர்)
- அதிசய மலர் - தமிழ்நதி
- தேயிலைத் தோட்டப் பாட்டு - முகமது இராவுத்தர்
- புறநானூறு - பிசிராந்தையார்
- முகம் - சுகந்தி சுப்பிரமணியன்
- இரட்சணிய யாத்திரிகம் - எச்.ஏ. கிருட்டிணனார்.
- சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார்
- திருக்குறள் - 40 குறட்பாக்கள்
உரைநடை
- தமிழ்மொழியின் நடை அழகியல் - தி.சு.நடராசன்
- பெருமழைக்காலம் - (நாடகம்)
- தமிழர் குடும்ப முறை - பக்தவத்சல பாரதி
- பண்டைய காலத்துப் பள்ளிக் கூடங்கள் - உ.வே.சாமிநாதர்
- மதராசப்பட்டினம்
- திரைமொழி
- இலக்கியத்தில் மேலாண்மை - வெ.இறையன்பு இ.ஆ.ப
- நமது அடையாளங்களை மீட்டவர்
விரிவானம்
- பாரதியின் கடிதம் - தம்பி நெல்லையப்பருக்கு (பாரதியார்)
- முதல்கல் - உத்தம சோழன்
- உரிமைத் தாகம் - பூமணி
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- தலைக்குளம் - தோப்பில் முகமது மீரான்
- நடிகர் திலகம் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
- சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும் - ஐராவதம் மகாதேவன்
- கோடை மழை - சாந்தா தத்
கலைச்சொல்லாக்கம்
- 1. Subscription - உறுப்பினர் கட்டணம்
- 2. Fiction - புனைவு
- 3. Biography - வாழ்க்கை வரலாறு
- 4. Archive - ஆவணம்
- 5. Manuscript - கையெழுத்துப் பிரதி
- 6. Bibliography - நூல் பட்டியல்
- 7. Platform - நடைமேடை
- 8. Train Track - இருப்புப்பாதை
- 9. Railway Signal - தொடர்வண்டி நிலைய வழிகாட்டி
- 10. Ticket Inspector - பயணச்சீட்டு ஆய்வர்
- 11. Level Crossing - இருப்புப்பாதைக் கடக்குமிடம்
- 12. Metro Train - மாநகரத் தொடர்வண்டி
- 13. Lobby - ஓய்வறை
- 14. Checkout - வெளியேறுதல்
- 15. Tips - சிற்றீகை
- 16. Mini meals - சிற்றுணவு
- 17. Arrival - வருகை
- 18. Departure - புறப்பாடு
- 19. Conveyor Belt - ஊர்திப்படை
- 20. Take Off - வானூர்தி கிளம்புதல்
- 21. Passport - கடவுச்சீட்டு
- 22. Visa - நுழைவு இசைவு
- 23. Domestic Flight - உள்நாட்டு வானூர்தி
- 24. Affidavit - ஆணை உறுதி ஆவணம்
- 25. Allegation - சாட்டுரை
- 26. Conviction - தண்டனை
- 27. Jurisdiction - அதிகார எல்லை
- 28. Plaintiff - வாதி
- 29. Sentence - தண்டனை
- 30. Artist - கவின்கலைஞர்
- 31. Animation - இயங்குபடம்
- 32. Newsreel - செய்திப்படம்
- 33. Cinematography - ஒளிப்பதிவு
- 34. Sound Effect - ஒலிவிளைவு
- 35. Multiplex Complex - ஒருங்கினைந்த திரையரங்க வளாகம்
- 36. Debit card - பற்று அட்டை
- 37. Demand Draft- கேட்பு வரைவோலை
- 38. Withdrawal Slip- திரும்பப் பெறல் படிவம்
- 39. Taller - விரைவுக் காசாளர்
- 40. Mobile Banking - அலைபேசி வழி வங்கி முறை
- 41. Internet banking - இணைய வங்கி முறை
- 42. Stamp pad - மை பொதி
- 43. Stapler - கம்பி தைப்புக் கருவி
- 44. Folder - மடிப்புத்தாள்
- 45. File - கோப்பு
- 46. Rubber Stamp - இழுவை முத்திரை
- 47. Eraser - அழிப்பான்
நூல் மற்றும் ஆசிரியர்கள்
- பாரதியின் கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன்
- இலக்கண உலகில் புதிய பார்வை - டாக்டர்பொற்கோ
- தமிழ் அழகியல் - தி.சு.நடராசன்
- பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா.இராசமாணிக்கனார்
- கம்பர் யார்? - வ.சுப.மாணிக்கம்
- சக்கரவர்த்தி திருமகன் - இராஜாஜி
- வயிறுகள் - பூமணி சிறுகதைத் தொகுப்பு
- நீங்களும் கவிபாடலாம் - கி.வா.ஜகந்நாதன்
- படைப்புக்கலை - மு.சுதந்திரமுத்து
- துறைமுகம் - சுரதா
- இதுவரை - சி.மணி
- கவிஞராக - அ.கி.பரந்தாமனார்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம் (சிறுகதைத் தொகுப்பு) - தோப்பில் மகமது மீரான்
- ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்
- எனது சுயசரிதை - சிவாஜி கணேசன்
- மெயப்பாடு - தமிழண்ணல்
- காப்பியத்தமிழ் - இரா.காசிராசன்
- அஜயன்பாலா - உலகத் திரைப்பட வரலாறு 1,2,3
- செழியன் - உலக சினிமா 1,2 பேசும் படம்
- சுஜாதா - திரைக்கதை எழுதுவது எப்படி?
- அம்ஷன்குமார் - சினிமா இரசனை
- தியோடர் பாஸ்கரன் - சினிமா கொட்டகை
- முச்சந்தி இலக்கியம் - ஆ.இரா.வெங்கடாசலபதி
- மாறுபட்டுச் சிந்திக்கலாமா? - சிபி.கே.சாலமன்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமி
பொருள் தருக
கீழ்க்காணும் நான்கு சொற்களைச் சிறு பத்தியாக மாற்றுக.
(எ-கா) வானம், பற, நிலவு, தொடு - வானத்தில் பறப்போம் பறந்து நிலவைத் தொடுவோம்.
- சருகு, விழு, மண், அலை - மரத்திலிருந்து சருகு மண்ணில் விழ நீர் அலை படகாய் அதை செலுத்திச்சென்றது.
- விண்மீன், ஒளிர், எரி, விழு - வானத்தில் விண்மீன் போல் ஒளிர்ந்த எரிகல் ஒன்று நகர்ந்து கீழே மெல்ல மெல்ல இறங்கி வந்து பூமியை நோக்கி வீழ்ந்தது
- குதிரை, வேகம், ஓடு, தாவு - குதிரை வேகமாக ஓடுவதைக் கண்ட மான் தாவிதாவி குதிக்கிறது.
- குழந்தை, நட, தளிர்நடை, விழு - குழந்தை நடக்க முயற்சி செய்ய தளிர்நடையில் தடுக்கிதடுக்கி விழுகிறது.
- திரை, காண், கைதட்டல், மக்கள் - திரையில் நடிகர்திலகத்தைக்கண்ட இரசிகமக்கள் கைதட்டுகிறார்கள்.
இரு தொடர்களாக்குக.
-
மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான்
✓ மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்
✓ அதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான்
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
- தலை, தளை, தழை - ஆடுகளுக்கு தழையை வெட்டி அதை தளை (கட்டி) வைத்து தலையில் சுமந்து செல்கிறான்.
- கலை, களை, கழை - கழைக்கூத்தாடி களைத்துவிடாமல் வயிற்று பிழைப்பிற்காக கலையை வளர்க்கிறான்.
- அலை, அளை, அழை - அலைவீசி அளை உடைகிறது. பாம்பு வெளியில் வந்தால் ஆபத்து என அன்னை அழைக்கிறாள்.
- விலை, விளை, விழை - குமரன், விளைச்சல் நன்றாக இருந்தால் நல்ல விலைக்கு நெல்மணியை விற்று, மேலும் விவசாயம் செய்ய விழைகிறான்
- புள் - புல் ✓ புல்வெளியில் புள்ளினங்கள் அழகாய் விளையாடின.
- உழை - உளை - உழவன் உளையில் உழைத்தால்தான் உலையில் சோறுகொதிக்கும்.
- கான் - காண் - கானகத்தில் கானக்குயிலினைக் கண்டேன்.
- ஊண் - ஊன் ✓ ஊன் (மாமிசம்) இல்லா ஊணை(உணவு) விரும்பி உண்ண பழகு.
- தின்மை - திண்மை ✓ தின்மை (தீமை) செய்ய திண்மை(வலிமை) இல்லை அவனுக்கு.
- களம் - கலம் ✓ ஆடுகளம் இருந்த இடத்தில் காப்பர் உலைகலம் கட்டுகிறார்கள்.
கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.
-
அவர் திறமையானவர் என்று (குமரன்) தெரியும்.
அவர் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.
-
உங்களுக்கு (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.
உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்.
-
நேற்று முதல் (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
-
முருகன் (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
-
நம்முடைய (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
நம்முடைய தேவையின் அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்.
மொழியோடு விளையாடு
புதிர்
- அடைமழை பெய்த - ஈசல்
- தண்ணீரும் - பச்சைக்கிளி
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
-
குமரன் வீடு பார்த்தேன்.
குமரனை வீட்டில் பார்த்தேன்.
-
மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்
மாறன் பேச்சுத்திறனை யாரால் வெல்ல முடியும்.
-
காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
-
போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
போட்டியில் வெற்றி பெற்றதால் கலைச்செல்விக்கு பாராட்டுகள் குவிந்தன.
-
அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.
அனைவரையும் அன்பால் அழைத்தவன். துன்பம் தர யாருக்கு மனம் வரும்.
-
சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
சான்றோருக்கு மதிப்பு கொடுத்து வாழ்வில் உயரலாம்.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக
-
நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.
- எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.
- இரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
- வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
- ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.
- இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
-
பலகை - பலகையால் ஆன மேசையில் உணவு பரிமாறப்பட்டது.
பல கைகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி அடையமுடியும்
-
தாமரை - குளத்தில் தாமரை பூத்திருக்கிறது
தா(தாவும்) மரை(மான்) காட்டில் மேய்ந்தது
-
கோவில் - சிவன் கோவில் திருவிழாவிற்கு சென்றோம்
கோ(அரசன்) வில்லால் மானை வீழ்த்தினார்.
-
வெங்காயம் - சாம்பார் சுவைக்கு வெங்காயம் அவசியம்.
தீ விபத்தால் அவனுக்கு வெம் காயம் ஏற்பட்டது
-
தலைமை - அண்ணன் தலைமையில் சுற்றுலா சென்றோம்
வயதான என் பாட்டி தலைக்கு நரையை மறைக்க தலைமை அடித்துக்கொண்டாள்.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக
-
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ.
இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.
-
நிலத்தக் கெளறணும்டா அப்பதான் வகுது நிறையும்
நிலத்தைக் கிளறவேண்டுமடா. அப்பொழுதுதான் வயிறு நிறையும்.
-
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
அன்றைக்கு அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதானே!
-
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கே அழைத்துக்கொண்டு போனார்?
-
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.
பிள்ளைக்கு உடம்பு சரியில்லை மூன்று நாட்களாக சிரமப்படுகிறது.
-
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.
இரவிற்கு சிறிய தந்தையை காவலுக்குப் போக சொல்.
ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.
- விழும் மரங்கள் அழியும் காடு பாலைவனம்
- அப்படி என்ன சொல்லியது காற்று குதித்தாடுகிறது மேகம் மழையாய்
- பூத்த மலரொன்று பறக்கிறது வண்ணத்துப்பூச்சி
- வானம் அழுகிறது பூமி சிரிக்கிறது இது மழைக்காலம்
- பூட்டிய வீட்டிலும் பூத்துச் சிரிக்கிறது முல்லை
பிறமொழிச்சொற்களைத் தமிழ் படுத்துக.
- சர்க்கார் - அரசு
- சம்பளம் - ஊதியம்
- ஜீவனத்துக்கு - உயிர்வாழ்வதற்கு
- ஜீவனம் - வாழ்க்கை
- ஆத்மா - மனம் (உயிர்)
- பிரபஞ்சத்தை - உலகத்தை
- ஆத்ம விசாரத்தை - பரந்த மனதை
- ஸ்புடம் - சோதித்தல்
மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்
- ஐப்பசி - ஓணம்
- கார்த்திகை - விளக்குத் திருவிழா
- மார்கழி - திருவாதிரை விழா
- தை - தைப்பூச விழா
- மாசி - கடலாட்டு விழா
- பங்குனி - பங்குனி உத்திர விழா
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
-
வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்துக்கொண்டும் இருந்தன.
-
முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்
✓ முருகன் சோறு உண்டு பால் பருகினான்.
-
கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
கோவிந்தன் குடியிருக்க சுவர் எழுப்பி கூரை வேய்ந்தார்.
-
வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக்குட்டியும் கண்டேன்.
வனவிலங்குக்காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக்கன்றையும் கண்டேன்.
-
பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்
பொருள் வேறுபாடு தருக.
விடைக்கேற்ற வினா அமைத்திடுக
-
குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில் தான் இடம் பெற்றுள்ளது.
➢ குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
-
நடுவண்அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
➢ நடுவண்அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை எப்பொழுது அமைத்தது?
-
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன.
➢ சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் எதற்கெல்லாம் உதவுகின்றன?
-
1856 இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
➢ 1856 இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
-
"யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர்சன்.
➢ எதனை வெளிப்படுத்துவதே ஆவணப்படம் என்கிறார் கிரியோர்சன்?
-
பிழையான தொடரைக் கண்டறிக
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
-
பேச்சுத்தமிழில் அமைந்த தொடர்
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
-
முடிந்தால் தரலாம் - தன்னால் தர இயன்றால் தரலாம்.
முடித்தால் தரலாம் - செயலை முடித்தால் தரலாம்.
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
-
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான். அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதிய தலைமுறை மீதுதான். அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டு தீர்ப்பார்கள்.
-
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள்.
-
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.
-
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
-
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துகொண்டு அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துகொண்டு அறியாமையை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்றுக்கொடுக்கும்.
கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடரமைக்க
(எ.கா)
- முன் - அவன் முன்வந்து கூறினான் / அவன்முன் வந்து கூறினான்
- தானே - இராமன் தானே பாடினான்! / இராமன் தானேபாடினான்
- கொண்டு - கத்திக்கொண்டு மரத்தை வெட்டினான் (சத்தம்) / கத்தி கொண்டு மரத்தை வெட்டினான் (கருவி)
- விட்டான் - அவன் தெருவில் போய் விட்டான் / அவன் தெruvil போய்விட்டான்
கருத்துப்படங்களைப் புரிந்து பத்தியாக எழுதுக.
சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று அழைப்பர். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை என ஐந்து அகம் சார்ந்த நூல்களும், புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய புறம் சார்ந்த இரு நூல்களும், அகமும் புறம் கலந்த பரிபாடல் ஒரு நூலும் ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகையுள் அடங்கும்.
குறிஞ்சிப்பாடடு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை போன்ற அகம் சார்ந்த நான்கு நூல்களும், மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை போன்ற புறம் சார்ந்த ஆறு நூல்களும் பத்துப்பாட்டு என அழைக்கப்படும்.
குழுக்கெழுத்துப் புதிர் (வினா பக்கம் 216, 217)
✓ இடமிருந்து வலம்
1. குடியரசு, 4. அஞ்சி, 8.நல்லி, 9. மலைநாடு, 16. வளமலை, 14. மழை
✓ வலமிருந்து இடம்
2. பிறான் மலை, 4. அதியன் 5. மலாடு 12. ஆளுநர் 21 பாட்டு
✓ மேலிருந்து கீழ்
3. கொல்லிமலை, 6.சுகந்தி, 1. குமணன், 10. ஜான்பனியன், 15. கடல், 17. சரகம், 18. இறைமகன்
✓ கீழிருந்து மேல்
6. ஊட்டி, 8. நந்திவர்மன், 13. ஆலாந்துறை, 11. சிறுபாணா, 19. வையம், 20. மக்களிடம்
இலக்கண வினாவிடை
-
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
- எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப்பழக வேண்டும்.
- தொடக்கத்தில் சிலகாலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது. ந,ண,னஃ ல,ள, /ழ,ற.ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
- கெ,கே, கொ, கோ போன்று கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுதவேண்டும்.
-
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படைப் பண்புகள் ஆகும். இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றன.
-
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
அவர்கள் வந்தார்கள், மாணவர்கள் படித்தார்கள். (மாணவர் படித்தார், அவர் வந்தார்)
-
மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் - இரு தொடர்களாக்குக.
✓ மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.
✓ அதன் விளைவால் இன்று ஆபத்தை சந்திக்கொண்டிருக்கிறான்.
இயல்பாகவே.... (வினா பக்க எண் : 43)
- ➢ பெருமழையைத்தாங்கக் கூடிய ஏற்பாடுகளை இயற்கை எவ்வாறு அமைத்திருக்கிறது?
- ➢ நாம் வெள்ளச்சமவெளிகளை எவ்வாறெல்லாம் அழித்துவிட்டோம்?
- ➢ நெகிழியாலும், திடக்கழிவுகளாலும் நீர்வழிகளில் ஏற்படும் பாதிப்புகள் யாவை?
- ➢ இயற்கை வெள்ளச் சமவெளிகளை அழித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறிப்பிடுக.
- ➢ வெள்ள பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் எனில் யாது செய்தல் வேண்டும்?
-
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
இ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
-
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
இ) 4, 3, 1, 2
-
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
மாணவர்கள்வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
-
காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள்மயக்கத்திற்குச் சான்று தருக.
அவள் அக்காள் வீட்டிற்குச்சென்றாள்.
இதில் அவளுடைய அக்காள், வீட்டிற்குச் சென்றாளா? அவள், அக்காளின் வீட்டிற்கு சென்றாளா? என பொருள் வேறுபாட்டினை ஏற்படுத்துகிறது.
-
சலசல, வந்து வந்து, கலகல, விம்மி விம்மி இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.
- மாலதி வகுப்பில் சலசலவென்று பேசினாள்
- மாலதி வகுப்பில் கலகலவென்று சிரித்தாள் - இரட்டைக்கிளவி தொடர்கள்
✓ நேற்று உனக்கு காய்ச்சல் சரியாகிவிட்டதா என வந்து வந்து பார்த்தேன்
✓ மாலதி புத்தகம் தொலைந்துபொனதை எண்ணி விம்மிவிம்மி அழுதாள் - அடுக்குத்தொடர்கள்.
-
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
திருவளர் செல்வன் என்பதே சரியான தொடராகும் - வினைத்தொகைச் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது.
-
வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?
- இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.
-
ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?
- வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகை பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும்.
- வெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.
-
காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
காப்பியம் இரண்டு வகைப்படும். அவை பெருங்காப்பியம், சிறுகாப்பியம்.
-
காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்கள் யாவை?
பாட்டுடைச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சரிதம், புராணம், கதை, மாக்கதை, காதை, காவியம், மாபெருங்காப்பியம், மாக்கவி ஆகியன காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்களாகும்.
-
காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக?
காதை, சருக்கம், இலம்பகம், படலம், காண்டம் ஆகியவை காப்பிய சிற்றுறுப்புகளாகும்.
-
பாவிகம் - விளக்குக.
✓ காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்' என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.
✓ காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
-
தொன்மம் விளக்கம் தருக.
தொன்மம் என்றால் பழமை, பழங்கதை, புராணம் என்றெல்லாம் கூறுவர்.
-
பேச்சு வழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.
- இந்தா போறான் சகுனி.
- இவன் பெரிய அரிச்சந்திரன்.
-
குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.
மதிப்பெண்கள்
மனனத்தால்
விளைந்ததென்றால்
பாடங்கள் எதற்கு?
-
வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பிடுக.
ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது.
-
குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.
- சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.
- சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.
- இத்தொடர்பின் வாயிலாக குறியீட்டுப்பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
-
தாமரை இலை நீர்போல
முருகன் எப்பொழுதும் தன் அண்ணன் வீட்டில் தாமரை இலை நீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருப்பான்.
-
கிணற்றுத்தவளை போல
என் பாட்டி கிணற்றுத்தவளை போல வீட்டுக்குள்ளே வாழ்வதால் இன்றைய நாகரிக வாழ்வை பற்றி ஒன்றும் தெரியாது.
-
எலியும் பூனையும் போல
கிரிஜாவும் விமலாவும் வகுப்பில் எப்பொழுதும் எலியும் பூனையும் போல சீறிக்கொண்டே இருப்பார்கள்.
-
அச்சாணி இல்லாத தேர்போல
என் தோழியின் தகப்பனார் திடீர் என இறந்ததால் அவர்களின் குடும்பம் அச்சாணி இல்லாத தேர்போல ஆயிற்று.
-
உள்ளங்கை நெல்லிக்கனிபோல
பள்ளிக்கே வராத குப்பு தேர்வில் தோல்வி அடைவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவாய் தெரிகிறது.
-
ஆற அமர
ஒரு செயலை செய்வதற்கு முன் ஆற அமர சிந்தித்து செயலை செய்தல் வேண்டும்.
-
ஆணி அடித்தாற் போல
என் தந்தை தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் வேண்டும் என்று ஆணி அடித்தாற் போல் கூறினார்.
-
அகலக்கால்
தன்னுடைய வறுமானத்திற்கு ஏற்றபடி வீடுகட்ட வேண்டும். அடுத்தவரை பார்த்து கடனுடன் வாங்கி பெரிய வீடு கட்டுவது என்பது அகலக்கால் வைப்பது போல ஆகும்.
-
வழிவழியாக
எங்கள் ஊர் விநாயகர் கோயில் திருவிழாவினை வழிவழியாக எங்கள் குடும்பத்தார் செய்துவருகிறார்கள்.
-
கண்துடைப்பு
இளைஞர்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலைவாய்ப்பு உண்டு என அரசு அறிவித்தது வெறும் கண்துடைப்பாகும்.
இலக்கணத் தேர்ச்சிக்கொள்
-
தமிழில் திணைப்பாகுபாடு ------------- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
-
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்...
இ) தொல்காப்பியம்
-
யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே-----
ஆ) உயர்திணை, அஃறிணை
-
பொருத்தி விடை தேர்க.
அ) அவன் அவள் அவர் - 4. பதிலிடு பெயர்கள்
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - 1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் - 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
ஈ) நாங்கள், நாம் - 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
அ) 4,1,2,3
-
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
அவர்கள் வந்தார்கள், மாணவர்கள் படித்தார்கள். (மாணவர் படித்தார், அவர் வந்தார்)
-
விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.
✓ ஒரு நாள் விடியல் வேளையில் வனங்களைக்(காடு)காணச்சென்ற நான் அதன் வனப்பினைக்கண்டு மயங்கினேன்.
-
வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.
- அன்பே - தகளியாய்
- வான்மழை - தூறலில்
- கண்ணிரண்டும் - இல்லார்
- வெண்ணிலவு - காய்கிறது
- வெய்யோன் - காய்ந்திட
-
மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.
- கல்வி கரையில கற்பவர்
- கல்லாரே ஆயினும் கேட்க
- நல்லவை செய்யின் நலமே
- அவமதிப்பும் ஆன்ற பொருள்
- உண்ணாது நோற்பார் சான்றோர்.
-
பொருத்துக.
அ) மாச்சீர் - தேமா, புளிமா
ஆ) காய்ச்சீர் - தேமாங்காய், புளிமாங்காய்
இ) விளச்சீர் - கருவிளம், கூவிளம்
ஈ) ஓரசைச்சீர் - நாள், மலர்
-
படிமம் என்பதன் பொருள்...
இ) காட்சி
-
'காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்'இக்கவிதையில் ------ பயின்று வந்துள்ளது.
ஆ) வினைப்படிமம்
-
கூற்று: : உவமை உருவகம் போல படிமமும் வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.
அ) கூற்று சரி, காரணம் தவறு
-
மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்
-
"மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது” - இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?
உரு(நிறம்)ப் படிமம்
-
'பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்' - தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
பெருங்கடல் X சிறுகுடி
-
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
ஆ) மயிலைநாதர்
-
கூற்று:1 காப்பியம் என்னும் சொல் காப்பு இயம் எனப்பிரித்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று : 2 ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி
அ) கூற்று 1 சரி 2 தவறு
-
சரியானவற்றைப் பொருத்தித் தேர்க.
அ) காதை - 4. சிலப்பதிகாரம்
ஆ) சருக்கம் - 3. சூளாமணி
இ) இலம்பகம் - 2. சீவகசிந்தாமணி
ஈ) படலம் - 1. கந்தபுராணம்
அ) 4,3,2,1
-
தவறான இணையைத் தேர்க.
பாவகை - இலக்கியம்
அ) விருத்தப்பா - நாலடியார்
-
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க
ஆ) வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி!
-
தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழி மூலம் விளக்குவது.
-
‘சாபவிமோசனம்'. 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்.
அ) கு. அழகிரிசாமி
-
பண்புக்குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக.
அ) அறம் - 4) தருமன்
ஆ) வலிமை - 3) பீமன்
இ) நீதி - 2) மனுநீதிச்சோழன்
ஈ) வள்ளல் - 1) கர்ணன்
ஈ) 4 3 2 1
-
உள்மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?இக்கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?
பாற்கடல், அமுதம், ஆலகாலம் ஆகியன தொன்மங்கள் ஆகும்.
-
குறியீடுகளைப் பொருத்துக.
அ) பெண் - 4) நீதி
ஆ) புறா - 1) சமாதானம்
இ) தாராசு - 3) விளக்கு [சரி செய்யப்பட வேண்டியது, மூலத்தில் சிங்கம் 2) வீரம், தாராசு 3) விளக்கு என உள்ளது. தாராசு நீதிக்குறியீடு, சிங்கம் வீரத்திற்கு. பெண் விளக்காக இருக்கலாம்]
ஈ) சிங்கம் - 2) வீரம்
(சரியான விடை: அ-4 ஆ-1 இ-2 ஈ-3) [இங்கு மூலத்தின் சரியான விடைக்கும், கேள்விக்கும் முரண்பாடு. மூலத்தில்: அ-4 பெண்-நீதி, ஆ-1 புறா-சமாதானம், இ-2 தாராசு-வீரம் (?), ஈ-3 சிங்கம்-விளக்கு (?). இது குழப்பமாக உள்ளது. மூலத்தில் உள்ளதை அப்படியே கொடுக்கிறேன், ஆனால் திருத்தம் தேவைப்படலாம்.]
(வழங்கப்பட்ட விடை: அ) 2, 4, 1, 3)
-
கூற்று: 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருபெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி
-
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
ஈ) உள்ளுறை உவமை
-
‘திட்டம்’ என்னும் தலைப்பில் ‘ வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?' என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்' எதற்குக் குறியீடாகிறது?
இ) திட்டம்
-
மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
அ) குறியீடு
அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரைவிமர்சனத்தை அப்படத்தின் இயக்குநருக்கு கடிதமாக எழுதுக.
திருவண்ணாமலை,
09.06.19
அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,
தாங்கள் இயக்கிய 36 வயதினிலே படத்தினைக்கண்டு களித்தேன்.மிக அருமையாக அப்படத்தின் காட்சிகள் சித்திரிக்கபட்டிருக்கிறீர்கள். சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் பெண்களால் சாதிக்க முடியும் என்றும் கூறப்பட்டகருத்துகள் மிகமிக அற்புதம். இத்திரைப்படத்தில் பெண்களுக்கு தேவையான நேர்மறையான கருத்தினை தெரிவித்திருந்தாலும், வேலைவாய்ப்பிற்கும், நல்லதொரு கல்வியை பெறுவதற்கும் அயல்நாடுதான் சிறந்தது எனக் கூறும் வகையில் அமைந்திருக்கும் கருத்து மிகத்தவறான ஒன்றாகும்.
மரம் வளர்க்க இடமமில்லாதவர்களும், விவசாயம் செய்ய இடம் இல்லாதவர்களும், எல்லாம் கட்டிடங்களாய் நிரம்பி வழியும் நகரத்தார்களும் தன்னால் இயன்ற செடிக்கொடி வகைகளை வளர்த்து, பசுமையையும், தூய காற்றையும் உலகிற்கு தரமுடியும். அதுமட்டுமல்லாமல் செயற்கை உரமில்லாத காய்கறிகள் உடலிற்கு என்றும் நல்லது அதை நாமே விளைவிக்கலாம் என்ற கருத்தை மிகத்துள்ளியமாக அருமையாக படைத்தளித்துள்ளீர். அதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். கதையில் இன்னும் 36 வயதை தாண்டி வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வியல் சாதனையை குறிப்பிட்டிருக்கலாம். "வாடி ராசாத்தி எனும் பாடல்” மிக அருமையான வரிகளைக்கொண்ட பாடலாகும். திரைப்படம் சிறந்ததாக இருப்பினும். நல்லதொரு குறும்படம் பாரத்தது போன்றே தோன்றியது. சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துள்ள இதுபோன்ற படங்களை தாங்கள் தயாரித்து தருவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள் திரு. சூரியா அவர்களே! மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
அன்புடன் விமர்சகர்
பெறுநர்
திரு.ஆ.செந்தில்வேலன்.
இயக்குநர் திரு. செ. சூரியா,
36, பூந்தமல்லி,
சென்னை - 18
அணி, திணை (4)
-
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
இக்குறட்பாவில் நிரல்நிறை அணி பயின்று வந்துள்ளது.
அணி : ஒரு செய்யுளில் முதலில் சொற்களை வரிசையாகவும் அச்சொற்களுக்குரிய பொருளை அடுத்து வரிசையாகவும் அமைத்துக் கூறுவது நிரல் நிறை அணி ஆகும்.
எ - கா : அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
விளக்கம் : அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
பொருத்தம் : இக்குறட்பாவில் அன்பும் அறனும் ஒரு வரிசையில் கூறி, அவற்றிற்குரிய பொருளை பண்பும் பயனும் என வரிசைப்படுத்திக் கூறியுள்ளதால் இக்குறட்பா நிரல் நிறை அணிக்குப்பொருத்தமாயிற்று.
-
கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்.
அணி : ஒரு செய்யுளில் இரு பொருள்களைக்கூறி அவற்றில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்திக் கூறுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
எ - கா: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்
விளக்கம் : சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்
பொருத்தம் : இக்குறட்பாவில் சினத்தை கடலாக உருவகிக்காமல், இனத்தை கப்பலாக உருவகப்படுத்தி உள்ளதால் இக்குறட்பா ஏகதேச உருவகஅணிக்குப்பொருத்தமாயிற்று.
-
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
இக்குறட்பாவில் தொழில் உவமை பயின்று வந்துள்ளது.
அணி : ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.
விளக்கம் : தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்து இருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
பொருத்தம்: குளிர் காய்பவர்களின் செயலை அரசனை சார்ந்திருப்பவருக்கு ஒப்புமை கூறப்பட்டுள்ளதால் இக்குறட்பா தொழில் உவமைக்கு பொருத்தமாயிற்று.
-
உவமை அணியை விளக்குக.
அணி : ஒரு பொருளை அல்லது கருத்தை வேறொன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமை அணி ஆகும்.
எ - கா: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று
விளக்கம் : மனதில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.
பொருத்தம் : இக்குறட்பாவில் உடம்பாடு இல்லாதவரை பாம்பிற்கு உவமையாக சுட்டப்பட்டள்ளது. ஆகையால் இதில் உவமை அணி பயின்றுவந்துள்ளது.
-
எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்குக.
அணி : உவமை தனிவாக்கியமாகவும் உவமேயம் தனி வாக்கியமாகவும் நின்று இடையில் உவம உருபு மறைந்து வந்து பொருள் எடுத்துக்காட்ட உவமை அணி ஆகும்.
எ - கா: துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
விளக்கம் : உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.
பொருத்தம் : இக்குறட்பாவில் உறங்குபவர் செத்தவருக்குசமம். கள் உண்பவரை நஞ்சு நஞ்சு உண்பதற்கு சமம் என இடையில் உவம உருபு தோன்றாமல் உவமைபடுத்தி உள்ளது. அதனால் இக்குறட்பா எடுத்துக்காட்டு உவமை அணிக்கு பொருத்தமாயிற்று.
-
வேற்றுமை அணியை விளக்குக.
அணி : செய்யுளில் இருபொருளுக்கு ஒப்புமைக் கூறி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக்காட்டவது வேற்றுமை அணி ஆகும்.
எ - கா: ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி - தண்டியலங்காரப்பாடல்.
விளக்கம் : மலையில் பிறந்து நீரால் சூழ்ந்த இவ்வுலக உயிர்களின் அக இருளை போக்குவது தமிழாகும். புற இருளை போக்குவது சூரியன் ஆகும். .ஆனால் தமிழுக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை.
திணை விளக்கம்
-
நெய்தல் திணையை விளக்குக.
✓ முதற்பொருள்:
- நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
- பொழுது : எற்பொழுந்து - எற்பாடு, பெரும் பொழுது - ஆறும்
✓ கருப்பொருள் :
- தெய்வம்: வருணன்
- மக்கள் : பரதர், பரத்தியர்
- உணவு: மீன், உப்புக்கு ஈடாக பெற்ற பொருள்கள்
- பறவை: கடற்காகம்
- விலங்கு: சுறா
- தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல்
- பறை: மீன்கோட் பறை
✓ உரிப்பொருள்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
எ-கா: பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
இப்பாடல் வரிகளில் நெய்தல் நிலத்திற்குரிய முதற்பொருள்(கடல்), கருப்பொருள் (மக்கள்:பரதவர்) பயின்றுவந்துள்ளதால் இப்பாடல் நெய்தல் நிலத்திற்கு பொருத்தமாயிற்று.
-
வாகை திணை விளக்குக.
திணை: "போர்க்களத்தில் மிக்கோர் செறுவென்றது வாகையாம்” வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை ஆகும்.
-
பாடாண் திணையை விளக்குக.
திணை: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்தக் கூறுவது பாடாண் திணையாகும்.
எ.கா: பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன் கொல்?
விளக்கம் : பரிசில் பெற விழையும் இரவலர்க்கு அடைக்காத வாயிலோனே? விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, அவனை நம்பித்தான் உலகில் உள்ள வறியவர் உள்ளனர் எனக் கருதுகிறான் போலவும்.
பொருத்தம் : அரசனின் கொடைத்தன்மையை புகழ்ந்து பாடுவதால் இவ்வரிகள் பாடாண் திணைக்கு பொருத்தமாயிற்று.
-
செவியறிவுறூஉ துறை விளக்குக.
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
புணர்ச்சி (2)
-
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
இனம் +நிரை-
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் - இனநிரை
-
பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக.
பெருமை+ தேர்
ஈறு போதல் - பெரு+ தேர்
இனமிகல் - பெருந்தேர்
-
செம்பரிதி
செம்மை +பரிதி
ஈறு போதல் - செம் +பரிதி
(நன்மொழி) - செம்பரிதி
-
வானமெல்லாம்
வானம் +எல்லாம்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே- வானமெல்லாம்
(உரனுடை)
-
ஆங்கவற்றுள் - ஆங்கு +அவற்றுள்
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் - ஆங்க் +அவற்றுள்
உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - ஆங்கவற்றுள்
-
உன்னையல்லால்- உன்னை +அல்லால்
இஈஐ வழி யவ்வும் - உன்னை +ய் + அல்லால்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்
(தனியாழி, ஒருமையுடன், ஏழையென)
-
செந்தமிழே
செம்மை +தமிழே
ஈறு போதல் - செம் +தமிழே
முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே
(வெங்கதிர்)
-
இனநிரை
இனம் +நிரை
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும் - இனநிரை
-
புதுப்பெயல்
புதுமை+ பெயல்
ஈறுபோதல் - புது +பெயல்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - புதுப்பெயல்
-
அருங்கானம்
அருமை +கானம்
ஈறுபோதல் - அரு +கானம்
இனமிகல் - அருங்கானம்
(பெருங்கடல்)
-
செல்லிடத்து
செல் + இடத்து
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் - செல்ல் +இடத்து
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - செல்லிடத்து
(உள்ளொன்று, முன்னுடை)
-
எத்திசை
எ +திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - எத்திசை
(தலைக்கோல்)
-
பூம்பாவாய்
பூ+ பாவாய்
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும் - பூம்பாவாய்
இலக்கணக்குறிப்பு (2)
- பண்புத்தொகை
செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம், வெங்கதிர், புதுப்பெயல், கொடுங்கோல், நன்கலம், பெருங்கடல், தொல்நெறி,அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு - வினைத்தொகை
தாழ்கடல், வயங்குமொழி, வளர்தலம், காய்நெல், வினைத்தொகை - உவமைத்தொகை
மலரடி, கடல்தானை - வினையெச்சம்
சிவந்து - பெயரெச்சங்கள்
வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த - எதிர்மறைப் பெயரெச்சம்
புக்க - உருவகம்
வியர்வைவெள்ளம் - வினையாலணையும் பெயர்
உயர்ந்தோர், செற்றவர் - இடைக்குறை
இலாத, உளது - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பொய்யா, அடையா, மறவா, அறியா - உரிச்சொல் தொடர்
மாதவம், மாமயிலை, தடக்கை, - மரூஉ
நுந்தை - எண்ணும்மை
அன்பும் அறனும் , அறிவும் புகழும் , ஆடலும்பாடலும் - தொழிற்பெயர்
மறத்தல், சொல்லுதல்,நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, மலைதல் - செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)
சிறாஅர் உழாஅது, கவாஅன் - சொல்லிசை அளபெடை
வெரீஇய, வளைஇ, ஒரீஇ, - இன்னிசை அளபெடை
படுப்பதூஉம் - ஆகுபெயர்
நீலம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
அரவக்கடல் - அடுக்குத்தொடர்
முத்துமுத்தாய் -
"படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” -, இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.
✓ கடாஅ படாஅம், கெடாஅ - செய்யுளிசை அளபெடை
ஒரீஇ - சொல்லிசை அளபெடை
படுப்பபதூஉம் - இன்னிசை அளபெடை
சொல்லுதல் - தொழில் பெயர்
உறுப்பிலக்கணம் தருக
- வெகுளி - வெகுள் + இ (பகுதி, தொழிற்பெயர் விகுதி)
- விளங்கி - விளங்கு +இ (பகுதி, வினையெச்ச விகுதி)
- கலங்கி - கலங்கு+ இ (பகுதி, வினையெச்ச விகுதி)
- சாற்றி- சாற்று+ இ (பகுதி, வினையெச்ச விகுதி)
- நகை - நகு+ ஐ (நகு-பகுதி (நகை ஆனது விகாரம்), ஐ-தொழிற்பெயர் விகுதி)
- மருட்கை - மருள் + கை (மருள்-பகுதி (ள், ட் ஆனது விகாரம்), கை-தொழிற்பெயர் விகுதி)
- நகை - நகு+ ஐ (நகு-பகுதி (நகை ஆனதுவிகாரம்), ஐ-தொழிற்பெயர் விகுதி)
- மருட்கை - மருள் + கை (மருள்-பகுதி (ள், ட் ஆனதுவிகாரம்), கை-தொழிற்பெயர் விகுதி)
- சாய்ப்பான் - சாய்+ ப் +ப் +ஆன் (சாய்-பகுதி, ப்-சந்தி, ப்-எதிர்கால இடைநிலை, ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி)
- பேசுவார் - பேசு+ வ் +ஆர் (பேசு-பகுதி, வ்-எதிர்கால இடைநிலை, ஆர்-பலர்பால் வினைமுற்று விகுதி)
- வைத்து - வை +த் + த் + உ (வை-பகுதி, த்-சந்தி, த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி)
- செய்த - செய் + த்+ அ (செய்-பகுதி, த்-இறந்தகால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி)
- அறுத்து - அறு +த் +த் + உ (அறு-பகுதி, த்-சந்தி, த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி)
- பகைத்த - பகை +த் +த் + அ (பகை-பகுதி, த்-சந்தி, த்-இறந்தகால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி)
- தொழுதனர் - தொழு +த் +அன் +அர் (தொழு-பகுதி, த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, அர்- படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி)
- பழித்தனர் - பழி +த் +த் + அன் +அர் (பழி-பகுதி, த்-சந்தி, த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, அர்- படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி)
- விம்முகின்ற - விம்மு +கின்று +அ (விம்மு-பகுதி, கின்று-நிகழ்கால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி)
- நினைக்கின்ற- நினை +க் +கின்று+ அ (நினை-பகுதி, க்-சந்தி, கின்று-நிகழ்கால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி)
- கண்டான் - காண்(கண்) +ட் + ஆன் (காண்- பகுதி (கண் எனக் குறுகியது விகாரம்), ட்-இறந்தகால இடைநிலை, ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி)
- வியந்து - விய+ த்(ந்) +த் +உ (விய-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி)
- அறிந்து - அறி +த்(ந்) + த் + உ (அறி-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி)
- வந்து - வா(வ) +த்(ந்) + த் + உ (வா-பகுதி : வ எனக்குறுகியது விகாரம், த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி)
- களைந்து - களை +த்(ந்) + த் +உ (களை-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, உ-வினையெச்ச விகுதி)
- ஈந்த - ஈ+ த்(ந்) +த் +அ (ஈ-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அ-பெயரெயச்ச விகுதி)
- இருந்தாய் - இரு+ த்(ந்) +த் + ஆய் (இரு-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, ஆய்- முன்னிலை ஒருமைவினைமுற்று விகுதி)
- உயர்ந்தோர் - உயர் + த்(ந்) + த் +ஓர் (உயர்-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, ஓர்-பலர்பால் வினைமுற்று விகுதி)
- பொலிந்தான் -பொலி +த்(ந்) + த் + ஆன் (பொலி-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, ஆன்- ஆண்பால் வினைமுற்று விகுதி)
- அமர்ந்தான் - அமர் + த்(ந்) +த் +ஆன் (அமர்-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி)
- தந்தனன்- தா(த) + த்(ந்) +த்+அன் + அன் (தா-பகுதி : த எனக்குறுகியது விகாரம், த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, அன்- படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி)
- அமர்ந்தனன் -அமர்+த்(ந்)+த்+அன் +அன் (அமர்-பகுதி, த்-சந்தி, ந்-ஆனது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, அன்-ஆண்பால் வினைமுற்று விகுதி)
தமிழாக்கம் (4)
- Learning is a treasure that will follow its owner everywhere - கற்றல் என்பது புதையல் அதை தொடர்ந்தால் அதற்கான உரிமையாளர் எங்கும் இருப்பர்.
- A new language is a new life - ஒரு புதிய மொழி என்பது ஒரு புதிய வாழ்க்கை
- If you people to understand you, speak their language - மக்கள் உள்னை புரிந்துக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் மொழியில் பேசு
- Knowledge of languages is the doorway to wisdom. - மொழியின் அறிவுபெற்றவன் ஞானத்தின் (வாயிலை அடைகிறான்)கதவைத்திறக்கிறான்.
- The limits of my language are the limits of my world. - என் மொழியின் எல்லை உலகத்தின் என் எல்லை
- Start early,drive slowly,Reach safely. - நேரத்தோடு தொடங்கு, மெதுவாய் இயக்கு, பாதுகாப்பாய் சென்றடைவாய்.
- Impatient on road, patient in hospital. - சாலையில் பொறுமைதவிர்த்தால் மரு்துவமனையில் பொறுமையாகிவிடுவாய் (நோயாளி ஆகிவிடுவாய்)
- Follow traffic rules, save your future. - சாலை விதியை கடைப்பிடி. வாழ்வை எதிர்காலத்திற்கு பாதுகாத்து வை.
- While driving avoid phone or else your family will be left alone. - வானகத்தை ஓட்டும்போது கைப்பேசியில் பேசுவதை தவிர்த்துவிடு. இல்லையேல் உன் குடும்பத்தை தனிமையில் தவிக்கவிடுவாய்
- Know road safety, No injury. No road safety,know injury. - சாலை விதியை தெரிந்துக்கொள்வாய். விபத்தில்லா சாலையில் பயணம் செய்வாய். சாலை விதிகளை மறந்தால் சேதங்களை அறிந்துக்கொள்வாய்
- Donate blood! But not on roads. - இரத்ததானம் செய்! ஆனால் சாலை மீது அல்ல
- Drive, don't fly. - வாகனத்தை ஓட்டு பறக்காதே!
- Green Belt Movement - பசுமை வளாக இயக்கம்.
இலக்கிய நயம் பாராட்டல் (4)
1. முச்சங்கங் கூட்டி
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
முன்னுரை: முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன், சிறுகூடல் பட்டியில், சாத்தப்பன் விசாலாட்சி தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார். எண்ணற்ற திரையிசை பாடல்களால் மக்கள் மனங்களைக்கொள்ளைக்கொண்டார். கவியரசர் என்ற போற்றுதலுக்கு உரிய இவர், சிறுகதை, காவியம், கட்டுரைகளை நமக்கு படைத்தளித்துள்ளார். இவர் அளித்த ‘அர்த்தமுள்ள இந்துமதம்' இந்துக்கள் மட்டுமின்றி அனைவராலும் போற்றி படிக்கப்படவேண்டிய நூலாகும். மாபெரும் போற்றுதலுக்குரிய இவர் இயற்றிய ‘முச்சங்கங் கூட்டி' எனும் பாடலின் நயத்தை பின்வருமாறு காண்போமாக!
திரண்ட கருத்து:
"வாழைக்கு குருத்து அழகு
கவிதைக்கு கருத்து அழகு”
பாடலின் கருத்து:
✓ மூன்று சங்கங்களை சேர்த்து,
✓ அதில் அறிவில் சிறந்த புலவர் பலரை சேர்த்து,
✓ அச்சத்தின் வழியாக பொருள் பொதிந்த பல இலக்கியங்களை படைத்தளித்து,
✓ சொல்லின் சுவை மிகுந்த கவிதை சங்கமாக சேர்த்து,
✓ அற்புதங்களைச் செய்தவள் நம் தமிழன்னை ஆவாள் என்று தமிழன்னையை பாராட்டுகிறார்.
மையக்கருத்து:
சங்கம் வளர்த்து புலவர்களை நூல் பல படைக்கச்செய்து சொல்லாலும், பொருளாளும் சுவை படைத்தளித்து தந்தவள் நம் தமிழன்னை எனப்புகழ்கிறார்.
தொடை நயம்:
“தொடையற்ற பாட்டு நடையற்று போகும்”
✓ மோனை:
"முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை”
முச்சங்கங் - முதுபுலவர்
அச்சங்கத் - அளப்பரிய
சொற்சங்க - சுவைமிகுந்த
அற்புதங்கள் - அமைத்த
இவ்வாறு சீர் மோனை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ எதுகை:
“இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை”
முச்சங்கங் - அச்சங்கத்
சொற்சங்க - அற்புதங்கள்
இவ்வாறு அடி எதுகை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ இயைபு:
“இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு”
புலவர்தமைக்கூட்டி - பொருள் கூட்டி
கவிகூட்டி - பெருமாட்டி
இவ்வாறு இயைபு பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
➢ அணி நயம்:
“ஆண்மகனுக்கு பணி அழகு
கவி மகளுக்கு அணி அழகு"
இப்பாடலில் கூட்டி எனும் சொல் பலமுறை வந்து சேர்த்து எனும் ஒரே பொருளைத் தருவதால் “சொற் பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது.
➢ சந்த நயம் :
“ அரசனுக்கு அவை அழகு
கவிதைக்கு சுவை அழகு”
இப்பாடலில் தமிழ் அன்னையை பெருமைப்படுத்திப்பாடியுள்ளதால் , இதில் ‘பெருமிதச்சுவை’ பயின்றுவந்துள்ளது.
➢ முடிவுரை:
தமிழ் கவிஞர்கள் அருமைமிகு உணர்வுகளை சுவைமிகு கவிதையாக படைத்தளித்தமையால்தான் இன்றளவும் தமிழ் கன்னித்தமிழாகத் திகழ்கிறது.
2. பிறப்பினால் எவர்க்கும் உலகில்
பிறப்பினால் எவர்க்கும் உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே - உலகம்
நாடும் மேற்குலத்தார்!
தின்மை செய்பவரே - அண்டித்
தீண்ட ஒண்ணாதார்!
• கவிமணி தேசிக விநாயகம்
முன்னுரை: குமரி மாவட்டம் தேரூரில் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமிக்கு மகனாகப்பிறந்தார். பக்தி, இலக்கியம், வரலாறு, இயற்கை, வாழ்வியல் போராட்டம், சமூகப்பாடல், தேசியப்பாடல், குழந்தை இலக்கியம் போன்ற எல்லா தளங்களிலும் கவிதைகளை படைத்தளித்துள்ளார். கவிமணி என போற்றுதலுக்குரிய இவர் ‘குழந்தை கவிஞர்' என அழைக்கப்படுகிறர். சிறப்புகுரிய இவர் இயற்றிய இப்பாடலின் நயத்தை பின்வருமாறு காண்போமாக.
➢ திரண்ட கருத்து:
“வாழைக்கு குருத்து அழகு
கவிதைக்கு கருத்து அழகு”
✓ பாடலின் கருத்து:
✓ பிறப்பினால் யாருக்கும் பெருமை வந்துவிடாது.
✓ தங்களுடைய சிறப்பான செய்கையால்தான் பெருமை வரும்.
✓ நன்மை செய்பவரே உலகின் மேற்குலத்தவர் ஆவார்.
✓ தீமை செய்பவர்கள் நெருங்கக்கூடாத கீழ் குலத்தவர் ஆவார்.
➢ மையக்கருத்து:
பிறப்பைக்கொண்டு, மேல்குலம் கீழ் குலம் என்று சாதி முறைகளை கூறாதீர். நாம் செய்யும் செயல்கள்தான் நம்மை மேலவர் கீழவர் என மதிக்க வைக்கும் என்று கூறுகிறார்.
➢ தொடை நயம்:
“தொடையற்ற பாட்டு நடையற்று போகும்”
✓ மோனை:
"முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை”
பிறப்பினால் - பெருமை
சிறப்பு · செய்கை
நன்மை - நாடும்
தின்மை - தீண்ட
இவ்வாறு சீர் மோனை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ எதுகை:
“இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை”
பிறப்பினால் - சிறப்பு
நன்மை - தின்மை
இவ்வாறு அடி எதுகை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ இயைபு:
“இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு”
வாராதப்பா - வேண்டுமப்பா
மேற்குலத்தார் - ஒண்ணாதார்
இவ்வாறு இயைபு பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
➢ அணி நயம்:
“ஆண்மகனுக்கு பணி அழகு
கவி மகளுக்கு அணி அழகு”
இப்பாடலில் அப்பா எனும் சொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால் “சொற் பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது.
➢ சுவை நயம் :
“ அரசனுக்கு அவை அழகு
கவிதைக்கு சுவை அழகு”
இப்பாடலில் சாதி கொடுமையை சாடி பாடியுள்ளதால் ‘வெகுளிச்சுவை’ பயின்றுவந்துள்ளது.
➢ முடிவுரை:
தமிழ் கவிஞர்கள் அருமைமிகு உணர்வுகளை சுவைமிகு கவிதையாக படைத்தளித்தமையால்தான் இன்றளவும் தமிழ் கன்னித்தமிழாகத் திகழ்கிறது.
3. அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?
- பாரதிதாசன்
முன்னுரை: கனகசுப்புரத்தினம் என இயற்பெயர் கொண்ட பாரதிதாசன் புதுச்சேரியில் கனகசபை, இலட்குமி அம்மையாருக்கு மகனாகப்பிறந்தார். கவிதை மூலம் இவ்வுலகத்தை கைக்குள் கொண்டுவந்தவர். ‘புரட்சி கவி' என போற்றுதலுக்குரிய இக்கவிஞரின் பாடலின் நயத்தை பின்வருமாறு காண்போமாக.
➢ திரண்ட கருத்து:
“வாழைக்கு குருத்து அழகு
கவிதைக்கு கருத்து அழகு”
✓ பாடலின் கருத்து:
✓ மாலை இருளால் உலகம் இருவதைக்கண்டேன்.
✓ வானையும், திசைகளையும் அவ்வாறே இருளாய்க் கண்டேன்.
✓ அந்த இருள் சிரிப்பை நிலவால் கண்டேன்.
✓ சிந்தாமல் சிதறாமல் அழகை எல்லாம் ஒளியால் சேர்த்து
✓ இயற்கை அன்னை இந்தா என நமக்கு இரவின் அழகைத் தந்தாள்.
✓ அவளின் அழகை வண்ணத்தை வருணிக்க எவ்வாறு இயலும் என்று கவிஞர் சுட்டுகிறார்.
➢ மையக்கருத்து:
மாலை இருளால் உலகே இருண்டாலும், அந்த இருளை அழகு படுத்துவது நிலவாகும். நிலவால் இரவின் அழகை இயற்கை அன்னை நமக்கு அள்ளி தருகிறாள்.
➢ தொடை நயம்:
✓ மோனை:
"முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை”
அந்தியிருளாற் - அவ்வாறே
பிந்தியந்தக் - பெருஞ்சிரிப்பின்
சிந்தாமல் - சேகரித்துக்
இந்தாவென் - எழில்வாழ்வை
இவ்வாறு சீர் மோனை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ எதுகை:
“இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை”
அந்தியிருளாற் - பிந்தியந்தக்
சிந்தாமல் - இந்தாவென்
இவ்வாறு அடி எதுகை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ இயைபு:
“இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு”
கண்டேன் - நீதான்
சிரித்ததுண்டோ - வண்ணந்தானோ
இவ்வாறு இயைபு பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
➢ அணி நயம்:
“ஆண்மகனுக்கு பணி அழகு
கவி மகளுக்கு அணி அழகு”
இப்பாடலில் கண்டேன் எனும் சொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால் “சொற் பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது.
➢ சுவை நயம் :
“ அரசனுக்கு அவை அழகு
கவிதைக்கு சுவை அழகு”
இப்பாடலில் இயற்கையை வர்ணித்துப்பாடியுள்ளதால் , இதில் ‘உவகைச்சுவை’ பயின்றுவந்துள்ளது.
➢ முடிவுரை:
தமிழ் கவிஞர்கள் அருமைமிகு உணர்வுகளை சுவைமிகு கவிதையாக படைத்தளித்தமையால்தான் இன்றளவும் தமிழ் கன்னித்தமிழாகத் திகழ்கிறது.
4. பூமிச்சருகாம் பாலையை
பூமிச்சருகாம் பாலையை
புயலெனநான் மாற்றுவேன்! காற்றில்
பூக்களைப் பிய்த்துப் - போட்டுக்
கசியும் தென்றலாகிய பின்
இரவலரோடு பேசுவேன்!
இரவெரிக்கும் பரிதியை - ஏழை விறகெரிக்க வீசுவேன்
- நா. காமராசன்
முன்னுரை: தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். ‘கறுப்புமலர்கள்' ‘சூரியகாந்தி’ போன்ற சிறப்புமிகு கவிதை நூல்களைப்படைத்தளித்த இவ்கவிஞரின் பாடலின் நயத்தை பின்வருமாறு காண்போம்.
➢ திரண்ட கருத்து:
"வாழைக்கு குருத்து அழகு
கவிதைக்கு கருத்து அழகு”
✓ பாடலின் கருத்து:
✓ பாலைவனத்தை மாற்றி நீர் நிறைந்த நிலமாக்குவேன்.
✓ புயலை மாற்றி சிறுசிறு துண்டாக்கி தென்றலாக மாற்றுவேன்
✓ விண்மீனுடன் பேசி இரவோடு இரவாக காசாக மாற்றுவேன்
✓ சூரியனை ஏழைகளின் அடுப்பெறிக்க வீசுவேன் என்று கவிஞர் கூறுகிறார்.
➢ மையக்கருத்து:
இயற்கையை ஏழைக்கு ஏற்றவண்ணம் மாற்றி அமைப்பேன் என்று கவிஞர் கூறுகிறார்.
➢ தொடை நயம்:
✓ மோனை:
“தொடையற்ற பாட்டு நடையற்று போகும்”
"முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை”
பூமிச்சருகாம் - புயலைக்
இரவில் - இரவெரிக்கும்
இவ்வாறு மோனை சொற்கள் பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ எதுகை:
“இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை”
இரவில்- இரவெரிக்கும்
இவ்வாறு அடி எதுகை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ இயைபு:
“இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு”
கடலாக்குவேன்- தென்றலாக்குவேன்
பேசுவேன் - வீசுவேன்
இவ்வாறு இயைபு பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
➢ அணி நயம்:
“ஆண்மகனுக்கு பணி அழகு
கவி மகளுக்கு அணி அழகு”
இப்பாடலில் ஆக்குவேன் எனும் சொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால் “சொற் பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது.
➢ சந்த நயம் :
“ யானைக்கு தந்தம் அழகு
கவிதைக்கு சந்தம் அழகு”
இப்பாடல் நாட்டுப்புற பாடல் வகையைச் சார்ந்ததாகும். ஆகையினால் ‘சிந்து' எனும் ஓசை பயின்றுவந்து சந்த நயம் மிக்கதாக உள்ளது.
➢ முடிவுரை:
தமிழ் கவிஞர்கள் அருமைமிகு உணர்வுகளை சுவைமிகு கவிதையாக படைத்தளித்தமையால்தான் இன்றளவும் தமிழ் கன்னித்தமிழாகத் திகழ்கிறது.
5. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழுப்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.
- திரிகூடராசப்பக் கவிராயர்.
முன்னுரை: திருநெல்வேலி மாவட்டம் மேலகரம் எனும் ஊரில் பிறந்தவர் திரிகூடராசப்பக் கவிராயர். முத்துவிசயநாயக்கர் அவையின் கவிஞராகத்திகழ்ந்தவர். திருக்குற்றாலகுறவஞ்சியை இயற்றி குறவஞ்சி சிற்றியலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர் இயற்றிய இப்பாடலின் நயத்தைப் பின்வருமாறு காண்போம்.
➢ திரண்ட கருத்து:
"வாழைக்கு குருத்து அழகு
கவிதைக்கு கருத்து அழகு”
✓ பாடலின் கருத்து:
✓ ஆண்குரங்குகள் பெண்குரங்கிற்கு பழங்களைக்கொடுத்து கொஞ்சும்.
✓ அதைப்பார்த்த பறவைகள் கெஞ்சும்.
✓ கவிஞர்கள் அவ்வழகைப்பார்க்க தேவர்களை அழைப்பர்.
✓ வானிலிருந்து அலைஅலையாய் அருவி வீழும்
✓ அவ்வருவியில் சூரியரின் கதிரும் வழுக்கும்.
✓ பிறைநிலவு சூடிய சிவபெருமான் வீற்றிருக்கும் மலை எங்கள் குற்றால மலையே என்று திரிகூடராசப்பக் கவிராயர் பாடுகிறார்.
➢ மையக்கருத்து:
கனிகள் நிறைந்த மரங்களில் விலங்கினம், பறவையினம் மகிழ்ச்சியோடு விளையாட, அருவி கொட்டும் அழகில் சூரியனும் வழுக்கி விழ இத்தகைய எழில் மிகுந்த குற்றாலத்தில் எங்கள் சிவபெருமான் வீற்றிருக்கிறார் என்பதே பாடலின் மையக் கருத்தாகும்.
➢ தொடை நயம்:
“தொடையற்ற பாட்டு நடையற்று போகும்”
✓ மோனை:
"முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை”
வானரங்கள் - வான்கவிகள்
கானவர்கள் - கமனசித்தர்
கூனலிளம் - குற்றாலத்
இவ்வாறு சீர் மோனை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ எதுகை:
“இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை”
வானரங்கள் - கானவர்கள்
தேனருவி - கூனலிளம்
இவ்வாறு அடி எதுகை பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
✓ இயைபு:
“இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு”
கொஞ்சும் - கெஞ்சும் - ஒழுகும் - வழுகும்
அழைப்பார் - விளைவிப்பார்
இவ்வாறு இயைபு பயின்று வந்து இப்பாடல் நயமிக்கதாக அமைந்திருக்கிறது.
➢ அணி நயம்:
"ஆண்மகனுக்கு பணி அழகு
கவி மகளுக்கு அணி அழகு”
இப்பாடலில் கனி எனும் சொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால் “சொற் பொருள் பின்வருநிலையணி” பயின்று வந்துள்ளது.
➢ சுவை நயம் :
“ அரசனுக்கு அவை அழகு
கவிதைக்கு சுவை அழகு”
இப்பாடலில் தமிழ் அன்னையை உவகைப்பொங்கப்பாடியுள்ளதால் , இதில் ‘உவகைச்சுவை’ பயின்றுவந்துள்ளது.
➢ முடிவுரை:
தமிழ் கவிஞர்கள் அருமைமிகு உணர்வுகளை சுவைமிகு கவிதையாக படைத்தளித்தமையால்தான் இன்றளவும் தமிழ் கன்னித்தமிழாகத் திகழ்கிறது.
செய்யுள் 2 மதிப்பெண் வினாக்கள் (6)
-
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
✓ மலை மேட்டில் சூரியன் மறையும் போது தோன்றும் செம்மையின் இயற்கை அழகினையும்,
✓ மாலைவானம் சிவந்திருப்பது போல் உழைப்பால் சிவந்திருக்கும் உழைப்பாளர் கைகளின் அழகையும்
✓ தொழிலாளர் தோள்மீது முத்து முத்தாய் தோன்றும் வியர்வையின் அழகையும்
✓ வியந்து வியந்து பாட என் அருமை மிகு செந்தமிழே! உன் துணை இல்லாமல் என்னால் எப்படி பாட முடியும்.
✓ தமிழே! நின் துணை வேண்டும் என்று பாடுகிறார்.
-
‘நகரம் பட்டை தீட்டியவெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
✓ மழைக்காலத்தில் திடீரென வந்த சூரியனால், நனைந்த உலகம் குளிர் காய்கிறது.
✓ குளித்து முடித்த நகரம் பளிச்சென இருந்தது.
✓ ஈரத்தின் துளிகளில் சூரிய கதிர் பட்டு வைரம் ஒளிர்வதுப்போல் காட்சி அளித்தது.
-
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
✓ மனிதனுக்கு ஆகாரம் மழை
✓ மழைக்கு ஆதாரம் மரம்
✓ மரமில்லா இடம் மரணத்திற்கான விடம்.
✓ சிந்தியுங்கள் சிந்தும் வானம் பெறுவது எப்படி என்று?
✓ கொஞ்சம் உதவுங்கள். கொஞ்சும் மரங்களை நடுங்கள்
-
நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
• இராமனைக் கண்டதால், தன்னுடைய பொய்யான உலகப் பற்று அழிந்தது.
• தான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது.
• தன்னுடைய பிறவியும் ஒழிந்தது என சவரி நிலையாமையை பற்றி உரைக்கிறாள்.
-
எதிர்பாராத நிகழ்வுகளை ஜமாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
• ஆனந்தம், சோர்வு, அற்பத்தனம் இவை எல்லாம் எதிர்பாராத நிகழ்வுகள்.
• இவை எதிர்பாராத, அழையாத விருந்தாளிகள் என்று உருவகப்படுத்துகிறார்.
-
‘துன்பு உளது எனில் அன்றோ சுகம் உளது?” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
➢ ‘இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே!' என குகன் வருந்துவதைக்கண்டு, இராமன் துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும்.
➢ இதன்பொருளானது, நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு பொருந்துவதாயிற்று.
-
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விடமேம்பட்டவர் ஆவார்.
-
ஞாலத்தின் பெரியது எது?
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்தால். அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.
-
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக் கூடாது. ஒருவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடவேண்டும்.
-
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
-
சினத்தை ஏன் காக்க வேண்டும்?
ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.
-
இடையீடு - எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.
-
வசனம், கவிதை வேறுபாடு தருக.
• எதுகை மோனை சேர்க்காமல், அடியளவை அறிந்திடாமல், எழுதுகின்ற வடிவந்தான் வசனம்.
• யாப்பில் வந்து அடங்கும் வார்த்தைகளே கவிதை ஆகும்.
-
'எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்' - யார்க்கு?
• கலைத்தொழிலில் வல்ல புலவர்களுக்கு எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
-
கலிவிழா, ஒளிவிழா - விளக்கம் தருக.
திருவிழாால் ஏற்படும் மக்களின் மகிழ்ச்சி கலி விழா ஆகும். கபாலீச்சுரர் கோயில் பங்குனி உத்திரதிருவிழாவைக் காணும் பக்கதர்களின் கூட்டம் ஒளிவிழா ஆகும்.
-
‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே' - தொடருக்குப் பதவுரை எழுதுக.
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானே என்பது இத்தொடருக்கான பொருளாகும்.
-
எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
✓ சிரிப்பு, அழுகை, சிறுமை(இளிவரல்), வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என்று மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும்.
-
ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக.
➢ மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது ஒருமுக எழினி.
✓ மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது பொருமுக எழினி.
-
‘மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும் ' கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
• எரியறத இழுத்தா கொதிக்கிறது அடங்கும்.
-
மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
• மனத்தை அது போகும் போக்கில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
-
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
• பெரிய தேர்க்கு அச்சாணி போல் உருவத்தில் சிறியவரும் பேராற்றல் உடையவராகத் திகழ்வர் அதனால் உருவத்தைக்கண்டு இகழ்தல் கூடாது.
-
மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது?
• எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். எனவே மன உறுதி வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார்.
-
நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?
கள்ளுண்பவர்களை நஞ்சுண்பவர் என வள்ளுவர் இடித்துரைக்கிறார்.
-
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
தீக்காய்வார் அகலாது அணுகாது இருப்பதுபோல் அரசர்களைச் சார்ந்திருப்பவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
-
பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?
அறிவு நம்மை ஆபத்திலிருந்து காக்கும் கருவி ஆகும். பகைவராலும் உட்புகுந்து அழிக்க இயலாத அரணாக விளங்குவது அறிவாகும்.
-
அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
-
வறுமையும் சிறுமையும் தருவது எது?
ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமையும் சிறுமையும் தருவது வேறொன்றும் இல்லை.
-
நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடுக.
சொல்லுதல் யார்க்கும் எளிய: அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.ஏனெனில், இச்செயலை செய்து முடிப்பேன் என்று சொல்வது எல்லார்க்கும் எளிதாகும். ஆனால் சொல்லியபடி அந்த செயலை செய்து மடிப்பது என்பது அரிதாகும். காரிய உறுதி உடையவரே சொல்லியதை செய்து முடித்துக்காட்டுவர் என்பதை இக்குறளின் வழி உணர்ந்ததால் இக்குறள் எனக்கு மிகவும் பிடித்தமான குறளாகும்.
-
உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
-
அறிவுடை வேந்தனின்நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
✓ அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும் என்று பிசிராந்தையார் கூறுகிறார்.
-
செவியறிவுறூஉ துறையை விளக்குக.
✓ அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல், செவியறிவுறூஉ என்னும் துறை ஆகும்.
-
விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்' - யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?
பாவேந்தர் பாரதிதாசன், மயிலை சீனி. வேங்கடசாமியைப்பற்றி, அவரின் தமிழ் பற்றை, தமிழர் வரலாற்றை ஆய்ந்து எழுதிய காரணத்தால் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
-
முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
✓ ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
✓ அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்துகொள்கிறது.
✓ அடையாளம் இழந்த ஒருவர் முகத்தைத் தொலைத்தவராகிறார்.
✓ சமூகத்தின் இறுக்கமான சூழலில் சிக்கித்தவிக்கும் சிலர், தங்களின் அடையாளங்களை மீட்டெடுக்க வேட்கை கொள்ளுதல் வேண்டும்.
-
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
✓ இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே என்றனர்.
✓ வானம் இடிந்து விழவில்லையே என்றனர்.
✓ இன்னும் கடல் தண்ணீர் வற்றவில்லையே என்றனர்.
✓ இன்னும் இந்த உலகம் அழியாமல் தாமதிப்பது ஏனோ என்று வருந்தினர்.
-
பகையும் உளவோ பிற? பொருள் கூறுக.
நம்முடைய முக மலர்ச்சியையும், அகமலர்ச்சியையும் கொல்லுகின்ற பகையின் வலிமை, சினத்தை விட வேறு உண்டோ என்பதே இதன் பொருளாகும்.
உரைநடை 2 மதிப்பெண் வினாக்கள் (4)
-
நடை அழகியல் பற்றித் தொல்காப்பியத்தின் கருத்தைக் குறிப்பிடுக.
✓ ‘நடைபெற்றியலும்’ என்னும் ‘நடை நவின்றொழுகும்' என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
✓ ஆசிரிய நடைத்தே வஞ்சி: ஏனை வெண்பா நடைத்தே கலி என்றும் சொல்லுகிறது.
✓ நடை என்ற சொல், தெளிவான பார்வையோடு தொல்காப்பியத்தில் இடம் பெறுகின்றது.
-
புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு வரைக
➢ சில இடங்களில் தற்காலிகமாகத் தங்குமிடம் ‘புக்கில்’ எனப்படும்.
➢ திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம்’தன்மனை' எனவும் வழங்கப்பெற்றுள்ளன.
-
அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
• ஆத்திசூடி, கொன்றைவேந்தன்.
-
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
• காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்டது இந்நூலகம்.
• இதில் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் அடங்கியுள்ளன.
-
பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
• கதைநாயகி சன்னல்வழியாக தலையை நீட்டி வெளியே தெரியும் ஒரு காட்சியை வெறித்துப் பார்க்கிறாள்.
• அவள் தெருவைப் பார்ப்பது மட்டுமே காட்டப்படுகிறது
• அக்காட்சியில் ஒரு மகிழுந்து புறப்பட்டுச் செல்லும் ஒலி இணைக்கப்படுகிறது.
• இசை ஆனது பாத்திரங்களின் உணர்வுகளுக்கு விரிவுரை வழங்குவதாக அமைகிறது.
-
பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
✓ ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் அது கைகூடும்.
✓ ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின்.
-
எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.
நாம் உட்கொள்ளும் சோறு
✓ இதற்கு பின்னால் எத்தனையோ உழைப்பாளிகளின் உழைப்பு பொதிந்துள்ளது. உழுபவன், நாற்று நடுபவன், களைபறிப்பவன், நீர் பாய்ச்சுபவன், ஆநிரைகள் மேயாமல் பாதுகாப்பவன், பூச்சி கொல்லி அடிப்பவன், அறுவடை செய்பவன், நெல் அடிப்பவன், தூற்றுபவன், நெல்லிருந்து அரிசியை பிரித்தெடுப்பவன், சந்தை படுத்துபவன், வாங்கி வருபவன், அதனை ஆக்குபவன்.
✓ நாம் உணணும் ஒரு பிடி சோற்றில் எத்தனையோ பேரின் உழைப்புகள் அடிங்கி இருப்பதை போல நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னால் பலரின் உழைப்பு அடங்கி இருப்பதை நாம் உணர்வோமாக.
-
‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
✓ மயிலை வேங்கடசாமி எழுதிய தமிழர் வளர்த்த அழகுக்கலை' என்னும் நூல் கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முதல்நூல் ஆகும்.
செய்யுள் 4 மதிப்பெண் வினாக்கள் (8)
-
“செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்” தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
✓ சிவந்த சூரியன் உறங்க செல்வதற்காக மலையின் மேட்டை தலையணையாக பயன்படுத்தி மாலையில் மேற்கு நோக்கி பயணிக்கின்றது.
✓ அந்நேரத்தில் வானம் சிவந்த பூக்காடாக காட்சி அளிக்கிறது.
✓ இவ்வாறு இவ்வரியானது இயற்கையை கண்டு உவப்பு எய்திய அழகை அழகாய் கூறி நிற்கிறது.
✓ இதில் உருவக அணியும், உவகைச்சுவையும் பயின்று வந்து படிப்போர்க்கு கவிதையின் சுவையினை நல்குகிறது.
-
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு.
இடம்: தண்டியலங்கார நூலில், ‘பொருள் வேற்றுமை அணிக்கு’ எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்வரி ஆகும்.
பொருள் : கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தின் புற இருளை அகற்றுவது சூரியன் ஆகும்.
விளக்கம் : மலையில் பிறந்து நீரால் சூழ்ந்த இவ்வுலக உயிர்களின் அக இருளை போக்குவது தமிழாகும். புற இருளை போக்குவது சூரியன் ஆகும். .ஆனால் தமிழுக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை.
-
பின்வரும் இரு பாக்கங்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
1. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே. - நன்னூல்2. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா,வா! - சிற்பி பாலசுப்பிரமணியம்.✓ முதல்பாடலான நன்னூல் வரிகளில், பழைய வடிவம் இல்லாமல், காலத்திற்கேற்ப புதிய புதிய வடிவம் பெற்று திகழ்பவள் நம் தமிழ் அன்னை என உணர்த்துகிறது.
✓ இரண்டாம் பாடலான சிற்பியின் வரிகளில், மனித நேயத்தையும், சான்றோர்களையும் நமக்கு கொடுத்த பழைமை வாய்ந்த தமிழ் மொழியானது நம்மை புதுபிக்க, கூட்டை திறந்து கூவி வரவேண்டும் என்று உணர்த்துகிறது.
✓ இரண்டிற்குமான வேற்றுமை, புதுமை வேண்டும், பழைமையை மீண்டும் புதுபிக்க வேண்டும் என்பதே ஆகும்.
-
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து 'உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்' - இக்கவிதையின் அடி, 'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே' என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை நயவுரை செய்க.
✓ அய்யப்ப மாதவன் பாடலில் மழை பெய்த பின் வரும் சூரியனின் கதிரானது நீர் நிலைகளில் உள்ள நீரை உதடு குவித்து உறிஞ்சுகிறது.
✓ நீர் நிலை நீரை உறிஞ்ச நேரம் எடுக்கும். வயிறு நிறைந்ததும் ஓய்வெடுத்துக்கொள்ளும்.
✓ ஆனால் தூங்கும் பனிநீரை என்னும் நாட்டுப்புற பாடலில், பனியின் துளியை சூரியனின் கதிர்கள் வாங்கிக்கொள்கின்றன.
✓ ஒளிக்கதிர் வந்தவுடன் பனித்துளிகள் பருகப்பட்டு, மிச்சம் இல்லாமல் போய்விடும்.
✓ இரு பாடல்களிலும், கதிரால் நீர் துளியும், நீர் நிலையும் பருகப்படும் அழகை சுட்டிக்காட்டி, இயற்கையின் அழகை தெளிவாய் காட்டுகின்றன.
-
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
✓ உலகம் குளிருமாறு புதிய மழையானது பொழிந்துக்கொண்டிருக்கிறது.
✓ தாழ்வான பகுதிகளில் எல்லாம் நீரானது நிரம்பி வருவதால்,
✓ கோலையுடைய ஆயர், அவ்விடத்தை வெறுத்துவிட்டு, மேடான இடம் நோக்கி தன் ஆடு, மாடு, எருமை, பசுக்களை ஓட்டிச்செல்கின்றனர்.
✓ எப்பொழும் மேய்ச்சலுக்கு வந்துக்கொண்டிருந்த பழைய இடத்தை மழையின் பொருட்டுவிட்டுவிட்டு, வேறு இடம் நோக்கி செல்வதை சங்கடமாகக் கருதினார்கள்.
✓ குளிரை போக்கிக்கொள்ள ஆயர்கள் கூட்டமாக அமர்ந்து நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
✓ குளிரால் அவர்கள் பற்கள் நடுங்கின.
✓ இவ்வாறு வாடை காலத்தில் கோவலர்கள் தன்னை பாதுகாத்துக்கொண்டனர்.
-
குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
✓ இராமன், வீடணனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த தருணத்தில், குகனுடன் சேர்ந்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர், கதிரவன் மகனாகிய சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்.
✓ உள்ளத்தில் அன்புகொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்ந்து எழுவர் ஆனோம் என்றார்.
✓ உன் தந்தையராகிய தயரதனுக்கு, இதனால் கூடுதல் புதல்வர்கள் கிடைத்ததால் பெருமை அடைகிறார்.
✓ இவ்வாறு இராமன் வீடணனையும் தன் தம்பியாகக் கொண்டு பெருமை அடைகிறார்.
-
“வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
✓ இடம் : சத்திய மூர்த்தி மொழிப்பெயர்த்த ‘விருந்தினர் இல்லம்' எனும் கவிதை தலைப்பில் இடம் பெற்றுள்ள வரிகள் ஆகும்.
✓ பொருள் : வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றை இன்முகத்தோடு வரவேற்பாயாக. அவர்கள் வருகையால் அனுபவப் பாடத்தைப்பெற்றதால் அவர்களுக்கு நன்றி செலுத்து என்று கூறுகிறது இவ்வரிகள்.
விளக்கம் : மனித மனம் மனிதர் வாழும் இல்லமாகும். இந்த இல்லத்திற்கு ஆனந்தம், சோர்வு, அற்பத்தனம் என்று மாறி மாறி விருந்தினர்கள் வந்து போவார்கள். எல்லாரையும் வரவேற்க வேண்டும்.
✓ துக்கமாகிய விருந்தினர் வருகையால் மனம் என்ற வீடு துப்புரவு அடைகிறது. விருந்தினர் வருகைக்காக வீட்டை தூசி தட்டி துப்புரவு செய்து வரவேற்க வேண்டும்.
✓ வக்கிரம், அவமானம், வஞ்சனை, இவற்றை வாயிலுக்கே சென்று வரவேற்க வேண்டும். அவற்றால் புதிய அனுபவங்கள் கிடைப்பதால், நன்றி செலுத்துமாறு ஆசிரியர் கூறுகிறார்.
-
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
✓ கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான்.
✓ இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான். பின் இறந்துவிடுகிறான்.
✓ தன் தந்தையின் நண்பனாகிய கழுகுவேந்தனை தன் தந்தையாகவே கருதி, ஒரு மகனாக இருந்து இறுதி சடங்கினை செய்கிறார்.
✓ கண்டவர் வியக்கும்படியான அகில் மரக்கட்டைகளை அடுக்கி. தருப்பை புற்களை பரப்பி, பூக்களைதூவி, மணலால் அழகிய மேடை அமைத்து
✓ தன் தந்தையாகிய சடாயுவை தன் கரங்களால் தூக்கி சடங்கு செய்யும் மேடையின் மீது கிடத்தினார்.
✓ இறுதி சடங்கை மகன் போல இருந்து ஆற்றினார்.
-
இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
✓ அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
✓ அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விட மேம்பட்டவர் ஆவார்.
✓ உலகத்தில் வாழவேண்டிய அறநெயியில் நின்று வாழ்கின்றவர், வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.
✓ இவ்வாறு இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தல் வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
-
எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? - குறள் வழி விளக்குக.
✓ நாம் பிறர்க்கு எந்த உதவியும் செய்யாதிருந்த பொழுது, பிறர் நமக்கு ஒரு உதவி செய்திருந்தால் அவ்வுதவி இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் விட பெரியதாகும்.
✓ தக்க சமயத்தில் ஒரு செய்த சிறிய உதவி ஆனாலும், அது தகுந்த நேரத்தில் செய்யப்பட்டதால் அவ்வுதவி உலகத்தைவிட மிகப்பெரியதாகும்.
✓ எவ்வித பயனையும் ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் பயனை நாம் ஆய்ந்து பார்த்தால் அது கடலைவிட பெரிதாகும்.
✓ ஒருவர் தினை அளவே உதவி செய்திருந்தாலும், அதன் பயனை அடைந்தவர் அதனை பனை அளவு உயர்வாக கருதவர்.
✓ இவ்வாறு ஒருவர் செய்த உதவியானது உலகைவிட, கடலைவிட, ஈரேழு உலகைவிட பெரியது எனக் கூறுகிறார்.
-
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
➢ சினம் என்னும் பகையானது, நம் மகத்தில் தோன்றும் சிரிப்பையும், மனதில் தோன்றும் மகிழ்ச்சியையும் கொல்லும்.
✓ தன்னைக்காத்துக்கொள்ள விரும்புபவன், சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அந்த சினமே அவனை அழித்துவிடும்.
✓ சினம் தன்னை சேர்ந்தவரையும் அழித்துவிடும். நமக்கு பாதுகாப்பாக இருக்கும் உறவுகளையும் அழிக்கும் பகையாகும்.
✓ ஆகையால் சினத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் இனிய வாழ்வு வாழ்வாயாக என்று வள்ளுவர் கூறுகிறார்.
-
“மூன்றான காலம் போல் ஒன்று” - எவை? ஏன்? விளக்குக.
• மூன்றான காலம் போல் ஒன்று என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்.
• நம் மனதில் உள்ளதை நினைப்பவை எண்ணமாகும்.
• நாம் எண்ணியதை வெளியிடுவது வெளியீடாகும்.
• அதை கேட்பவர் நம் எண்ணியதையே புரிந்துக்கொள்வார்களா என்பது, யாராலும் உணர முடியாத ஒன்றாகும்.
• அதை வெளிப்படுத்தும் முகமாகத்தான் இக்கவிதையில், ‘சொல்ல விரும்பியது எல்லாம் சொல்லில் வருவது இல்லை' என்று சி. மணி குறிப்பிடுகிறார்.
-
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப்பாடல் பாடண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
• நெடுமான் அஞ்சி ஒவையாரை தன்னுடனே அரண்மனையில் தங்க வைத்து நாளும் நாளும் அவரின் தமிழை கேட்க வேண்டும் என விரும்பி, ஔவைக்கு பரிசில் தராமல் இருந்துவிட்டான்.
• இதை ஔவையார் உணர்ந்திருந்தாலும், அதியனிடம் கேட்காமல், வாயில் காவலனிடம் பரிசலருக்கு அடையாத வாயிலை உடைய அரசனிடம் கூறுங்கள் எங்களுக்கு எத்திசை சென்றாலும் சோறு உண்டுடென்று என்று சினத்தோடு கூறுகிறார்.
• இதில் அதியனை மறைமுகமாக அடையாத வாயிலை உடையவன் என புகழ்வதால் இப்பாடல் பாடாண் திணைக்கு பொருத்தமாயிற்று.
-
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
• கந்தகோட்டத்துள் எழுந்தருளியுள்ள இறைவனிடம் இராமலிங்க அடிகளார் பின்வருமாறு வேண்டுகிறார்.
• மனதை ஒருமுகப்படுத்தி இறைவனின் திருவடிகளை நாளும் தொழுகின்ற, உத்தமர்களின் உறவு வேண்டும் என்று வேண்டுகிறார்.
• உள்ளத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகரின் உறவு தன்னை பற்றாத வண்ணம் காக்க வேண்டும் என்று கூறுகிறார்.
-
பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
• இளம்பெண்கள் ஆரவாரத்துடன் கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய, பெரிய ஊர் திருமயிலை ஆகும்.
• திருமயிலையில் கபாலீசுவர் கோவில் கொண்டு வீற்றிருக்கிறார்.
• இந்த இறைவனுக்கு ஆரவாரத்தோடு கொண்டாடப்படும் பங்குனி உத்திர திருவிழாவில் கலந்துகொள்ளாமல் நான் வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார்.
-
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு' - இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
• சங்க காலத்தில் மக்கள் தங்களுடைய நிலங்களுக்கு தகுந்த படி தொழில் செய்து, பொருளை உற்பத்தி செய்தனர்.
• தங்களிடத்தில் உள்ள பொருளை பிறரிடம் கொடுத்து பிறரிடம் உள்ள பொருள்களை பெற்று, பண்ட மாற்று முறையில் வாழ்வை நடத்தி உள்ளார்கள்.
• நம் பாடப்பகுதியில் அமைந்துள்ள அம்மூவனார் பாடிய நெய்தல் நிலப்பாடலில், அழகும் இளமையும் வாய்ந்த உமணர் பெண் ஒருத்தி, உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ! என வாணிகம் செய்வதாக பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
• எனவே சங்க இலக்கிய வாணிப முறையில் பொருளில் ஏற்றத்தாழ்வு இல்லாத பண்டமாற்று முறையில் சிறப்பாய் வாழ்ந்திருக்கின்றனர் என்பது தெளிவாக நமக்கு புலனாகிறது.
-
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
✓ சிற்ப நூலாசிரியர்களால் நன்னிலத்தை ஆடல் அரங்கத்திற்காக தேர்ந்தெடுத்தார்கள்.
✓ மலைகளில் நீண்டு வளர்ந்த ஒருசாண் அளவு கணுக்கள் கொண்ட மூங்கிலைக்கொண்டு வந்தனர்.
✓ மூங்கிலால் முறையான அரங்கம் அமைத்தனர்.
✓ தம் கைபெருவிரலால் 24 அளவினைக் கொண்டதாக மூங்கிலை வெட்டினர்.
✓ அதுவே அரங்கம் அமைக்கும் அளவுகோலாகும்.
✓ ஏழுகோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும் ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.
✓ தூணின் நிழலானது அரங்கில் விழாதபடி அழகான நிலை விளக்குகளை நிறுத்தினர்.
✓ ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என மூன்றுவகை திரை சீலைகளை அமைத்திருந்தனர்.
✓ ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தையும் அமைத்தனர்.
✓ சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிடப்பட்டனர்.
✓ இவ்வாறு சிலப்பதிகாரத்தில் நாட்டிய அரங்கின் அமைப்பு புதுமையும், பொலிவும் பெற்று திகழ்ந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
-
ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.
✓ பெருமிதம் :
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுளனோ என வினவுதி
என் யாண்டுளனோ அறியேன்
புலி ஓர்ந்து போகிய கல்லளைப்போல ஈன்ற வயிறு இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!”
இவ்வாறு புறநானூற்றுப்பாடலில் தாய் தன் மகளை புலி என்றும் அவனை ஈன்ற வயிறு புலியின் கல்லறை என்றும், அவன் சென்றுள்ள இடம் போர்க்களம் என்றும் அவன் வீரத்தை பெருமிதம் பொங்கக் கூறி நிற்கிறாள்.✓ வெகுளி:
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” பாரதி நாட்டு மக்களின் வறுமைக்கண்டு சினமுற்று பாடிய இவ்வரிகளில் வெகுளி சுவை பயின்று வந்துள்ளது. -
கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதையே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
✓ எதிர்பார்ப்போடு வருகின்ற நாம் ஏமாந்து போவதும் உண்டு என நாம் ஒன்று நினைக்க, நடப்பது ஒன்று என்ற மனநிலையை கவிதையால் வடித்துள்ளார்.
✓ எப்படி எல்லாமும் வாழ்ந்தவர் இறந்த பிறகு ஒன்றிற்கும் உதவாதவர் ஆவார் என்ற எதார்தத்தை அழகாக தன் வரிகளில் வடித்துள்ளார்.
✓ நிறைக்குடம் ததும்பாது என்பதை ஆழ்கடலையும், ஆர்பரிக்கும் அலையையும் கொண்டு விவரித்துள்ளார்.
✓ இவ்வாறு கண்முன் நிகழும் நிகழ்வை கவிதையாக வடித்தெடுக்க முடியும் என்பதை முகுலன் அழகாக கூறியுள்ளார்.
-
அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?
• அறிவானது நம்மை ஆபத்திலிருந்து காக்கும் கருவி ஆகும். பகைவராலும் உட்புகுந்து அழிக்க இயலாத அரணாக விளங்குவது அறிவாகும்.
• மனம் போன போக்கில் நம்மை செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி, நல்வழி படுத்துவது அறிவாகும்.
• யார் எதைக் கூறினாலும் அதன் உண்மை பொருளை ஆராய்ந்து பார்ப்பது அறிவாகும்.
• பின்பு வரப்போவதை முன்னரே அறிந்து தன்னை காத்துக்கொள்ளும் அறிவுடையோர்க்கு நடுங்க வரும் துன்பம்மில்லை என வள்ளுவர் அறிவின் மேன்மையை இவ்வாறு விளக்குகிறார்.
-
மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
• ஒரு செயலின் வலிமை என்பது ஒருவனுடைய மனவலிமையே ஆகும். பிற வலிமைகள் வலிமை ஆகாது.
• இச்செயலை செய்து முடிக்கலாம் என்று சொல்லுவது எவர்க்கும் எளிதாகும். ஆனால் சொல்லியபடி அச்செயலை செய்து முடிப்பது என்பது அரிதாகும்.
• எண்ணிய செயலை எண்ணியபடி முடிப்பவர் யார் என்றால், வலிமை உடைய மனம் உடையவரே ஆவார்.
• இவ்வாறு வள்ளுவர் கூறும் மன உறுதி உடையவரே வாழ்வில் வெற்றி பெறுபவர் ஆவார்.
-
சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.
• மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்: இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
• நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை இவ்வாறு வள்ளுவர் சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையையும் பற்றி கூறுகிறார்.
-
வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?
• வாளை வெளிப்படையான பகைவருக்கும், பாம்பை பழகி கெடுக்கும் உறவினர்கும் சான்றாக குறிப்பிடுகிறார்.
• ஏனெனில் வாளைப்போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும். அகத்தில்
-
சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்க.
• உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.
• கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது ஆகும் என கள்ளுண்பவர்களின் இழி நிலையைக்குறிப்பிடுகிறார்.
• ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
• சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். இவ்வாறு
• சூதால் ஏற்படும் இழிநிலையை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
-
அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக, தமிழ்நதி கூறுகிறார்?
✓ பொட்டல் வெளியில் போர் ஓய்ந்து பிறந்த ஒரு குழந்தை போல அதிசய மலரொன்று இதழ்விரித்து சிரிக்கின்றது.
✓ இம்மலர்ச்செடியானது, யானையின் எச்சத்தில் மிச்சமாய் தோன்றி இருக்கலாம், யாருடைய காலணி அடிப்பகுதியில் ஒட்க்கொண்ட விதை விழுந்து உயிர்ப்பு பெற்றிருக்கலாம்,
✓ எப்படியோ தப்பி பிழைத்து முளைத்த பாலைவனத்தில் பூத்த அதிசய மலரை எப்படியோ அடையாளம் கண்டு பறந்து வந்த வண்ணத்துப்பூச்சி போல் பறவைகளும் இம்மலரை நாடி வருதல் கூடும்.
✓ இச்செடியிலிருந்து காடு பெருகலாம், மழை உருவாகலாம், பாலைவனம் சோலை வனமாகலாம்.
✓ நம்பிக்கை என்னும் ஒன்றை பற்றிக் கொண்டு பூத்திருக்கிறது இந்த அதிசய மலர்.
-
எங்கிருந்தோ வருகிறது வண்ணத்துப்பூச்சியொன்று பறவைகளும் வரக் கூடும் நாளை - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் : ‘அதன் பிறகு என்றும்' எனும் கவிதை தொகுப்பிலிருந்து இடம்பெற்ற அதிசய மலர் எனும் கவிதையின் வரிகள் இவை. இதன்ஆசிரியர். தமிழ்நதி (கலைவாணி) என்பவராவார்.
பொருள் : எப்படியோ தப்பிய விதை பச்சையம் இல்லாத பாலைவனத்தில் முளைத்து பூத்த அதிசய மலரை, எப்படியோ அடையாளம் கண்டுக்கொண்டு வண்ணத்துப்பூச்சி ஒன்று வருகிறது. நாளை பறவைகளும் இப்பூவை நாடி வரலாம் என்று ஆசிரியர் கூறுகிறார்.
விளக்கம் : பொட்டல் வெளியில் போர் ஓய்ந்து பிறந்த ஒரு குழந்தை போல அதிசய மலரொன்று இதழ்விரித்து சிரிக்கின்றது.
✓ இம்மலர்ச்செடியானது, யானையின் எச்சத்தில் மிச்சமாய் தோன்றி இருக்கலாம், யாருடைய காலணி அடிப்பகுதியில் ஒட்க்கொண்ட விதை விழுந்து உயிர்ப்பு பெற்றிருக்கலாம்,
✓ எப்படியோ தப்பி பிழைத்து முளைத்த பாலைவனத்தில் பூத்த அதிசய மலரை எப்படியோ அடையாளம் கண்டு பறந்து வந்த வண்ணத்துப்பூச்சி போல் பறவைகளும் இம்மலரை நாடி வருதல் கூடும்.
✓ இச்செடியிலிருந்து காடு பெருகலாம், மழை உருவாகலாம், பாலைவனம் சோலை வனமாகலாம்.
✓ நம்பிக்கை என்னும் ஒன்றை பற்றிக் கொண்டு பூத்திருக்கிறது இந்த அதிசய மலர்.
-
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
✓ ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
✓ நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
✓ எனவே அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும் என்று பிசிராந்தையார் கூறுகிறார்.
-
கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப் படுத்துக.
✓ பேகன் - ஆவினன்குடி என அழைக்கப்படும் பழநி மலையை ஆண்ட இவன் மயில் குளிரால் நடுங்குவதைக்கண்டு தன் ஆடையைக் கொடுத்தான்.
✓ பாரி - பறம்பு மலையை ஆண்டவன். முல்லைக்கொடி ஒன்று பற்றிப்படர கொம்பின்றி தவிப்பதைக்கண்டு தன் தேரினை கொடுத்து அக்கொடியினை படரவிட்டான்.
✓ காரி - மலையமான் நாட்டை ஆண்டவன். தன்னை நாடி வரும் இரவலர்களுக்கு, பொன் பொருளுடன் குதிரையையும் பரிசாக அளித்து மகிழ்ந்தவன்.
✓ ஆய் - பொதிய மலையை ஆண்டு வந்தவன். ஒளிமிக்க நீல கல்லினையும், நாகம் கொடுத்த ஆடையையும் இறைவனுக்கு அளித்தவன்.
✓ அதியன் - தகடூரை ஆண்டவன். நெடுநாள் உயிர்பெற்று வாழ வைக்கும் அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்தவன்.
✓ நள்ளி - நளி மலையை ஆட்சி செய்தவன் . தன்னிடம் உள்ள செல்வத்தை இல்லை என்று கூறாது, வறிவரின் குறிப்பறிந்து, அவர் உள்ளம் நிறையும் வண்ணம் கொடுப்பதில் சிறந்தவன்.
✓ ஓரி - கொல்லி மலையை ஆண்டவன். தன் மலை நாட்டை கூத்தருக்கு பரிசாக அளித்தவன்.
-
‘ஈசன் மகன் நின்றனர் ஒர் ஏழையென ஓர்மின்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் : எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் நூலில் இடம் பெற்றுள்ள வரிகள் ஆகும்.
பொருள் : தன்னை கட்டும் பொழுது அமைதியாக நின்றதன் காரணம், தன் வலியால் அவர்களுக்கு பாவம் வந்து சேராமல் இருக்க வேண்டும் என்ற கருணையே ஆகும். அதனால் அவர் ஓர் ஏழை போல் அமைதியான நின்றார்.
விளக்கம் : தம் மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படும் தன்மையால், ஏசு ஒரு ஏழைப்போல் அமைதியாக நின்றார்.
-
கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.
• தனக்கு விருப்பமானதை பிறருக்கு கொடுப்பதைவிட பிறருக்கு விருப்பமாதை தருதல் வேண்டும்.
• தனக்கு மிஞ்சய பிறகு தானம் என்பதை விட தனக்கு இல்லை என்றாலும் பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைதல் வேண்டும்.
• தானம் என்படு பணமோ பொருளாகவோ கூட இல்லாமல், உடலாலும், உழைப்பாலும் கூட உதவி செய்தல் தானமாக கருதலாம்.
• தினமும் ஏதேனும் ஒருவகையில் நாம் முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.
• சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளபடி தன் வருமானத்தில் நாளில் ஒரு பகுதியை மற்றவருக்கு அளிப்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும்.
• நம்முடைய தானம் விழலுக்கு இறைத்த நீராக அமையாமல், பயிருக்கு செல்லும் நீராக பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
உரைநடை 4 மதிப்பெண் வினாக்கள் (8)
-
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.
✓ எந்த ஒரு தொன்மையான மொழியும் சைகைகளிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்கி இருக்கின்றன.
✓ இதற்கு சங்கப் பாடல்களே சிறந்ததொரு சான்றாகும்.
✓ "கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே” இப்புறநானூற்று பாடலில், பாரியின் பறம்பு மலையை மூவரும் சேர்ந்து வந்தாலும் அடைய இயலாது. இரவலர் போல் பாடி பரிசில் பெற வந்தால் பெறலாம் என்ற கருத்தை வன்மையாக உரைக்கிறது. இப்பாடலில் வல்லின எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வந்து ஒலியால் நிறைந்திருக்கின்றது.
✓ “படாஅம் ஈத்த” எனும் புறநானூற்றுப்பாடலில் அளபெடையாலும், “புணரின் புணராது” எனும் பாடலில் அணியாலும், “நுந்தை தந்தைக்கு” எனும் பாடலில் மெல்லினம், சீர் எதுகையால் நிரம்பி வந்து ஒலிக்கோலங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
✓ இவ்வாறு சங்கப்பாடல்களில் ஒலிக்கோலங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பண்பாக விளங்குகின்றன.
-
மழைவெள்ள பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
✓ பேரிடர்க் காலங்களில் தாங்கக் கூடியவையாக புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
✓ நீர்வழிப் பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
✓ சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
✓ கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை வளர்த்தல் வேண்டும்.
-
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் - எவ்வாறு?
✓ இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே, இல்வாழ்வில் பயனாகும் என சங்ககால மக்கள் எண்ணினர்.
✓ அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய சமூக அமைப்பு ‘கூட்டுக்குடும்பத்தை' வலியுறுத்துகிறது.
-
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
✓ காலையில் எழுந்து, என்னுடைய வேலையை யாரையும் எதிர்ப்பார்க்காமல் நானே செய்துக்கொள்வேன்.
✓ என் தந்தைக்கும், தாயுக்கும் ஏதேனும் வேலையை செய்து உதவியாக இருப்பேன்.
✓ மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய நான், உடைமாற்றி கைகால், முகம் கழுவிவிட்டு பாடம் படிப்பேன்.
✓ அம்மாவிற்கு உதவியாக அவர்கள் வந்தவுடன் சாப்பிடுவதற்கு சிற்றுண்டி எடுத்து வைப்பேன்.
✓ என் அப்பா வந்தவுடன் அவர் கொண்டு சென்ற உணவு பாத்திரங்களை கழுவி வைப்பேன்.
✓ சமைத்த உணவை சாப்பிடுவதற்கு உணவு மேசைக்கு கொண்டுவந்து வைப்பேன்.
✓ அனைவரும் சாப்பிட்ட பிறகு, பாத்திரத்தை கழுவும் இடத்தில் கொண்டு போடுவேன்.
✓ விடுமுறையில் என் பெற்றோரின் அனுமதியுடன் பக்கத்து வீட்டிற்கு விளையாடச்செல்வேன்.
✓ மொத்தத்தில் தொல்லை தராத நல்லப்பிள்ளையாக நடந்துகொள்வேன்.
-
நீவிர் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்?
• வகுப்பிற்குள் நுழையும் பொழுதே புன்னகையுடன் நுழைவேன்.
• அனைவரும் சாப்பிட்டார்களா? எனக் கேட்டறிவேன்.
• அனைவரின் முகத்தையும் ஒருமுறை நோக்குவேன்.
• வாட்டமிருந்தால் அருகில் அழைத்து, கவலையை போக்குவேன்.
• புத்தகம் இல்லாமல் பாடம் நடத்துவேன்.
• நான் மாணவன் போலவும் மாணவர்களை ஆசிரியராகவும் மாற்றி பாடம் நடத்துவதை ரசிப்பேன்.
• மாணவர்களுடன் விளையாடுவேன்.
• அவர்கள் கூறுவதை காது கொடுத்துக்கேட்பேன்.
• தேர்வு என்ற பயத்தையும், படிப்பு என்ற பாரத்தையும் கருதாத வண்ணம் கற்பித்தல் செய்வேன்.
-
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
• ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன.
• நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுதுவதைப் போன்ற வேகத்தோடே ஏட்டில் எழுதுவதுண்டு.
• மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டுமென்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தனித்தனியே ஏடுகளில் தாமே மேலே எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள்.
• இன்று கையெழுத்து பயிற்சி ஏடு, அச்சிட்டு மாணவர்களின் கையெழுத்து அழகினை வளர்க்கின்றன.
-
திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
✓ காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது.
✓ திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட இரண்டாம் இடம்தான்.
✓ முதல்காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச்சீட்டைக் கொடுப்பாள்.
✓ அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள்.
✓ எண் 7, வீரையா தெரு - ஒருவர் சொல்லி முடிப்பதற்குள், அந்த முகவரியில் காட்சி சென்று நிற்கும்.
✓ இவ்வாறு திரைப்படத்தில், காட்சி மறைவு, உதயம், கலவை அழிப்பு என மாறி மாறி வந்துக்கொண்டே இருக்கும்.
-
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
✓ வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
✓ சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல்,
✓ உரிய நேரத்தில் விதைத்தல்,
✓ நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்,
✓ அறுவடைக்குப்பின் பாதுகாத்தல்,
✓ உரிய விலை வரும்வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் நிர்வாகநெறியும் இணைந்தால்தான் வேளாண்மை செழிக்கும்.
-
மயிலை சீனி.வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.
➢ சென்னை மயிலாப்பூரில் 16.12.1900 -ல் பிறந்த இவர், 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிலும் இவர் ஓர் சிறந்த தமிழ் ஆராய்ச்சியாளர்.
✓ மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ.
✓ அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன.
✓ நூலகங்களே அவரது தாயங்களாகின.
✓ அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
✓ புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை தன் ஆய்வின் அணுகுமுறைகளாகக் கொண்டவர்.
✓ அவரின் சீரிய தமிழ் ஆராய்ச்சி தொண்டினை வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியாத ஒன்றாகும்.
✓ தமிழர் ஆகிய நாம் ஆராய்ச்சி செய்ய இயலவில்லை என்றாலும், இவர் செய்த ஆராய்ச்சி நூலை படித்தாகிலும் பயன்பெறுபோமாக.
செய்யுள் 6 மதிப்பெண் வினாக்கள் (6)
-
பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
முன்னுரை : தாய், தந்தை, உடன் பிறப்பு ஆகிய உறவுகளை எல்லைக்கடந்து விரிவு படுத்தி நிற்பவன் இராமன். அவனுடைய அன்பிற்கு எந்த வேலிகளும் இல்லை. அது எல்லைக் கடந்தது என்பதற்கு உதாரணமாக, நம் பாடப்பகுதியில், வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரின் தம்பி ஆகியோரிடம் அவன் காட்டும் அன்பு நமக்கு தெளிவாய் காட்டி நிற்கின்றன.
வேடவனின் மீது கொண்ட அன்பு:
கங்கை கரையை கடப்பதற்கு இராமனுக்கு உதவிய குகன், இராமன் மீது அளவுகடந்த அன்பை காட்டி நிற்கிறான். அந்த அன்பை உணர்ந்த இராமன், அதற்கு கைமாறாக, குகனிடம் பின்வருமாறு கூறுகிறான்.
“நீ என் தம்பி. இலக்குவன் உன் தம்பி. சீதை உன் அண்ணி, குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதே ஆகும். நான் உன்னுடைய ஏவலுக்கு ஏற்ப பணிபுரிபவன்”
இந்நிகழ்வு இராமனுடைய பண்பின் உச்சத்தை பறைசாற்றி நிற்கிறதல்லவா?கழுகு வேந்தடனிடம் காட்டிய பரிவு:
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறை எடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான். பிறகு இறந்துவிடகிறான். தன் தந்தையின் நண்பனாகிய சடாயுவை தன் தந்தையாகவே எண்ணி, அவனுக்கு இறுதி சடங்கினை மகனாக இருந்து செய்து முடிக்கிறான். என்னே! அவனுடைய பரிவு!மூதாட்டி துறவியை தாயாக ஏற்ற பண்பு:
சவரி என்ற பெண் துறவி, தான் வாழ்வில் ஒரு முறையேனும் இராமனை காணுதலே தான் செய்யும் தவம் என்று காத்திருந்தாள். இராமனைக் கண்டதும், தன்னுடைய பிறவி பலன் முடிந்தது. இனி எனக்கு பிறவி வேண்டாம் என்று கூறுகிறாள். இராமன் அவளை அன்னை என அழைத்து, தாங்கள் என்றும் எனக்கு தாய் எனக் கூறி அவளை மகிழ்விக்கிறான். கைமாறு கருதாத அன்பிற்கு எடுத்துகாட்டு இவன் என்பது நமக்கு நன்கு புலனாகிறது.எதிரின் தம்பியை தன் தம்பியாக கருதியவன்:
இராவணனின் தம்பியாக இருந்த வீடணன், இராவணனின் தகாத செயலை தண்டித்தவன். காரணம் தன் அண்ணனைவிட இராமன் மீது இருந்த அன்பு. அந்த அன்பை மதித்த இராமன் அவனையும் தன் தம்பியாக ஏற்று, தன் தந்தை தசரனுக்கு இத்தனை புதல்வர்கள் ஆகிவிட்டோம். இனி உன் தந்தை ஆகிய தசரனுக்கு பெருமைதான் என தன் தந்தையை அவன் தந்தையாக கருதுமாறு செய்த கைமாறு யாருக்கு வரும்?முடியுரை:
செய்ந்நன்றியை பாராட்டுதல் அவசியம் என வள்ளுவர் கூறிய வழியை பின்பற்றியவன் இராமன். அவன் அன்பு என்ற பண்பிற்கு காட்சியாக நம்முன் என்றும் நிலைத்திருக்கிறான். -
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
நன்றியின் அளவு:
✓ நாம் பிறர்க்கு எந்த உதவியும் செய்யாதிருந்த பொழுது, பிறர் நமக்கு ஒரு உதவி செய்திருந்தால் அவ்வுதவி இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் விட பெரியதாகும்.
✓ தக்க சமயத்தில் ஒரு செய்த சிறிய உதவி ஆனாலும், அது தகுந்த நேரத்தில் செய்யப்பட்டதால் அவ்வுதவி உலகத்தைவிட மிகப்பெரியதாகும்.
✓ எவ்வித பயனையும் ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் பயனை நாம் ஆய்ந்து பார்த்தால் அது கடலைவிட பெரிதாகும்.
✓ ஒருவர் தினை அளவே உதவி செய்திருந்தாரும், அதன் பயனை அடைந்தவர் பனை அளவு உயர்வாக கருதவர்.நன்றி மறவாமை:
✓ ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று: அவர் செய்த தீமையை அப்பொதுதே மறந்துவிடுவது நல்லதாகும்.
✓ எந்த அறத்தை அழித்தவருக்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவர் செய்த உதவியை மறந்துவிட்டவருக்கு உய்வே இல்லை. -
சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
சினத்தை காத்தல்:
• தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே உண்மையில் சினம் காப்பவர். செல்லுபடியாகாத வலியவரிடத்தில், காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன? சினத்தை எவ்விடத்தும் காக்க வேண்டும்.
• தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்தும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்.சினமே பெரிய பகை:
• சினம் எனும் பகையானது நம் முகத்தின் சிரிப்பையும், மனத்தினுடைய மகிழ்ச்சியையும் அழித்துவிடும்.
• ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும். காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.தன்னை சேர்ந்தவரையும் அழித்துவிடும்:
• சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்துவிடும். -
கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
இதில் வெற்றி பெற
➢ எல்லாம் வேறு வேறு:
✓விண்ணும் விண்வெளியும் வேறு.
✓மண்ணும் மணலும் வேறு
✓பனியும் மழையும் வேறு
✓ புகழும் செல்வாக்கும் வேறு
✓ காட்சி வேறு கல்வி வேறு
✓ கவிதையும் உரைநடையும் வேறு வேறு➢ கவிதை ஆக்கம்
✓ அரிசி சோறாகிறது.
✓ அரும்பு பூ ஆகிறது.
✓சொல் கவிதை ஆகிறது.
✓ எதுகை, மோனை அற்ற எண்ணிலடங்காத வார்த்தை வசனமாகிறது.
✓யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை ஆகிறது.➢ கவிதை வரும்:
✓ கனி பழுத்தால் சாறு வரும்.
✓ வயலில் தண்ணீர் இருந்தால் ஏரு வரும்.
✓எழுத்திருந்தால் அசை வரும்
✓ அசையில் சீரும், சீரில் தளையும், தளையில, அடியும் வரும்
✓ இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தால் கவிதை எழுத வரும்.➢ தெரிந்தால் தெளியலாம
✓ எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை தெரிந்தால் கவிதை வரும்.
✓ தேமாவும், புளிமாவும் தெரிந்து எழுதினால் புலவர்களின் பாடலில் புகழ் தங்கும்.
✓ ஆனால் சாமானிய மக்களுக்கு புரியும் வண்ணம் கவிதை படைக்க வேண்டும்.
✓ உரத்தில் பயிர் விளைவது போல், அறம் பொருளில் கவிதை விளையும்.
✓ இவ்வாறு சுரதா தமிழ் இலக்கணம் அறிந்தால் கவிதை எழுதுவது இனிக்கும் என்று கூறுகிறார். -
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப்பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?
மயிலாப்பூர் - கபாலீசுவரம்:
✓ மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு, கோவில் திருவிழாக்கள் ஆகும்.
✓ கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள் ஆகும்.
✓ அத்தகைய திருவிழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூரில் பங்குனி உத்திர திருவிழாவானது, அன்று தொட்டு இன்று வரை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டுவருகின்றன.
✓ நம் பாடப்பகுதியில் திருஞான சம்பந்தர், "கயிலை பங்குனி உத்திர விழாவினை காணாமல் செல்வது முறையன்று. அந்த விழாவினை கண்டு களித்த பிறகே செல்வேன்” என்று கூறுவதாக அமைந்துள்ளது.கந்தகோட்டம்
✓ அடுத்ததாக இராமலிங்க அடிகளார், சென்னை கந்தக்கோட்ட முருகனிடம், இறைவனின் திருவடியை எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் உத்தமர்களின் உறவு வேண்டும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவாரின் உறவினை கைவிட்டு காத்தருள வேண்டும்.
✓ பொய் பேசாமலிருக்க வேண்டும், பெண் ஆசை பற்றாமல் இருக்க வேண்டும். மதம் பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும்.
✓ எப்பொழுதும் இறைவனே உன்னை மறக்காமல் இருக்க வேண்டும். நல்ல அறிவும், உன் கருணையும், நோயற்ற வாழ்வும் தருதல் வேண்டும் என்று ஆறுமுகமாகிய கந்தக்கோட்டத்து முருகப்பெருமானிடம் வேண்டி நிற்கிறார்.
✓ இவ்வாறு சென்னையில் உள்ள சிவனையும், முருகனையும் ஞான சம்பந்தரும், இராமலிங்க அடிகளாரும் வேண்டி நிற்கிறார்கள் என்பதை நம் பாடப்பகுதியாக அறிந்துகொள்வோமாக. -
அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக.
- அறிவுடையவனாக திகழ்ந்தால் அவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை காத்துக்கொள்பவனாக இருப்பான்.
- தவறுகள் செய்யாதவன் அறிவுடையவன்.
- கீழ்படிபவன் அறிவுடையவன்.
- எதிர்காலத்தை கணிப்பவன் அறிவுடையவன்.
- எதுவும் இல்லாதவனாக இருப்பினும் எல்லாம் இருப்பவனாகத் திகழ்பவன் அறிவுடையவன்.
- புகழுக்கு உரியவன் அறிவுடையவன்.
- ஆராய்ந்து அறிபவன் அறிவுடையவன்.
- உலகத்தோடு நட்பு கொள்பவன் அறிவுடையவன் என வள்ளுவர் அறிவுடையவன் இயல்பு, இலக்கணங்களை தன் குறள் வழி அழகாக விளக்கியுள்ளார்.
- நம் பாடப்பகுதியில் அறிவுடைமை பற்றி வள்ளுவர் கூறியுள்ள கருத்தை பின்வருமாறு காண்போம்.
- அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண்.
- மனம் போன போக்கில் நம்மை செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி, நல்வழி படுத்துவது அறிவாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. - யார் எதைக் கூறினாலும் அதன் உண்மை பொருளை ஆராய்ந்து பார்ப்பது அறிவாகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - பின்பு வரப்போவதை முன்னரே அறிந்து தன்னை காத்துக்கொள்ளும் அறிவுடையோர்க்கு நடுங்க வரும் துன்பம்மில்லை என வள்ளுவர் அறிவின் மேன்மையை இவ்வாறு விளக்குகிறார்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர். நோய்.
-
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக.
முன்னுரை:
ஒரு வாழ்வியல் நூல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது.வாழ்வியல் பதிவு:
வள்ளுவம் தான் தோன்றிய காலத்தோடு நின்று விடாமல் இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் வாழச்சொல்லிக் கொடுக்கிறது. வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கிறது. சாராசரி மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஒழுக வேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாகத் திருக்குறள் படைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடப்பகுதியில்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று
என்று வந்துள்ள குறள் வாழ்க்கையின் எதார்த்த உண்மையை நமக்கு உணர்த்துகிறதல்லவா?அன்றும் இன்றும்:
மது உயிருக்கு கேடு என்று விளம்பரம் படுத்திக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் அன்றே வள்ளுவர்,
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
எனும் குறட்பாவில், கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் வள்ளுவர் சுட்டுகிறார்.தனி தனி நபர்களும் தனக்குரியதாக்கிக் கொள்ளுதல் :
சோர்வில்லாதவன் அடக்கத்துடன் உழைப்பவன் விதியைக் கூட மாற்றி அமைக்கும் வலிமையைப் பெறுவான் என்றும், உயிர்களைக் கொல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் இருப்பவரைக் கண்டால், எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும் என்றும், தெய்வத்தை வழிபட்டு கூட, ஒரு செயல் நடக்காமல் போகலாம். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் ஒருநாள் கிடைத்தே தீரும் இன்னும் எத்தனையோ இது போன்ற கருத்துகள் வாழ்வில் தனக்கு தனக்கு என கடைப்பிடிக்கும் வகையில் வள்ளுவர் எழுதியுள்ளார்.முடிவுரை :
நாளும் வள்ளும் காட்டும் வழியை பின்பற்றி நடந்தால், மனித நிலை கடந்து, இறை நிலையை அடைவோம் -
எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன - நிறுவுக.
✓ முகமது இராவுத்தர் பாடிய "தேயிலைத் தோட்டப்பாட்டில்” எளிய மக்களின் வலிகளை காட்சிப்படுத்திக்காட்டுகிறார்.
✓ ஆதிகாலத்தில் நம் இந்திய தேசத்தில் கைத்தொழில்கள் பல மக்கள் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் திகழ்ந்தன. கைத்தொழில்களே மக்களின் அடிப்படை ஆதாரமாகவும் விளங்கின.
✓ நாகரீக வளர்ச்சியிலும், நாடு ஆளும் திறனிளும் செல்வ செழிப்புடன் திகழ்ந்தது இத்திருநாடு.
✓ சீரும் சிறப்பும் மிக்க நாட்டை அன்னியன் புகுந்து அத்தனையும் அழித்துவிட்டான்.
✓ தன் சொந்த இடத்தில் உயிர் பெற்று வாழ பேயினும், நாயினும் கீழாய் நம்மை பாடாய் படுத்தி, கங்காணிகள் கூலி வேலைக்கு அழைப்பார்கள்.
✓ கொஞ்சம் கடன் பெற்ற பணத்தை பெரும் தொகை பெற்றதாக கணக்கை மாற்றி எழுதி, வாழ்நாள் முழுக்க அடிமை வாழ்க்கை வாழ நம்மை தள்ளி விடுவர்.
✓ அக்கறை தேசம், அந்தமான் தீவு என பாராமல், ஈவு இரக்கமில்லாமல் நம்மை வெள்ளைக்காரன் தேயிலை தோட்டத்திலே சேர்த்துவிடுவர்.
• உணவுக்குவே தான் உழைத்த கூலி போதவில்லை என அரைவயிற்றில் அடிப்பார்கள்.
✓ இப்படி துன்பப்படுவதைவிட, நாம் ஒற்றுமையாய் இருந்து, கல்வி, ஒழுக்கம், பண்பாட்டில் சிறந்து, நம்மண்ணில் இன்பமாய் வாழ வழிவகுப்போமே! என நாட்டுப்புற பாடலாகிய தேயிலைத் தோட்டப்பாட்டு எளிய மக்களின் வலியை எடுத்து இயம்புகிறது.
-
எச்.ஏ. கிருட்டிணனார் ' கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
முன்னுரை :
மனிதனாக அவதரித்து, மனித உயிர்கள் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து, மோட்ச வாழ்வை எய்துவதற்காக சிலுவையில் தன்னை தியாகம் தந்த இயேசு பெருமானின் வதைபடலத்தை நம் பாடப்பகுதி வாயிலாக அறிய இயலுகிறது.கம்பராமாயணமும், இரச்சணிய யாத்திகமும் :
- கம்பராமாயணத்தில், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யகாண்டம் போல், கிறித்துவ கம்பரும் தன் நூலை ஆதி பருவம்,குமார பருவம், நிதான பருவம், ஆரண்ய பருவம், இரட்சணிய பருவம் எனப்பகுத்துள்ளார்.
- பெரும் பிரிவை காண்டம் என்றும், அதன் சிறு உட்பிரிவை படலம் என்று பிரித்திருப்பது போல கிருட்டிணரும் இரட்சணிய யாத்திகத்தை பிரித்து படைத்தளித்துள்ளார்.
இராமனும், இயேசுவும்:
- உலகத்தை காப்பதற்காக அவதாரம் எடுப்பவர் இராமன். அதுபோல உலக மக்களை இரட்பதற்காக மனிதனாக பிறந்தவர் இயேசு. கம்பர், இராமனின் தூய உள்ளத்தை தன் கவிதை நயத்தால் காட்சி படுத்தியதைப் போல இயேசுவையும் இவர் காட்சி படுத்தியுள்ளார்.
பாடப்பகுதி வாயிலாக அறியும் செய்திகள்:
- கயிற்றால் கட்டி துன்புறுத்தும் போது ஏழைப் போல அமைதியாக இருந்ததன் காரணம், தன் வலி அவர்களுக்கு பாவத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அவ்வாறு திகழ்ந்தார்.
- இகழ்ச்சி உரை நெஞ்சில் தீக்கொல்லியாக இறங்கியபோதும், அவர்கள் மேல் சினம் கொள்ளாமல் அமைதி காத்தார்.
- ஆடையை களைந்த போதும் அசைவற்று நின்றார். முள் முடி சூடிய போதும் முகம் சுளிக்கவில்லை.
- முகத்தில் உமிழ்ந்தனர். மக்கள் எவல்லாரும் வேதனை அடைந்தனர். இத்தனை கொடுமைகள் இறைவனுக்கு செய்யும் பொழுது,உலகம் அழியாமல் இன்றும் நிலைத்திருக்கிறதே என வேதனை அடைந்தனர்.
- இகழ்ந்தும், பழித்தும், துன்புறுத்தியும், வலிஏற்படுத்தியும், இரத்தம் பீறிட்டு எழும்பொழுதும் உள்ளத்தில் அமைதி உடையவராக இயேசு பெருமான் திகழ்ந்தார்.
கிருத்துவ கம்பரே :
- ஆசிரிய விருத்தத்தில் அமைத்து எழுதிய இப்பாடல்கள், சொல் சுவையிலும், பொருள் சுவையிலும், அனைத்து வகை நயங்களையும் பெற்று சிறப்பாய் திகழ்கின்றன.
- அழகிய தமிழில் கம்பனுக்கு நிகழாக படிப்பவர் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிய வண்ணம் எழுதிய உள்ள இக்கவிஞர் தமிழ் கவிஞர் எனினும், கிருத்துவத்தை தமிழில் அழகு படுத்திய விசித்திர கவி ஆதலால் இவர் கிருத்துவ கம்பரே எனக் கூறுவோம்.
உரைநடை 6 மதிப்பெண் வினாக்கள் (6)
-
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
முன்னுரை:
- பண்டைத் கவிஞருக்கு அழகியல் உணர்வு மேலோங்கி இருந்திருக்கிறது.
- தமிழ் அழகியலின் அடையாளம் சங்கஇலக்கியமாகும். அழகு பண்பாட்டின் உச்சம். அது நம் மொழியில் எங்கும் பரவி உள்ளது. இதனை பின்வருமாறு காண்போம்.
மொழிசார் கலை
- ❖ இலக்கியத்தையும் மொழியையும் பிரித்தறியாத அழகியல் இலக்கணம் கூறும் நூல் தொல்காப்பியம்.
- *கலைகளில் வேறுபடுவது கவிதைக்கலை
- ❖ பேசுபவன், கேட்பவன் சூழலுக்கு ஏற்ப இயற்றப்படுவது கலை
- ❖ வரலாறு முழுக்க மொழியின் ஈரம் இருந்துக்கொண்டே இருக்கிறது.
- *இலக்கியம் என்பது மொழிசார்ந்த கலை.
➢ நடையியல் விளக்கம்
- ❖ கவிதையின் நடையில் ஒலிக்கோலங்கள், சொற்களின் புலம், தொடரியல் போக்கு முக்கியமானதொன்றாகும்.
- * ‘நடைபெற்றியலும்’ ‘நடைநவின்றொழுகும்' என்னும் சொற்கள் தொல்காப்பியத்தில் நடையியல் பற்றிய செய்தியை தெரிவிப்பதாக உள்ளன.
- *ஆசிரியப்பாக்குள் வஞ்சிப்பாவும், வெண்பாக்குள் கலிப்பாவும் அடங்கும் என்று (தொல்) குறிப்பிடுகிறது.
- *மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமையான ஆற்றல் கவிதையின் மூலமும் இலக்கியங்கள் மூலமும் வெளிப்படுகின்றன.
- ❖ கவிதையின் இயங்காற்றல்தான் நடை.
- *எந்தஒரு மொழியும் சைகையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகின்றன.
- *அதுபோல் தான் மொழியிலிருந்து தோன்றிய எந்த கவிதையும் இசையோடும் இசை கருவியோடும்தான் பிறக்கிறது.
- *ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
- *(எ-கா) கடந்தடுதானை மூவிருங்கூடி...
- *இப்பாடல் வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்துவதால் வல்லின எழுத்துகள் மிகுந்துவந்துள்ளன.
- (எ.கா) படாஅம்... அளபெடை பயின்றுவந்துள்ளது
- *(எ-கா)புணரின் புணராது --- சொல்பொருள் பின்வருநிலையணி
- (எ.கா) நுந்தை தந்தைக்கு.... மெல்லினம் பயின்றுவருதல்
- ❖ நெடில், உயிர், வல்லினம், மெல்லினம், திரும்பவரல் போன்ற நிகழ்வுகள் ஒலிக்கோலங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன.
- *சொல்லில்தான் உணர்வும் பொருளும் கிடக்கின்றன.
- *கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்துகிடக்கின்றன.
➢ சொல்வளம் பண்பாட்டின் அடையாளம்.
- *எ-கா முல்லைக்கலி - காளையின் இனங்கள்
- ❖ எ-கா கி.ராஜநாராயணன் ‘கிடை’ நாவல் - ஆடுகளின் வகை
- ❖ தனி சொல்லாகவும்,ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் பிணைந்தும் மொழியின் சிறப்பை உணர்த்துகின்றன.
- ❖ சங்க இலக்கிய மொழியின் அடையாளம், தொகைநிலை ஆகும்.
- * தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு ஆகும்
- *அது வாக்கிய அமைப்பில் சொல் போலவே நடைபெறும்.
-
‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.
- முன்னுரை: உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படை மழையாகும்
- மழையானது பருவம் தப்பியும், பொய்த்தும் விடுகிறது.
- காரணம் திட்டமிடுதலின்றி பெருநகர பெருக்கம்.
- நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தாமையும் ஆகும்
➢ பெருவ மாற்றத்திற்கான காரணங்கள்
- இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கும், நிஷா, தானே, வர்தா போன்ற பெரும்புயல்கள் வாழ்வின் அடிப்படைகளைப் பாதித்திருக்கின்றன.
- நமது நாட்டில் ஐந்து ஆண்டுகளில் வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது.
- இத்தகைய மாறுபட்ட இயற்கை நிகழ்வுகள் நேர்வதற்கான காரணம் என்ன?
- புவி வெப்பமயமாதலே ஆகும்.
- தேவையான மரங்கள் இன்மையும், காற்று மாசு அடைதலும், பசுமைக்குடில் வாயுக்களுமே ஆகும்.
➢ புவி வெப்பமயமாதல் மனிதன் உருவாக்கிய சிக்கல்
- ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் நான்கு இலட்சம் சதுர மையில்கள் உருகியுள்ளது.
- கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர் வாயு இவைகளை பசுமைக்குடில் வாயுக்கள் என்றழைப்பர்.
- இதன் அளவு அதிகமாக அதிகமாக புவி வெப்பமடையத் தொடங்குகிறது.
- இதனால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, புவியின் இயக்கம் குறைந்து வருகிறது.
- சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தாவர ஆற்றல் போன்ற ஆற்றல்களை நோக்கி உலக நாடுகள் ஓரளவேனும் சென்றால் மட்டுமே வெப்பமயமாதலை தடுக்க முடியும்.
➢ திடக்கழிவு மற்றும் நெகிழி
- நெகிழியையும் திடக்கழிவுகளையும் கொட்டி நீர்வழிப் பாதைகளைக் குறுக்கி வெள்ளச் சமவெளிகள் இல்லாமல் செய்துவிட்டோம்.
- இன்று ஆற்றில் பாறைகள் தெரியும் அளவிற்கு மணல் அள்ளப்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாயிற்று.
- நிலத்தடி நீர் மட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது.
- புயல், மழை, பெருவெள்ளம், இயற்கைச் சமநிலை, புவி வெப்பமயமாதல், இயற்கை வளங்களைக் காத்தல், நீர்நிலைகளைப் பெருகச் செய்தல், பேரிடர்க் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து உரையாட வேண்டிய இன்றியமையாமையும் தேவையும் நமக்கு இருக்கிறது.
-
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
முன்னுரை:
✓ குடும்பம் என்ற உயரமைப்பின் மூலமே உலகச்சமூகம் இயங்குகிறது.
✓ சங்க காலத்தில் குடும்ப அமைப்பு மேலோங்கிய ஒன்றாக இருந்தது.
✓ குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம், என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.➢ குடும்பம் :
✓ குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.
✓ ‘திருமணம்’,’குடும்பம்' ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.
✓ குடும்பம் எனும் சொல் முமுதன்முதலில் திருக்குறளில்தான் வருகிறது.
✓ சங்க இலக்கியத்தில் ‘குடம்பை”குடும்பு,கடும்பு' ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையவை.
✓ ‘குடும்பு’ எனும் சொல் கூடி வாழுதல் என்றும் பொருள்படுகிறது.➢ வாழிடம்
✓ சங்க இலக்கியத்தில், இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வரைப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடங்களில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.
✓ ‘மனை’ எனும் சொல்’நம்மனை’, ‘தன்மனை', எம்மனை, என சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வாழிடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல்லாக உள்ளதை அறியலாம்.➢ மணந்தகம்
✓கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க கட்டமே’மணந்தகம்' எனப்படுகிறது.
✓ குடும்பமும் உயிர்களைப்போன்றே தோன்றி வளர்ந்து, பல நிலைகளை அடைகிறது.
✓இத்தகைய நீண்ட பாதையின் தொடக்கம் திருமணமே ஆகும்..➢ தாய்வழிக் குடும்பம்
✓ சங்ககாலத்தில் தாயே தலைமை ஏற்றிருந்தாள்.
✓ திருமணத்திற்கு பின்பும் பெண் தன் இல்லத்திலே வாழ்வை தொடர்ந்த தாய முறை இருந்திருக்கிறது.
✓‘இவளது மகன்' என்ற தொடரே மேலோங்கியது.
✓தாய்வழி சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.➢ தந்தைவழிக் குடும்பம்
✓ ஆண் சமூக முறை வலுவான வேர்
✓ மனையுற மகளிர்க்கு ஆடவரே உயிர் (குறுந் -125)
✓ பொருள் வயிற் பிரிவு, போர், வாழ்வியல் சடங்குகள், குடும்பம், திருமணம் எனப் பல்வேறு சமூகக் களங்களில் காண இயலும்.➢ தனிக்குடும்பம்
✓ தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை, எளிய மற்றும் நெருக்கமான குடும்பம் எனப்படும்.
✓ தனிக்குடும்பவகை, சமூகப் படி நிலையில் இறுதியாக ஏற்பட்ட ஒன்றாகும்.
✓ தொழில் சமூகத்தில் பெரும்பான்மையாக இருந்தாலும், ஆதிக்குடியில் முக்கியமான குடும்ப முறையாக இருந்திருக்கிறது என்ற ஒரு வாதம் உண்டு.➢ நிறைவுரை:
✓ இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வில் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினர்.
✓ சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளப் பெருமிதமாகும். -
பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
கற்பிக்கும் இடங்கள்:
பண்டைய காலத்தில் ஆசிரியர் இருப்பிடம் நோக்கி மாணவர்கள் சென்றார்கள். மன்றங்கள், மடங்கள், பாடசாலைகள், பள்ளிகள் என அவை மாறிமாறி பெயர்களில் இருந்தன. இவ்விடங்களில் மாணவர்கள் ஆசிரியரை நோக்கி பயணித்தார்கள். மரத்தின் அடியிலும், இயற்கை வழியிலும், குறிப்பிட்ட நேரம் காலம் இல்லாமல் அனுபவ வழியில் மிகுந்த குரு பக்தியுடன் கற்றல் நிகழ்வானது இருந்தது.தொடக்க கல்வி :
ஐந்து வயதில் தன் பிள்ளையை கல்விகற்க அனுப்பும் பெற்றோர்கள் ஏட்டின் மீது மஞ்சள் பூசி, பூசித்து ஆசிர்வதித்து அனுப்பி வைப்பார்கள். உபாத்தியாயர்கள் நெடுங்கணக்கை சொல்லி தருவார்கள்.எழுத்துகளை கற்றல் :
ஓலை சுவடியில் படிக்கும்பொழுது கண் கெடாமலிருக்க, வசம்பு, மஞ்சள், மணத்தக்காலி இலை சாறு, மாவிலைக்கரி, முதலியவற்றை கூட்டி மையாக செய்து அதன் மீது தடவி படிக்கச் செய்வர். இதனால் கண்களுக்கும் குளிர்ச்சி தரும். அடிப்படை இலக்கணம், சொற்வளம் ஏற்பட, தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, நீதி நூல்களை கற்பிப்பார்கள்.கையெழுத்திற்கு உபாத்தியாயர் தரையில் எழுது அமதன் மேல் பிள்ளைகள் எழுதி பழகுவார்கள். மனமனப்பயற்சிக்கென சிறுவயதில் வாய்ப்பாடுகள், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போன்றவற்றை படிக்க வைப்பார்கள்.
ஏடெழுதுதல் :
காகிதங்கள் இல்லாத காலத்தில், பனை ஓலைகளை முறையாக அடுக்கி அதை பொத்தலிட்டு கம்பிக்கொண்டு கோர்த்து, ஏடுபோல் வைத்து, அதில் எழுதவதற்கு வகைவகையான எழுத்தாணிகளை வைத்திருந்தார்கள்.தண்டனை இல்லை :
அதித குருபக்தி இருந்ததால் கண்டிக்கும் அவசியம் இல்லை. மாணவர்களும் தவறு செய்ததே இல்லை.கலந்துரையாடல் :
அக்காலத்திலே கலந்துரையாடல் மூலம் கருத்துகளை தெளிவுப்படுத்தி மாணவர்கள் கற்றிருக்கிறார்கள். வாழ்நாள் முழுதும் கற்றல், நூல் பல கற்றல் என கற்றலுக்கு எல்லை இல்லாமல் கற்ற காலம் அது. -
“ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு” - நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
முன்னுரை : “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?!” என்ற திரைப்பட பாடல் வரிக்கு ஏற்ப அவர் ஊர் அவரவருக்கு சொர்க்கமாகும். அதுப்போலவே என்னுடைய ஊராகிய திரு அருணை எனக்கு சொர்க்கமாகும். இவ்வூரின் அருமையையும், பழம் பெருமையையும் இங்கு கூற விழைகிறேன்.
திருவண்ணாமலை:
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெருநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படம் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.திருவண்ணாமலை நகரம் உருவாக்கம்:
திருவண்ணாமலையில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இது “மதுரை” நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது. திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வருகின்றன.கார்த்திகை தீபம் :
பரிபாடலில் கார்த்திகை தீபம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அதில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்நகரை தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் ஆண்டுவந்ததாக அறிய முடிகிறது.மலையின் தோற்றுவாய் :
திருவண்ணாமலை ஒரு இறந்த எரிமலை ஆகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீக் குழம்பு நீரில் தோய்த்து உருவானதுதான் தக்காணம் என்று சிலர் கூறுவர்.திருவண்ணாமலை கோயில் :
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் சிவபெருமான் அக்னி தூணாக நின்றார் என்று வரலாறு கூறுகிறது.சித்தர்கள் வாழ்ந்த பூமி:
இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி, சேஷாத்திரி, விசிறி சாமியார், மூக்குப்பொடி சித்தர் போன்றோரின் ஜீவ சாமதிகள் இங்கு சித்தர்கள் வாழ்ந்து முத்தி பேறு அடைந்துள்ளனர் என்பதை பறை சாற்றி நிற்கின்றன.தொழில்கள் :
பல கிராமங்கள் ஒன்றிணைந்த நகரமாக திருவண்ணாமலை திகழ்கிறது. விவசாயமே தொழிலாக இருந்து வந்திருக்கின்றது. மழையின்மை காரணமாக மக்கள் தொழில் தேடி பக்கத்து மாநிலங்களுக்கு வேலைக்காக செல்கிறார்கள். பெரிதாக தொழில் சாலைகளோ, தொழில்களோ கிடையாது.புனித சுற்றுலா தலம்:
புனித சுற்றுலா தனமாக கருதப்படுவதால் சிறு வணிகம் சிறப்பானதொரு இடத்தை பிடித்துள்ளது. மக்கள் இறைவனின் அருளால் சிறந்ததொரு வாழ்வை வாழ்ந்து வறுமை பிடியிலிருந்து வளமான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.முடிவுரை:
இம்மண்ணால் நான் பெருமை அடைகிறேன். நினைத்தாலே முத்தி தரும் திரு அருணையில், நான் பிறந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் பேறினை பெற்றுள்ளேன் என்பதை எண்ணி பெருமை அடைகிறேன். வாருங்கள் அனைவரும் எம் நகருக்கு! -
திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக.
முன்னுரை:
கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்ந்த பெருங்கனவே திரைப்படமாகும். கதை எழுதி, திரைக்கதை எழுதி, வசனம் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, இசை சேர்த்து, பெரும் முதலீட்டில் உருவாகும் திட்டமிட்ட கூட்டுமுயற்சியே திரைப்படமாகும். இத்திரைப்படமானது, ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலாகவும், கலைகளின் சங்கமாகவும் திகழ்கிறது.ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில் :
இரண்டுமணி நேரம் இரசிக்க வைத்து, நம்மை சிரிக்க வைத்து, நம்மை வியக்கவைத்து, நம் கவலையை மறக்க வைத்து, நம்மை ஈர்த்துக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் உருவாக ஆயிரம் ஆயிரம் பேரின் கடின உழைப்பே காரணமாகும். தேனிக்கள் போல ஒவ்வொரு பிரிவிலும், ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் ஆற்றி வருகிறார்கள்.
கலைஞராக மட்டுமில்லாமல், பல்லாயிரம் குடும்பத்திற்கு வாழ்வளிக்கும் கூட்டு உழைப்பாகவும் திரைப்படத்துறை இன்று விளங்கி வருகிறது. இதனால்தான் திரைப்பட துறையினருக்கு சங்கம் அமைத்து அவர்களின் இறுதிகாலத்திற்கு உதவி அளிக்கும் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இன்று திரைப்படத்துறை ஒரு தொழிலாகவும் பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்புக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது.கலைகளின் சங்கம்:
திரைப்படத்தில் கதை தொடங்கி, எடிட்டிங்வரை ஒவ்வொரு கலைகளும் மிளிர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது. கதை கதைக்கேற்ற வசனம், வசனத்திற்கேற்ற சூழல், சூழலுக்கேற்ற நடிப்பு, நடிப்பிற்கேற்ற இசை, இசைக்கேற்ற குரல், காட்சிக்கேற்ற பதிவு பதிவுக்கு ஏற்ற நேரம் என அவரவர் கலைகளை வார்த்தெடுத்து வடிவமைத்துக்கொடுக்கும் சங்கமமே திரைப்படமாகும். ஒத்த போக்கை மாற்றும் நடனம், நகைச்சுவை, சண்டை காட்சி, ஒப்பனை, பின்னணி காட்சி, பிரமாண்ட வடிவமைப்பு, தொழில் நுட்பம் என திரைப்படக் கலையானது விரிந்துக்கொண்டே செல்கிறது.முடிவுரை:
இன்றைய திரைப்படமானது கலைகள் மற்றும் வேலைவாய்ப்பின் சங்கமமாகத்தான் தோன்றுகிறது. -
மயிலையார் ஓர் “ ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரையாக்க.
✓ சென்னை மயிலாப்பூரில் 16.12.1900 -ல் பிறந்த இவர், 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிலும் இவர் ஓர் சிறந்த தமிழ் ஆராய்ச்சியாளர்.
✓ மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ.
✓ அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன.
✓ நூலகங்களே அவரது தாயங்களாகின.
✓ அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
✓ புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை தன் ஆய்வின் அணுகுமுறைகளாகக் கொண்டவர்.
அவர் ஓர் ஆராய்ச்சி பேரறிஞரே:
- ✓ தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், நிகழ்த்திய கிறித்துவமும், தமிழும் என்ற உரையால், ஆராய்ந்து, ‘கிறித்துவமும் தமிழும்' எனும் ஆய்வு நூலை படைத்தளித்தார்.
- ✓ தொல் எழுத்து ஈடுபாட்டின் காரணமாக ‘பௌத்தமும் தமிழும்”, “சமணமும் தமிழும்” நூலை படைத்தளித்தார்.
- ✓ சங்ககாலத்திற்கு அடுத்த காலத்தை தமிழர்கள் இருண்ட காலம் என்றனர். களப்பிரர் ஆட்சி காலத்தை ஆய்வில் கொண்டு, "களப்பிரர் ஆட்சியில் தமிழகம” எனும் நூலை எழுதினார்.
- ✓ கவின் கலையை என்றைக்கும் உணரும் வகையில் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்' என்னும் நூலால் பெருமை சேர்த்துள்ளார்.
- ✓ ‘தமிழ்நாட்டு வரலாறு' என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
- ✓ மறைந்துபோன தமிழ்நூல்கள்' என்னும் நூல் வேங்கடசாமி அவர்களின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும்.
பெற்ற பட்டங்கள்:
தமிழ்ப் பேரவைச் செம்மல், ஆராய்ச்சிப் பேரறிஞர் போன்ற பட்டங்களை அளித்து மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களை தமிழகம் பெருமை படுத்தியுள்ளது. நம் பாடப்பகுதி வாயிலாக இவர் ஆராய்ச்சிப் பேரரறிஞர் என்பதை நம்மால் உணர முடிகிறது.
(எவையேனும் ஆறு வினாக்கள் மட்டும் படித்தால் போதுமானது)
துணைப்பாடம் 6 மதிப்பெண் வினாக்கள் (6)
-
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை
முன்னுரை: “நீடு துயில் நீக்க பாடிவந்த நிலா” “ பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தை பாலித்திட செய்தவர்”. ஆம்! இப்புகழுக்கு உரியவர் நம் மகாவி பாரதி ஆவார். கடிதம் எழுதும் எவரும் தேவையைத் தாண்டி வேறெதுவும் எழுதமாட்டார். ஆனால் பாரதியின் கடிதத்திலோ, தேவையானது தனக்காக இல்லாமல் நாட்டிற்காக இருந்தது என்பதனை நம்மால் நன்கு உணர முடிகிறது.
நெல்லையப்பருக்கு:
- ✓ தன் உடன் பிறந்த தம்பிக்கு எழுதும் உரிமையை இக்கடிதம் உணர்த்துகிறது.
- ✓ அவருக்கு பராசக்கி துணை இருப்பாள் என்ற வாழ்த்துதலுடன் தொடங்குகிறது அவர் கடிதம்.
- ✓ நெல்லையப்பருக்கு பல மொழி அறிவு இருப்பது ஒருவகையில் நன்மைதான். ஏனென்றால், அம்மொழியில் வெளிவந்த செய்திகளை தமிழர்க்கு உணர்த்த உதவியாக இருக்கும் என்று கூறி இருப்பது, எந்தமொழி அறிந்திருந்தாலும் அது தமிழர்க்கும் தமிழ்நாட்டும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரின் மொழி பற்றினைக் காட்டுகிறது.
- ✓ வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நம்பிக்கை என்ற வலுவான மன உறுதியுடன் மேலே ஏற வேண்டும் என்று அறிவுறுத்தும் பாரதி, இந்த உறுதி தமிழ்நாட்டை உயர்த்த பயன்பட வேண்டும் என்று கூறுகிறார்.
- ✓ தன்னுடைய உள்ளத்தில் எப்பொழுதும் தமிழ்நாடு வாழ்க வாழ்க என எழுதிக்கொள் என்று மிகையாக எழுந்த நாட்டுபற்றினை ஆழமாக தெரிவிக்கிறார்.
- ✓ நாட்டில் உள்ள ஆணும் பெண்ணும் ஓர் உயிர் ஈருடல் போன்று கருத வேண்டும் என்று கூறியிருக்கும் கருத்தில், மனிதர்களை எவ்வளவு நேசித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
- ✓ நாட்டின் கொடுமையைக் கண்டு வெகுண்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாய், பெண்ணைத் தாழ்மை செய்பவன் கண்ணைக் குத்திக் கொண்டான் என தன் வார்த்தைக் கனலை வீசுகிறார்.
- ✓ நாட்டில் தொழில், வணிகம், கலைகள் இவையெல்லாம் கிளைக்கிளையாய் வளர்ந்து தமிழ்நாடே உலகிற்கு எடுத்துக்காட்டான ஒரு வள நாடாகத்திகழ வேண்டும் என்று பாரதியார் விரும்பி இருக்கிறார்.
முடிவுரை: ஒரு சிறு கடிதத்தில் ஒவ்வொரு வரியும், வார்த்தையும் அவரின் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் மனித நேசிப்பையும் படம் பிடித்து காட்டுகின்றன.
-
'ஊர்கூடித் தேர் இழுக்கும்போதும்' தேர் வடத்தைப் பிடிக்கும் முதல் கரமாக இருந்த மருதனின் பண்பு
முன்னுரை:
பயிர்களை வாழவைப்பது மழையாகும். அம்மழை பெருமழையாகி, வெள்ளமாய்த் தேங்குகையில் பயிர்களையே அழித்துவிடுகிறது. இதற்கு காரணம் இயற்கை நீர்த்தேக்கங்களை முறையாக பராமரிக்கப்படாமையே ஆகும். இதை உணர்த்தும் வகையில் அமைந்த ‘முதல்கல்' எனும் சிறுகதையில் வரும் மருதனின் பண்பு நலன்களைக் காண்போம்.வானொலி செய்தியைக் கேட்டு அடைந்த பதற்றம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பலத்த மழை பெய்யக் கூடும் என்ற செய்தியைக்கேட்டவுடன், மருதப்பன் துடித்துப்போனான். ‘சம்பாவிற்காக நீரை எதிர்ப்பார்த்துவிட்டு, மழை காட்டிய கருணையால் இப்பொழுதுதான் நாற்று நட்டு ஒருவாரம் ஆன ‘குழந்தைப் பயிர்கள் தான்’ மழையின் அதிக அன்பினால் மழை நீர் வயல்முழுதும் மூழ்கி கிடக்கிறதே! ‘இன்னும் ஒருநாள் மழை நீர் தேங்கினாலும், மழை மீண்டும் பெய்தாலும் பயிர்கள் அழிகிவிடுமே' என மிகவும் வருந்தினான்.மருதப்பனின் யோசனை:
உபரி நீர் வடிவதற்கான மதகைப் பார்த்த அவனுக்கு இருஉணர்வு தோன்றியது. நீர் வடிவதற்கு வழியில்லாமல் மண்டிக்கிடந்த காட்டாமணக்குச் செடியைப்பார்த்து அதிர்ந்தது ஒன்று, இதை அகற்றினால், நிலத்தில் உள்ள நீரை வடிகட்டலாம் என்ற யோசனை மற்றொன்றாகும்.ஊர் கூடி தேர் இழுக்கலாம் :
அச்செடிகளை அகற்றுவதற்கு ஊரில் உள்ளவர்களை அழைத்தால், அனைவரும் சேர்ந்து விரைவில் அகற்றிவிட்டு, பயிரை காக்கலாம் என்ற மகிழ்ச்சியில், எதிரில் வாய்க்காலில் மீன் பிடித்த மருதனிடம் கூறினான். அதற்கு அவன் இது நடக்காத காரியம் என பதில் அளித்துவிட்டு தன் வேலையில் மூழ்கினான்.
ஊரில் பெரிய மிராசான காளியப்பன் கிழவனைப்பார்த்து செய்தியை தெரிவித்தான். ஊரார் இவர் வார்த்தைக்கு மதிப்புக்கொடுப்பார் என்ற எண்ணத்தில். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். நாம் அழைத்தால் கூலி கேட்பார்கள். அதுமட்டுமல்லாமல் நாளை அவசர வேளையாக தன் மகள் ஊருக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘நாகூர் பிச்சை' எனும் பெயர் கொண்ட ‘பிரேம் குமார்' ஊரில் படித்த பட்டதாரி. ஓர் அமைப்பிற்கு தலைவன். அவனை சந்தித்துப்பேசினால், இக்காரியம் கை கூடும் எனும் நம்பிக்கையில், அவனிடம் சென்ற மருதனுக்கு அதுவும் தோல்வியில் முடிந்தது. ஊர் கூடி தேர் இழுப்பது, இழுக்காகியது.பொதுநலம் மிக்கவன் இவன்:
இதுவரை இவன் தன் நிலமும் நீர் மூழ்குகிறது என்ற பதைப்பில் இருக்கிறான் என்றால் இல்லை. இவனுக்கு நிலமே கிடையாது. இந்த ஊரில் உள்ள அறுபது குழி நிலத்தில் இம்மியும் தனக்கு கிடையாது. தன் கையும் காலும்தான் சொத்து. இந்த ஊர் இல்லை என்றாலும் ஊர் ஊராக சென்று கூலிக்கு வேலைப்பார்ப்பவன். ஏன் வருந்த வேண்டும்? என மனைவி திட்டுகிறாள்.தன்னிலை மறந்தவன்
ஊர் வாழ ஒத்துழைப்பு கேட்ட அவனுக்கு உதவி கிடைக்காததால் செயலற்று இருந்தான். தனக்கு வைத்த உணவின் சுவையும் அறியாது கடைமைக்கு சாப்பிட்டான்.தன்னம்பிக்கை:
இரவில் மனைவி அவனை தேட, அவன் வீட்டில் இல்லை. நடு இரவில் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்வோம் என்ற எண்ணத்தில் தண்ணீரில் இறங்கி செடிகளை அறுத்துப்போட்டுக்கொண்டிருந்தான். அதை கண்ட மனைவி தானும் இறங்கினாள். மறுப்பு தெரிவித்த அனைவரும் ஒவ்வொருவராக இறங்கினர். ‘தடையின் கற்களை முதலில் நீக்கியவன் இவன்’ ‘இவன் வைத்த முதல் கல்' எல்லாரையும் இறங்க வைத்தது.முடிவுரை:
நல்லது செய்ய உடன் யார் வருவார்கள் என தவிக்காதீர்கள். தான் முன்வந்தால், பிறர் நிச்சயம் பின்னால் வருவார்கள் என்பதற்கு இக்கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. -
‘உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்... கதையைத்
முன்னுரை:
வட்டார வழக்கில் எழுதப்பட்ட இச்சிறுகதையில், வறுமைக்காக நிலத்தை அடகு வைத்த ஒருவன், பயிர் வைக்கும் தருணத்தில் தவிக்கும் பரிதவிப்பினை இக்கதை உணர்த்துகிறது. உழைப்பவனுக்கு நிலம் சொந்தம். அதனை ஏமாற்றி அதிகார வர்க்கம் அபகரிக்க முடியாது. மக்கள் விழித்தால், தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் என்பதை உணர்த்தும் கதையாக இக்கதை விளங்கி நிற்கின்றது.கதையின் முடிவு வேறு விதமாய் போயிருந்தால்..
அண்ணி மூக்கம்மாவின் பேச்சு:
உன் தம்பி அவன் பாகத்தை கடனுக்காக அடகு வைத்திருக்கிறானாம். சொத்தை பிரித்துக்கொடு என்று அலைந்தான் இல்லையா? இன்று அதை கட்டிக்காக்க வழியில்லாமல் விட்டுவிட்டு நிற்பது எனக்கு சந்தோஷம்தான் என்று கூறுகிறாள்.அண்ணன் முத்தையனின் பேச்சு:
வேண்டாத பேச்சு நமக்கெதற்கு? குழந்தையாக நினைச்சு அவனை வளர்த்த நமக்கு நல்ல பாடம் புகட்டிட்டான். கட்டி வந்த பெண்டாட்டி பேச்சைக் கேட்டு, என் சட்டையை பிடித்தவன் இல்லையா? இன்று அவன் கஞ்சிகக்கு வழியில்லாமல் நின்றால் கூட எனக்கு கவலை இல்லை. பட்டால்தான் புத்தி வரும்.ஊர் காரர் :
மழை தூறி எல்லாரும் புஞ்சையில வெதவெதைக்க ஆரம்பிச்சிட்டாங்க. உன் தம்பி பாவம் விவசாயம் பாக்காம வீட்டுக்குள்ள முடங்கி கிடக்கிறான். அவன் வாங்கிய பணத்தை எப்படியாவது கொடுத்துவிட்டு, அவனுக்கு அந்த நிலத்தை திருப்பி தரச்சொல்லேம்பா. ஆயிரமட இருந்தாலும் அவன் உன் தம்பி இல்லையா? என்றர் ஊரார்.தம்பி வெள்ளையன் :
யாரும் எனக்காக அவனிடம் பேச வேண்டாம். நான் என் நிலத்தை உழுகிறேன். அந்த பங்காரு சாமி என்னதான் செய்யறான் பார்க்கிறேன். எனகிறான்.நிகழ்ந்த சம்பவம்:
எதுவும் எழுதாத பத்திரத்தில் கீழே கையெழுத்து போட்டுக்கொடுத்ததன் விளைவு, அவன் நிலத்தை உழும்பொழுது, பங்காருசாமி காவலியுடன் வந்து அவனை கைது செய்தனர். அனைவரும் எதிர்த்து கேட்ட பொழுது, உரிமை பத்திரம் எழுதி கொடுத்திருக்கிறான். என்னிடம் அதிக தொகை வாங்கி இருக்கிறான் என்று, பொய் சான்றை மெய்யாக்கி அவனை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார் பங்காருசாமி.வெள்ளைச்சாமியின் நிலை:
நிலத்திற்கு நிலமும் போய்விட்டது, அசலுக்கு வட்டியும் கட்டி தீர்ந்து விட்டது. வாங்காத பணத்தை அதிகமாக கூறி வாழ்வே பாரமாகிவிட்டது. -
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு' - இக்கூற்று நனவாக நாம் செய்யவேண்டியன யாவை?
முன்னுரை:
வாழ்வை முழுமையாக்கும் கூறுகளுள் முதன்மையானது பயணம். அதிலும் சாலைவழிப் பயணம் மனதிற்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அத்தகைய பயணத்தை அனைவரும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். சாலை விதிகளை நாம் கடைபிடிக்கவேண்டும். பிறரையும் கடைபிடிக்கச்செய்யவேண்டும். விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்குவது நம் ஒவ்வொருவர் கடமை ஆகும்.சாலை விபத்தில் தமிழ்நாடு:
- ✓ நாளொன்றிற்கு 1317 விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 413 பேர் உயிரிழக்கிறார்கள்.
- ✓ குறிப்பாகத் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது.
- ✓ இந்தியாவில் நடக்கும் விபத்துகளின் மொத்த விழுக்காட்டில் தமிழ்நாடு 15 விழுக்காடுகளைப் பெறுகிறது.
சாலை விபத்து ஏற்படும் வாகனங்கள்:
- ✓ நம் நாட்டில் ஏற்படும் விபத்துகளில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்தியால் மட்டுமே ஏற்படுகின்றன.
- ✓ இதற்கு காரணம் ஓட்டுநர் உரிமம் பெற இயலாத 18 வயதிற்கும் குறைவான மாணவர்கள் ஓட்டுவதாலும்,
- ✓ கைபேசியுடன் பேசிக்கொண்டே செல்வதாலும் ஆகும்.
விபத்தில்லாத் தமிழ் நாடு உருவாக:
- ✓ கட்டாயம் தலைகவசம் அணிதல் வேண்டும்.
- ✓ சாலை விதிகளையும், குறியீடுகளையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
- ✓ வண்டி ஓட்டும் போது கவனம் சாலையில் இருத்தல் வேண்டும்.
- ✓ நிதானம் வேண்டும். அதிக வேகத்தை தவிர்த்தல் வேண்டும்.
- ✓ சட்டத்தை மதித்தல் வேண்டும்.
- ✓ ஓடும் பேருந்தில் ஏறவோ, படிக்கட்டில் பயணிக்கவோ கூடாது.
- ✓ கைபேசியில் பேசிக்கொண்டோ, மது அருந்திவிட்டோ வாகனம் இயக்கக் கூடாது.
- ✓ நடை மேடை, நடைப்பாதையை பயன்படுத்துதல் கூடாது.
- ✓ சாலையின் வகைகள், மேடு பள்ளங்கள், குறுகல்கள், வேகத்தடை, விபத்து பகுதி, வளைவுகளை அறிந்து சீராக வாகனத்தை இயக்குதல் வேண்டும்.
- ✓ விபத்து குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரப்புதல் வேண்டும்.
முடிவுரை:
✓ அருமை மிக்க உயிரை அகால மரணத்திற்கு அள்ளி தருவது முறையோ? குறைவில்லா வாழ்க்கையை உடல் ஊனக்குறைக்கு இரையாக்குவது தகுமோ? சிந்திப்பீர் ! சீராக பயணிப்பீர். பாதையில் பாதுகாப்பு பயணம். பயமில்லா பயணம். -
“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” - தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை
முன்னுரை : “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்று பாடிய ஔவையின் வரிக்கு ஏற்ப ஒவ்வொரு ஊர்களும் நீரின்றி பொலிவிழந்து காணப்படுகின்றன. ஒரு காலத்தில் குறிஞ்சியும், முல்லையும் மருதமுமாக காட்சி அளித்த ஊர்கள் அத்தனையும், பாலையாக மாறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் அறிவியல் முன்னேற்றமா? நகர பெருக்கமா?
பாட்டிகள் சொன்ன கதை:
மழை நீரில் மீன்கள் துள்ளி வருமாம்? வாசலில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுமிகள் தங்களின் பாவாடையை மீன் பிடிக்கும் வளையாக போட்டு மீன் பிடித்து, மழைக்கு ருசியாக மண்சட்டி மணக்க குழம்பு வைத்து சாப்பிட்டார்கள் என்று கூறுவார்கள்.அம்மாக்கள் சொன்ன கதை :
மார்கழி மாதத்தில் விடியற்காலை இருட்டில் குளக்கரையில் பெண்கள் எல்லாம் குழுமி நீச்சல் போட்டி நடத்துவார்களாம். ஊர் நடுவே இருக்கும் குளத்தில் ஆண்கள் எழுந்திருக்கும் முன் இளம் பெண்கள் குளித்து முடித்து, ஆடைகளை துவைத்து, கதை பேசி பாட்டு பாடி, கூட்டமாக இருப்பார்களாம்.அப்பா சொன்ன கதை:
ஆலமரத்தின் விழுதை பிடித்து குளத்து நீரில் தொப்பென குதித்து நீச்சல் இடுவார்களாம். தாத்தாவின் குரல் கேட்டு தப்பிப்பதற்காக, குளத்தில் தலை வெளியே தெரியாமல் மூச்சு பிடித்து நீருக்குள் மூழ்கி இருப்பார்களாம். மனிதனை கண்டு ஓட்டில் ஒளிந்துக்கொள்ளும் ஆமை, கால் அடியில் வந்து தன்னை காட்டி கொடுத்துவிடுமாம். இப்படி சுவாரசியமான கதையை கேட்டதும் உண்டு.மாமா சொன்ன கதை:
பரண்மீது இருந்த பழைய சாலைக் காட்டி, பத்து ஏக்கருக்கு நெல் நடவு செய்ய, பசு மாட்டைக்கட்டி, பத்து நிமிடத்தில் நீர் இறைத்து உழவு செய்தார்களாம்.ஒவ்வொன்றும் அடையாளம் :
இறந்த பின் எலும்பு கூடு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளம் காட்டி நிற்கின்றனவோ அதுபோல எங்கள் ஊரிலும் சில குளங்களும், கிணறுகளும் நீரோடு இருந்திருக்கின்றன என்ற அடையாளத்தை காட்டிக்கொண்டு நிற்கின்றன.அடையாளமும் இன்றி :
வளர்ந்து வரும் பெருநகரங்கள், ஏரிகளையும், ஆறுகளையும் அடையாளத்திற்கு கூட விட்டு வைக்காமல் தொழிலகங்களாக, கல்வி நிலையங்களாக மாற்றிவிட்டன. மாறுதல் வேண்டும் வாழ்வதற்கு! வாழ்தலை மாறுதலாக்கி இன்று வீழ்தலுக்கு போய் கொண்டிருக்கிறோம் என்பதை தலைக்குளம் கதை வாயிலாக எங்கள் ஊரின் அடையாளமற்ற நிலையை நான் உணர்கிறேன்.முடிவுரை :
“இனி ஒரு விதி செய்வோம்” இனியேனும் நீர் நிலைகளை புதிதாக உருவாக்குவோம். அடையாளம் தெரிந்த நீர் நிலைகளை தூறு வாருவோம். மழைநீரை தேக்கி வைக்கும வழிகளைகளை கையாளுவோம். அழகிய ஊரை காணுவோம். -
மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
முன்னுரை: கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன்வ விருது, செவாலியர் விருது, தாதாசாகெப் பால்கே விருது என நடிப்புத்துறையில் பல விருதுகளைப் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை உலகமே வியந்து பார்க்கும் பொழுது, நாம் வியப்படைவதில் ஐயம் இல்லை.
பாலசந்திரனின் மனவோட்டம் :
மலையாளக் கவிஞரும் நடிகருமான பாலச்சந்திரன் எழுதிய சுள்ளிக்காடு எனும் கட்டுரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி தன் நனவோட்டமான குறிப்பிட்டுள்ள செய்திகளை பின்வருமாறு காண்போம்.- ➢ சிவாஜி கணேசனின் திரைப்படம் இராதா பிக்சர்ஸ் பேலசில் வெளியிடப்படுகிறது என தனது குரலால் விளம்பரம் செய்துக்கொண்டிருந்த பாலச்சந்திரன், தன்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் சிவாஜி கணேசனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
- ➢ சிவாஜியின் வீட்டிற்கு திரைப்பட இயக்குநருடன் சென்ற இவர், வீடு அல்ல. அது ஒரு அரண்மனை எனக்குறிப்பிடுகிறார்.
- ➢ வேலைப்பாடுகள் நிறைந்த வீட்டைக்கண்டு அதிசயத்த அவர், ஒவ்வொரு படங்களிலும் வேடமிட்டு நடித்த புகைப்பட ஓவியங்களை கண்டு வியந்தார்.
- ➢ சத்ரபதி சிவாஜி, கட்டப்பொம்மன், இராஜராஜ சோழன் என பல கதாபாத்திரங்களின் கம்பீர படங்களை கண்டு உவந்தார்.
- ➢ சிவாஜி அவர்கள் இவரை வரவேற்க வரும்பொழுது, "மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்தபொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்தபொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப் போல நான் துள்ளி எழுந்தேன்” என்று வியந்து கூறுகிறார்.
- ➢ அவர் ராஜிவ்நாத்யிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, புருவங்களையும், கண்களையும், முக அபிநயங்களையும், உதடுகளையும், கைவிரல்களையும் தாள, லய அபிநயங்களையும், சலனங்களையும் பார்த்து ரசித்ததாகக் குறிப்பிடுகிறார்.
- ➢ திருவிளையாடல் படத்தில் ஆடும் ருத்ர தாண்டவம், குண்டலம் கொடுத்த கர்ணன், குரு காளிதாசன், சிந்துநதிமிசை பாடிய பாரதி,வீரபாண்டிய கட்டபொம்மன் என தன் மன அடுக்குகளில் அக்கதாபாத்திரங்களை கண்டுகளிப்பதாக கூறி மகிழ்ந்தார்.
- ➢ “சிவாஜி கணேசன், ஐம்பதுவயது வரை சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தி, அரங்கங்களில் நடித்தும் வந்தவர். அவர், திரைப்பட நடிப்பினைப்பற்றி கூறிய கருத்தினை இன்றும் நீங்காமல் இருக்கிறது என வியக்கிறார் " அரங்கத்து நடிப்போடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது என்னுடைய சினிமா நடிப்பு ஒண்ணுமேயில்ல.சரித்திரத்திலும் पुराणங்களிலும் வரும் வீரபுருஷர்களைத் தத்ரூபமாய் நடித்து அவர்களை எங்கள் நாட்டின் ஏழைகளின் மனதில் குடிபுகச்செய்தேன்” என சிவாஜி கணேசன் கூறியதை கண்டு எவ்வளவு அடக்கத்துடன் தன் நடிப்பை கூறினார் என்று வியக்கிறார்.
- ➢ சிவாஜி கணேசன் முன் தான் நடித்து காட்டிய போது, சிவாஜி கணேசன் தான் ஒரு மகாநடிகன் என்பதுபோல் பார்க்காமல், நாடகம் பார்க்கும் ஒரு கலைஞனாக பார்த்தார். கைகளை தட்டி பாராட்டு தெரிவித்து, தன்னை வாழ்த்தினார் என்று பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
முடிவுரை :
சிவாஜி நடித்த திரைப்படத்திற்கு விளம்பரம் படுத்தும் சிறுவனாக இருந்த தான், சிவாஜி கணேசனை நேரில் சந்தித்து, அவரால் பாராட்டுப்பெற்ற தருணத்தை, ஈரம் மாறாத நினைவலைகள் என்று பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார் -
உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக்
- ➢ எங்கள் மாவட்டத்தில் உள்ள வலசை என்னும் கிராமத்தில் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஒருவரை பற்றிதான் கூறவிழைகிறோம்.
- ➢ திரு.மாணிக்கம் என்பவர் எங்கள் ஊரில் ஒரு கலைஞன் போல் திகழ மாட்டார். சாதாரண மனிதரைப்போலவே வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருப்பவர்.
- ➢ ஆடிமாதம், பங்குனி மாதம் அவரை ஊரில் நான் பார்த்ததே இல்லை.
- ➢ ஆடிமாதம் அம்மன் கோவில் திருவிழாவில் எங்கள் ஊரில் வருடா வருடம் கூத்து நடைபெறும்.
- ➢ மறுநாள் பள்ளிக்கூடம் இருப்பதால் எங்கள் வீட்டில் விடிய விடிய பார்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
- தொடங்கும் நேரத்திற்கு சென்று கட்டியங்காரன் வரும் வரை இருந்துவிட்டு வந்துவிடுவோம்.
- ➢ இன்று இராமாயணக்கதை அருமையாக இருந்தது, மகாபாரதக்கதை அருமையாக இருந்தது என பாட்டிமார்கள் பேசுவதை கேட்டிருக்கிறோம்.
- ➢ ஊருக்கு யாரோ வந்து நடித்துவிட்டு போவார்கள் என்று இருந்தேன்.
- ➢ ஒரு நாள் கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் எங்க ஊர் மாணிக்கம் இருந்தார்.அவருடைய கலை பணியை அனைவரும் பாராட்டினர். அவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட மேடைகளில், நூற்றுக்கும் மேற்ப்பட்ட கதாபாத்திரங்களை நடித்திருப்பதாகக் கூறினார். அதைக்கேட்டு நான் வியந்தேன்.
- ➢ என் தந்தையிடம் இந்நிகழ்ச்சியை பற்றி கேட்கும் பொழுது, ஆம்! அவர் மாபெரும் கூத்து நடிகர். நம்மூரில் நடைபெறும் கூத்துகளில், இராமனாக, முருகனாக ஏன் சிலவேளைகளில் சீதையாகக்கூட பெண் வேடங்களில் கூட நடிப்பார் என்று கூறினார்.
- ➢ அவரை சந்தித்து பேச வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
- ➢ அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி அவரை நான் வீட்டில் சந்தித்த பொழுது, ஏர் கலப்பையை சரி செய்த படியே எனக்கு கூத்து கலையின் நடிப்பு ஒப்பனை வசனம், அதிலிருக்கும் துன்பம், இரசனை அனைத்தையும் சுவாரசியமாகக் கூறினார்.
- ➢ பின்வரும் காலங்களில் இது மறையவும் வாய்ப்பிருப்பதாகக் கூறி கவலைப்பட்டார். தான் யார் யாரிடம் இக்கலையை கற்றார் என்பதையும், அவரிடம் யார் யார்கற்றார்கள் என்ற விவரத்தையும் எனக்கு கூறினார்.
- ➢ ஒரு மணி நேரம் அவரிடம் உரையாடியதே தெரியாமல் மறந்துபோனேன்.
- ➢ பிறகு அவரிடம் நானும் கலையை கற்றுக்கொள்ளும் மாணவனாக இணைந்தேன்.
- ➢ அவரவர் ஊரிலும் ஒரு கலைஞன் இருப்பான். அவனை நாம் கொண்டாடி மகிழ்வோமாக.
-
கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.
- இன்று உலகத்தில் தாய் தந்தை இல்லாத ஏதிலிக் குழந்தைகளும் உள்ளனர். பிள்ளைகள் இல்லாத முதியவர்களும் உள்ளனர்.
- அவர்களை ஏற்று அரவணைத்து மனித நேயம் மிக்கவர்களை காண்பது அரிதாகதான் உள்ளது.
- இக்கதையில் வரும் வயதான பெரியவரின் மருமளும், மகனும் இறந்துவிட, அவர்கள் பெற்ற குழந்தையை அனாதையாக்க விரும்பாத தாத்தா, தள்ளாத வயதிலும் அக்குழந்தைக்காக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.
- தனக்கு பிறரு இக்குழந்தையை பாரத்துக்கொள்பவர்கள் யார்? தன்னுடைய உயிரை இனி எத்தனை ஆண்டுகள் பிடித்துக்கொண்டு வாழ இயலும் என கவலைக்கொள்கிறார்.
- குழந்தைக்கு காய்ச்சல். மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவித்த தவிப்பு பெரும் வலி ஆகும்.
- குழந்தைக்கு ஊசி போட்ட நர்ஸ், துணைக்கு யாரும் வரவில்லையா? என்று இவரின் வயது முதிர்வால் கை நடுக்கத்தைப்பார்த்து கூறியதைக்கேட்டு சிந்திக்கிறார்.
- வாடிக்கையாக மருந்து வாங்கும் மருந்த கநண்பர், இக்குழந்தையை தத்து கேட்கிறார்கள் என்று என்றோ கூறி இருந்தார்.
- தாத்தா, அதை அன்று மறுத்திருந்தாலும், இன்று அவரிடம், பல முறை யோசித்தேன். எனக்கு பிறகு இக்குழந்தை அனாதை ஆவதை விரும்பவில்லை. அவர்களின் விருப்பப்படி இக்குழந்தையை தத்து கொடுக்குகிறேன் என்று கூறினார்.
- இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் தவித்தாலும், குழந்தையின் நன்மை கருதி இது சரியே என அவர் மனம் ஒப்புக்கொண்டது.
- மறுநாள் குழந்தையை தத்து பெற வந்த தம்பதியர், நன்றி தெரிவிப்பதால், இந்த உபகாரத்திற்கு, ஈடாகாது என பெருந்தன்மையாக கூறியானர்கள்.
- அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கும் தன் இருவருக்கும் ஆதரவாக இருக்கும் தன்னுடனே வரும்படியும் தாத்தாவை அழைத்தார்கள்.
- தாத்தாவிற்கு மகிழ்ச்சியால் அடக்கி வைத்திருந்த கண்ணீர், ஆனந்த கண்ணீராய் துளிர்த்தது.
நிறைவுரை :
சுயநலத்திற்கு தனக்கு குழந்தை இன்மையால் குழந்தையை தத்தெடுக்கும் தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கையில், குழந்தையும் முதியவரையும் தத்தெடுத்த மனிதநேயம் மிக்கவர்கள் ஒரு சிலரே உள்ளனர். இது போன்ற கதையின் வாயிலாக நாமாமும் மனிதம் பெற்று புனிதம் பெறுவோம்.
மனப்பாடம் (6)
(இந்த பகுதியில் மேலும் உள்ளடக்கம் தேவைப்பட்டால் சேர்க்கவும்.)