10th Tamil Slow Learners Study Material (Important Questions)

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

இயல் 1

வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்தி காட்டுக.

தொடர்மொழி

வேங்கை- வேம் + கை = வேகின்ற கை

பொதுமொழி

வேங்கை மரத்தைக் குறிக்கிறது.

மண்ணும் சிலம்பே மணிமேகலை வடிவே ..... எஞ்சியுள்ள காப்பியங்கள் யாவை?

  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்னிசை அளபெடை . ஓசைக்காக அளவெடுப்பதாகும்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்னிசை அளபெடை. ஓசைக்காக அளவெடுப்பதாகும்.

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் அமைப்பை விளக்குக.

ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் பட வருவது சிலேடையாகும்.

எடுத்துக்காட்டு :ஊசி இருக்கிறது.

இயல் 2

உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

  • மரங்களை வளர்ப்போம்
  • புகையை பகையாக்கு
  • காற்றை மாசுபடுத்தாதே உன் வாழ்வை நாசமாக்காதே.

வசன கவிதை குறிப்பு வரைக.

யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்ட கவிதை வடிவமே வசனகவிதை .

தண்ணீர் குடி- இரண்டாம் வேற்றுமை தொகை

பதினம் தினம் தோறும் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

தயிர் குடம்- இரண்டாம் வேற்றுமை உருபு பயனும் உடன் தொக்க தொகை

தயிரைக் குடத்தில் இருந்து எடுத்து தாருங்கள்.

மா அல் - திருமால்

செய்யுளிசை அளபெடை

இயல் 3

விருந்தினரை மகிழ்வித்து கூறும் முகமன் சொற்களை எழுதுக.

  • வாருங்கள்
  • வணக்கம்
  • அமருங்கள்
  • தங்களது வரவு நல்வரவு

இறடி பொம்மல் பெறுகுவீர் தினைச்சோற்றை உணவாக பெறுவீர்கள்.

இறடி பொம்மல் பெறுகுவீர் - தினைச்சோற்றை உணவாக பெறுவீர்கள்.

பயனிலை வகைகள்

பாரதியார் கவிஞர் - பெயர் பயனிலை

நூலகம் சென்றார் - வினை பயனிலை

அவர் யார் - வினாப் பயனிலை

எழுது எழுது என்றான் -என்பன போல் சிரித்து சிரித்துப் பேசினார் எவ்வாறு அடுக்குத் தொடராகும்.

எழுது எழுது என்றான் -என்பன போல் சிரித்து சிரித்துப் பேசினார் என்பது அடுக்குத் தொடராகும்.

இயல் 4

வருங்காலத்தில் தேவையான கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை எழுதுக.

  • குழந்தைகளை பேணிப் பாதுகாக்கும் ரோபோக்கள்.
  • நோய்களை கண்டறியும் ரோபோக்கள்

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்கு செல்கிறேன் இத்தொடர் கால வழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்கு செல்வேன் என்பது கால வழுவமைதிக்குச் சான்றானது.

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவரின் அன்பு + நோயாளியின் நம்பிக்கை + மருந்துகள் = விரைவில் குணமடைதல்.

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியின் எவை எவை என பரிபாடல் வழி அறிந்தவற்றை குறிப்பிடுக.

  • வானம் - விசும்பில் ஊழி
  • காற்று - உந்துவளி கிளர்ந்த
  • நெருப்பு - செந்தீச் சுடரிய

இயல் 5

கழிந்த பெரும் கேள்வியினான் குலேச பாண்டிய மன்னன் காதல் மிகு கேண்மை யினான் இடைக்காடனார் .

கழிந்த பெரும் கேள்வியினான் குலேச பாண்டிய மன்னன் காதல் மிகு கேண்மை யினான் இடைக்காடனார்.

செய்கு தம்பி பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்கள் ஆக்குக.

  • அருளைப் பெருக்குவோம்
  • அறிவைச் சீராக்குவோம்
  • கல்வியைப் போற்றுவோம்

வினா வகைகள்

மின்விளக்கின் சொடுக்கி எந்த பக்கம் இருக்கிறது? - அறியா வினா

மின்சாரம் இருக்கிறதா? இல்லையா ? - ஐய வினா

இயல் 6

காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உன்னை சுவை மிகுந்திருக்கும் தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்

நிலம்- முல்லை - காடு

பொழுது- பெரும் பொழுது, சிறுபொழுது என இரண்டு வகைப்படும்.

  • பெரும்பொழுது - கார்காலம்
  • சிறுபொழுது- மாலை

கருப்பொருள்

உணவு( வரகு )

சாந்தமான ஒரு பிரபஞ்சத்தை சுமக்கின்றன ஒள்ளித் தண்டுகள் இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக

ஒல்லித்தண்டுகள் என்பன பெண்களுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது .பெண்களைப் போராளிகளாக இந்த வரிகள் காட்டுகின்றன.

உறங்குகின்ற கும்பகர்ணா எழுந்திராய் எழுந்திராய் உறங்கு என்று கும்பகர்ணனே பொய்யான வாழ்வு எல்லாம் முடிவு பெற போகிறது

உறக்கத்தை விட்டு எழுந்திராய் என்று கூறுவதாக அமைந்துள்ளன. இனிமேல் எமனின் கைகளில் தான் உறங்குவாய் என்று கூறப்பட்டுள்ளது.

இயல் 7

பாசவர் வாசவர் பல்நிண விலைஞர் உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர் ?

  • பாசவர் - வெற்றிலை விற்பவர்
  • வாசவர் - நறுமணப் பொருள் விற்பவர்
  • பல்நிண விலைஞர் - இறைச்சிகள் விற்பவர்.
  • உமணர் - உப்பு விற்பவர்

வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

உணவிற்காக வைத்திருந்த பணத்தில் பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்று புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்குபவர் நிறைய நாட்கள் பட்டினியோடு இருந்தவர்.

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

அரசனின் வரலாற்றையும் பெருமைகளையும் உணர்த்தும் கல் இலக்கியம் ஆகும் .

புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணை படுத்துக.

  • வெட்சி - கரந்தை
  • வஞ்சி - காஞ்சி
  • நொச்சி - உழிஞை

இயல் 8

குரல் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குரல் வெண்பா முதலிரு அடிகளில் வெண்டளை பிறழாமல் அளவடியாய் மற்றைய அடிகளில் வெண்டளை பிறழாமல் சிந்தடியாய் வரும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசையாலோ, ஓரசை தழுவிய குற்றியலுகரத்தாலோ முடியும். இரண்டு அடிகளால் வரும்.

குறிப்பு: பாடப்புத்தகத்தில் "குரல் வெண்பாவின் இலக்கணங்கள் அமையப்பெற்று இரண்டு அடிகளால் வரும்" என்றுள்ளது. இது முழுமையல்ல. (இது முழுமையான இலக்கணம் அல்ல, பாடப்புத்தகத்தில் உள்ளதை ஒட்டி சுருக்கமாக இருக்கலாம்.) சரியான எடுத்துக்காட்டு தேவை.

குறிப்பு வரைக - அவையம்

அறங்கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.

காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

காலக்கழுதை கட்டெறும்பானதும் என்ற தொடர் காலங்கள் கடந்து செல்வதைக் குறிக்கிறது .

இயல் 9

தீவக அணியின் வகைகள் யாவை?

  • முதல் நிலைத் தீவகம்
  • இடைநிலைத் தீவகம்
  • கடைநிலைத் தீவகம்

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு இத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.

நான் எழுதுவதற்கான தூண்டுதலுக்குரிய காரணம் உண்டு.

தாய் மணி ஆகும் முன்னர் காய்ந்தென காய்ந்து உவமை உணர்த்தும் கருத்து யாது?

உவமை: இளம் பயிர் நெல்மணி ஆகும் முன்னால் வாடி காய்ந்து விட்டது.

கருத்து : கருணையின் தன் தாயைப் பிரிந்து வாடுகிறான்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

குறளில் பயின்று வந்துள்ள அணி நிரல்நிறை அணியாகும்.


சிறுவினா

செய்யுள்

தமிழ் அன்னை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு குறிப்பிடுவன யாவை?

  • நறுங்கனி தமிழ்
  • மண்ணுலக பேரரசு
  • பாண்டிய மன்னனின் மகள்
  • பத்துப்பாட்டாகவும்
  • எட்டுத்தொகையாகவும்
  • பதினெண் கீழ்க்கணக்காகவும்
  • ஐம்பெரும் காப்பியமாகவும் விளங்குகின்ற இந்த தமிழை தலைபணிந்து வாழ்த்துவோம் .

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

தமிழ்

  • இயல் இசை நாடகம் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெரும் காப்பியங்கள் அணிகலன்களாக உள்ளது.
  • சங்கப் புலவர்களால் பாதுகாக்கப்பட்டது.

கடல்

  • முத்தைத்தருதல்
  • முச்சங்கினை தருதல்
  • பெரிய கப்பல்கள் செல்ல உதவியாய் இருத்தல்.
  • சங்குகளைப் பாதுகாத்தல்.

சோலைக்காற்று மின்விசிறி காற்று உரையாடல்

சோலை காற்று: நான் குளிர்ச்சியான காற்றைத் தருவேன்.

மின்விசிறி காற்று: நான் மெதுவாகவும் வேகமாகவும் வீசுவேன்.

சோலை காற்று: என்னால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படாது.ஏழைகளுக்கு நண்பன் ஆவேன்.

மின்விசிறி காற்று: என்னாலும் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படாது.

முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

முல்லை நில உணவு பொருட்கள்: காட்டில் விளையும் தானியங்கள் வரகு, சாமை, தினை, முதிரை.

மருத நில உணவுப் பொருள்கள்: வயலில் விளையும் தானியங்கள் செந்நெல், வெண்ணெல்

கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

ஆற்றுப்படுத்துதல் என்பது எதிரில் வரும் கூத்தனை நீ இந்த இடத்திற்குச் செல் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வாய் என்று கூத்தன் கூறுவதாகும்.

மாளாத காதல் நோயாளன் போல் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

மருத்துவன் உடலில் ஏற்பட்ட புண்ணை அறுத்தாலும் சுட்டாலும் நல்லதற்கே என்று நோயாளன் கருதுவது போல் இறைவன் எத்தனை துன்பத்தை கொடுத்தாலும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.

மன்னர் இடைக்காடனார் என்ற புலவனுக்கு சிறப்பு செய்தது ஏன் விளக்கம் தருக?

குலேச பாண்டிய மன்னனின் அவையில் இடைக்காடன் தன்னுடைய பாடலை பாடி காண்பித்தான்

அதனை மன்னன் இகழ்ந்தான் எனவே இடைக்காடன் மீது அன்பு கொண்ட இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்.

எனவே தவறை உணர்ந்து கொண்ட மன்னன் இடைக்காடனாருக்கு சிறப்புச் செய்தான் .

உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்கு செல்ல விரும்புகிறார் அவரிடம் கற்பதன் இன்றியமையாமை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

  • இளமையில் கல்வி கற்றல் நல்லது என்பேன்.
  • கற்பதன் மூலம் உலக அறிவைப் பெறலாம் என்பேன்.
  • கற்றவர்கள் வாழ்வில் அடைந்த சாதனைகளைக் கூறுவேன்.

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா கவி பாடுகிறார்?

  • முதல் மழை விழுந்ததால் மேல் மண் ஈரத்தால் பண்பட்டது.
  • மழை பொழிந்ததால் நிலம் குளிர்ந்து நாற்று நிமிர்ந்து நின்றது
  • உழவு செழித்தது கவலை மறந்தது.

சித்தாளின் மனச்சுமையை செங்கற்களறியாது ?

இடம் :சித்தாளு கவிதை இடம் பெற்றுள்ளது.

பொருள்:சித்தாளின் மனச்சுமைகளை செங்கற்கள் ஒருபோதும் அறியாது

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

  • உயிர் பிழைக்கும் வழி அறியேன்
  • உடலின் தன்மையை அறியேன்
  • உணவுகளைக் கொண்டு வரும் வழியை அறியேன்.
  • காட்டில் செல்லும் வழியை அறியேன்.

உரைநடை சிறு வினா

புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது இதுபோல் இளம் வயிறு வகை ஐந்தின் பெயர்களை தொடர்களில் அமைக்க.

  • பிள்ளை- தென்னன் பிள்ளைகளை நேற்று நட்டேன்.
  • கன்று- மாங்கன்று நன்றாக வளர்ந்துள்ளது.
  • குட்டி- வாழைக் குட்டிகள் வேர் பிடித்துள்ளன. (பாடநூல் எடுத்துக்காட்டு)
  • பைங்கூழ்- நெல்லின் பைங்கூழ் நன்றாக வளர்ந்துள்ளது.
  • நாற்று- வயலில் இருந்து வாங்கி வந்த நாற்றை நேற்று நட்டேன்.
  • வடலி- சாலை ஓரத்தில் பனைவடலிகள் வளர்ந்துள்ளன.

உயிராக நான் பல பெயர்களில் நான் இவ்வாறு நீர் தன்னை பற்றி பேசினால் எப்படி இருக்கும் உங்களுடைய கற்பனையில் எழுதுக.

  • மழையாக நான்
  • நீர் நிலைகளில் நான்
  • சுவையாக நான்
  • வேளாண்மையில் நான்
  • தொழிற்சாலைகளில் நான்
  • மனிதனால் சீர்கெட்டுப் போன நான் .

புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையையும் .....தமிழர் விருந்தோம்பலின் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுதுக.

விருந்தோம்பலில் மாற்றம்

  • விருந்து உபசரிப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.
  • உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாக போற்றும் நிலை ஏற்பட்டது.

இன்றைய விருந்தோம்பல்

  • அறிமுகம் இல்லாதவர்களை விருந்தினர்களாக ஏற்பது இல்லை.
  • இப்பொழுது அனைத்து நிகழ்வுகளுக்கும் திருமண மண்டபங்களில் செய்யும் விருந்தோம்பல் முறையை தற்பொழுது உள்ளது.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

  • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
  • அறிவியலால் மனிதன் மனிதனாக இல்லை.
  • பணிகளால் மனிதன் இயந்திரம் போல ஓடிக் கொண்டுள்ளான் .

தலையைக் கொடுத்தேனும் தலைநகரை காப்போம் இடஞ்சுட்டி பொருள் விளக்குக

இடம்: சிற்றற்கள் ஒளி என்னும் நூலில் இடம் பெற்று உள்ளது

பொருள்: சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவை பிரிக்க முயற்சி ஏற்பட்ட பொழுது மா.பொ.சி தலையைக் கொடுத்தாவது தலைநகரை காப்போம் என்று கூறினார்.

சங்க இலக்கியங்கள் காட்டும் மரங்கள் இன்றைக்கும் தேவையானவை என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

வணிக அறம்:

அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது.

அரசியல் அறம்

மன்னனுடைய செங்கோல் வெண்கொற்ற குடை அறத்தின் சான்றுகளாக இருந்தன.

கொடைஅறம்

ஒருவன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர்கள் மகிழ்ச்சியில் நாடுவதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கிஇருக்கிறது.

இலக்கண சிறுவினா

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பு ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி .

எ.கா: போருழந் தெடுத்த ஆரெயில்

தீவக அணி

செய்யுளின் ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருந்துவது தீவக அணி ஆகும்.

எ.கா. சேர்ந்தன வேந்தன் திருநெடுங்கண்

தன்மையணி

இயற்கையில் அமைந்த உண்மையான இயல்பு தன்மையை கேட்பவர் மகிழுமாறு உரிய சொற்களை வைத்து பாடுவது தன்மையணி.

எ.கா: மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்.

எ.கா: விரித்த கருங்குழலும்

நிரல் நிரை அணி

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ் வரிசைப்படியே பொருள் கொள்வது நிரல்நிரை அணியாகும்.

எ.கா: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை


ஐந்து மதிப்பெண் வினாக்கள்

காட்சி

  • இந்தப் படம் அழகாக உள்ளது
  • சிந்திக்க வைப்பதாக உள்ளது
  • கற்பனைத் திறனை தூண்டுகிறது
  • இப்படம் உணர முடியாத கருத்துக்களை உணர்த்துகிறது.

கடிதம்

1) மரம் இயற்கையின் வரம் (நண்பனுக்கு கடிதம்)

அன்புத் தோழன் [பெயர்],

மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் நீ கட்டுரை எழுதி மாநில அளவில் முதல் பரிசு பெற்றிருக்கிறாய் என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் நீ இது போல் பல பரிசுகளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
[உங்கள் பெயர்]

உறைமேல் முகவரி:

பெறுநர்,

[நண்பனின் பெயர்],

[நண்பனின் முகவரி].

2) உணவு விடுதி (புகார் கடிதம்)

அனுப்புநர்

அஅஅஅஅ

[உங்கள் முகவரி]


பெறுநர்

உரிய அதிகாரி,

[உணவு பாதுகாப்பு துறை / விடுதி மேலாளர் முகவரி]

அஅஅஅஅ


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: தரமற்ற உணவு மற்றும் అధిక விலை குறித்த புகார்.

வணக்கம். தங்கள் பகுதியில் உள்ள [விடுதியின் பெயர்] என்ற உணவு விடுதி ஒன்றில் [தேதி] அன்று வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது. இது குறித்த உரிய சான்றுகளுடன் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதியுள்ளேன். எனவே தாங்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அஅஅஅஅ

உறைமேல் முகவரி: பெறுநரின் முகவரி மேலே குறிப்பிட்டது போல்.

3) பொங்கல் மலர் (கட்டுரை பிரசுரிக்க கோரிக்கை)

அனுப்புநர்

அஅஅஅஅ

[உங்கள் முகவரி]


பெறுநர்

ஆசிரியர்,

[நாளிதழ் பெயர்],

[நாளிதழ் முகவரி].

அஅஅஅஅ


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: பொங்கல் மலருக்கு கட்டுரை அனுப்புதல் প্রসঙ্গে.

வணக்கம். தங்கள் நாளிதழில் பொங்கல் மலருக்கு "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன். அக்கட்டுரையை தங்கள் நாளிதழ் பொங்கல் மலரில் வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அஅஅஅஅ

உறைமேல் முகவரி: பெறுநரின் முகவரி மேலே குறிப்பிட்டது போல்.

4) மின்விளக்கு வசதி (கோரிக்கை கடிதம்)

அனுப்புநர்

அஅஅஅஅ

[உங்கள் தெரு மற்றும் வீட்டு முகவரி]


பெறுநர்

உரிய அதிகாரி,

[மின்சார வாரியம் / ஊராட்சி / நகராட்சி அலுவலகம்],

[அலுவலக முகவரி].

அஅஅஅஅ


மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து தர கோருதல்.

வணக்கம். எங்கள் தெருவில் [தெருவின் பெயர்/பகுதி குறிப்பிடுக] உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, உடனடியாக எங்கள் தெருவில் பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்து, மின்விளக்கு வசதியை ஏற்படுத்தித் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
அஅஅஅஅ
(தெரு மக்கள் சார்பாக)

உறைமேல் முகவரி: பெறுநரின் முகவரி மேலே குறிப்பிட்டது போல்.


செய்யுள் நெடுவினா

மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் தாய் வாழ்த்து பாடலையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்று உருவாக்குக.

மனோன்மணியம் சுந்தரனார் :

  • தமிழை பெண்ணாக வர்ணிக்கிறார்.
  • தமிழ் தாயின் முகமாக பாரத கண்டம் திகழ்கிறது.
  • தமிழ் மொழி உலகில் எல்லா திசைகளிலும் புகழ்பெற்று வாழ்கிறது.

பெருஞ்சித்திரனார் :

  • அன்னை மொழியே
  • அழகான செந்தமிழே
  • பழமைக்கு பழமையான மொழியே
  • பத்துப்பாட்டாக
  • எட்டுத்தொகையாக
  • பதினெண்கீழ்க்கணக்காக என்று வர்ணிக்கிறார்.

முல்லைப் பாட்டில் உள்ள கார்கால செய்திகளை விவரிக்க.

  • அகன்ற உலகம் முழுவதும் பெருமழை பொழிகிறது.
  • மேகம் கடல் நீரை பருகி மிகுந்த வேகத்துடன் மழை பொழிகிறது.
  • மழை பொழிந்து நின்றவுடன் மாலை நேரத்தில் முதுமை பெண்கள் விரிச்சி கேட்க செல்கின்றனர்.
  • அப்பொழுது நற்சொல்லைக் கேட்டு வருகின்றனர்.

ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது அது இன்றைய நிலையில் வழிகாட்டுதலாக மாறி இருப்பதே விளக்குக.

அன்றைய வழிகாட்டல்

பரிசுப் பொருள்களை வாங்கி வரும் ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனுக்கு வழிகாட்டி நெறிப்படுத்துவான். அப்பொழுதைய வழிகாட்டல் மேம்பட்டு இருந்தது.

இன்றைய வழிகாட்டல் :

இன்றைய சிக்கலான உலகில் வழிகாட்டுதல் மனிதர்களுக்கு அவசியமாகிறது.

வழிகாட்டலின் பரிணாமங்கள்:

  • கல்வியில் வழிகாட்டுதல்
  • தொழிலில் வழிகாட்டுதல்
  • உளவியல் வழிகாட்டல்

வழிகாட்டலின் பயன்கள்:

  • மனித நேயம் மேம்படுகிறது.
  • உறவுகள் காணப்படுகிறது.

நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைந்து கூறுவதாக தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க. “விசும்பில் ஊழி ஊழ் “

“விசும்பில் ஊழி ஊழ் “

பேரொலியுடன் வானத்தில் கரு ஒன்று உருவானது.

அதற்குப் பிறகு காற்று உருவானது

பல காலங்கள் கழித்து தொடர்ந்து மழை பெய்தது.

பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

பின்னர் உயிர்கள் வாழக்கூடிய பூமியாக உரு பெற்று உருவானது.

இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

  • குலேச பாண்டிய மன்னனை சந்தித்தான் இடைக்காடன்.
  • தன்னுடைய பாடலை பாடி காண்பித்தான்.
  • மன்னன் அந்தப் பாடலை அவமதித்தான்.
  • எனவே இடைக்காடன் இறைவனிடம் சென்று முறையிட்டான்.
  • இறைவன் கோவிலை விட்டு நீங்கினான்.
  • மீண்டும் மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு இடைக்காடனாருக்கு மரியாதைகள் செய்தான்.

சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்க காட்சியை சிலப்பதிகாரம் வழி நின்று விளக்குக.

வணிக வீதிகள்

  • வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி விற்பனை செய்யப்பட்டன.
  • பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர், எண்ணெய் விற்போர், வெற்றிலை விற்பவர், ஏலம் முதலான மணம் தரும் பொருள்களை விற்பவர், பல வகையான இறைச்சிகளை விற்பவர், மீன் விற்பவர், உப்பு விற்பவர் என காணப்பட்டனர்.
  • பல வகை தொழில் செய்பவர்கள் இருந்தனர்.
  • மக்கள் நிறைந்து வாழும் பகுதியாக மருவூர் பாக்கம் விளங்கியது.

கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விளக்குக.

  • கருணையன் மலர் போன்ற கையை குவித்து பூமித்தாயே உடலை ஏற்றுக் கொள்வாய் என்று கூறினான்.
  • அம்பு துளைத்த புண் போல் வருந்தினான்.
  • துணையைப் பிரிந்த பறவையை போல் தாயைப் பிரிந்து வாடினான்.
  • கருணையனின் புலம்பலைக் கேட்டு அருவிகள், சுனைகள் பறவைகள் வண்டுகள் அழுவது போல் கூச்சலிட்டன.

எட்டு மதிப்பெண் வினாக்கள்

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக.

சொல்வளம்

  • சொல்வளம் இலக்கிய செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவென்றாலும் தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
  • சொல்லில் தான் உணர்ச்சி புதைந்திருக்கிறது.
  • ஒரு சொல் குறித்து பல பொருள் வருவதும் உண்டு பல பொருள் குறித்து ஒரு சொல் வருவது உண்டு.

சொல்லாக்கத்திற்கான தேவை :

  • தமிழர்களின் அழகுணர்வு மலரும் மணமும் போல கவிதையுடன் சொல்வளம் இரண்டறக் கலந்திருக்கிறது.
  • மொழியை கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலை நாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விரித்து எழுதுக.

  • வீட்டிற்கு வந்த மாமா குடும்பத்தை அன்புடன் வரவேற்றோம்.
  • அவர்களின் மனம் மகிழுமாறு அறுசுவை உணவு சமைத்து உண்ண கொடுத்தோம்
  • அவர்களின் மனம் மகிழுமாறு அவர்களின் அருகில் அமர்ந்து இனிமையான சொற்களைப் பேசி மகிழ்ந்தோம்
  • பின்பு வீட்டிற்கு கிளம்பி செல்லும் பொழுது 7 அடி நடந்து சென்று அவர்களை வழி அனுப்பினோம்
  • மீண்டும் வீட்டிற்கு இன்னொரு முறை வருமாறு அன்புடன் இன்சொற்களை கூறி வழி அனுப்பி வைத்தோம்.

ஒரு குழந்தையை தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர் கோப்பை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா?

  • பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் என்ற கண்ணதாசன் சிந்தனைக்கு ஏற்ப அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
  • எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுப் புரிந்த ரோபோவிடம் குழந்தை ஒப்படைத்துவிட்டு பெற்றோர்கள் அலுவலகம் செல்லும் வாய்ப்பு உள்ளது
  • விடுதிகள் வங்கிகள் அலுவலகங்கள் போன்ற எல்லா இடങ്ങളിലും ரோபோக்கள் பயன்பட போகிறது
  • உறவினர்களைப் போல நெருங்கி உறவாட போகிறது.
  • மருத்துவம் தொழில்நுட்பம் போன்ற எல்லா துறைகளிலும் பயன்பாட்டிற்கு வரப் போகிறது.

தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிற மொழியில் இலக்கிய வளங்கள் மொழிபெயர்ப்பு கலை என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்க கட்டுரை எழுதுக.

  • ஒரு மொழி வளம் பெற மொழிபெயர்ப்பு இன்றியமையாதது
  • உலக இலக்கியங்களில் பழமையானது சங்க இலக்கியம்
  • இராமாயணம் மகாபாரதம் போன்ற நூல்கள் மொழிபெயர்ப்பால் கிடைக்கப்பெற்று நூல்கள் ஆகும்.
  • மொழிபெயர்ப்பு மூலம் தமிழ் மொழி வளம் பெறுகிறது.

நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

  • நம் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் மதம் இனம் மொழி சாதி வேறுபாடு மறந்து கொண்டாடும் விழாக்களை நாட்டு விழாக்கள் ஆகும்.
  • ஒரு மனிதனின் சிறு வயதில் கற்கும் நற்பண்புகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படை.
  • பள்ளியில் நற்பண்புகளை வளர்ப்பதற்கு நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய மாணவர் படை இந்த அமைப்புகளில் இணைந்து செயலாற்றும் பொழுது நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி அடையும்.

பள்ளித் தொடரில் கிடைத்த பணப்பையை ஒருவரிடம் ஒப்படைத்ததையும் அதற்கு பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர்களுக்கு கடிதம் எழுதுக.

பாசமிக்க மாமா அவர்களுக்கு,

தங்கள் அன்புள்ள ஆனந்தன் எழுதிக் கொள்ளும் மடல். இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா! நான் கடந்த வாரம் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது பள்ளி திடலில் ஒரு பணப்பையை பார்த்தேன். அதை கண்டுபிடித்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தேன். தலைமை ஆசிரியர் அதை உரியவரிடம் ஒப்படைத்தார். அதற்கு அந்த உரியவர் எனக்கு மிகவும் பாராட்டை தெரிவித்தார். தலைமை ஆசிரியரும் பாராட்டை தெரிவித்தார்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள,
மா. ஆனந்தன்

உறைமேல் முகவரி

பெறுநர்,

[மாமாவின் பெயர்],

[மாமாவின் முகவரி].


துணைப்பாடம்

புயலிலே ஒரு தோணி

  • புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி.
  • இதில் கப்பல் படும் பாட்டை கூறுகிறார்.
  • கொளுத்தி எடுக்கும் வெயில் சட்டென நின்றது.
  • வானம் திடீரென கும்மிருட்டாகியது மலை கொட்டு கொட்டு என்று கொட்டியது.
  • அதில் கப்பல் படும் பாட்டை வர்ணிக்கிறார்.
  • அதேபோல் புலம்பெயர்ந்த தமிழர்கள் படும் பாடும் இவ்வாறு தான் உள்ளது என்று கூறுகிறார்.

2) அன்னமய்யா

முன்னுரை

பசித்தவருக்கு உணவிடுதல் அறச்செயலாகும் என்பதை இந்த அன்னமய்யா கதை உணர்த்துகிறது.

  • கோபல்லபுரத்து கிராமத்தில் வெள்ளந்தி மனம் படைத்தவர் அன்னமய்யா பெயருக்கு ஏற்றார் போல் மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்.
  • யார் என்றே தெரியாத ஒருவருக்கு உணவிட்டு அவரின் மனதிலும் இடம் பிடித்தவர்.பெயருக்கு பொருத்தமான வாரே அவருடைய குண நலங்களும் அமைந்தன.

4) ஸ்டீபன் ஹாக்கிங்

  • தன்னம்பிக்கை கொண்ட மனிதர்
  • கண்ணத்தசை மூலம் உணரும் கருவியை கண்டுபிடித்தவர்.
  • கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்தவர்
  • தன்னுடைய கருத்துக்களை உலகம் ஏற்குமாறு செய்தவர்.
  • மருத்துவர்கள் குறித்த நாட்களையும் தாண்டி வாழ்ந்தவர்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே வேடமிழந்து பறிக்கப்பட்ட புத்தகம் சிறுமியின் வாழ்க்கையில் கல்வி சுடரை ஏற்றிய கதையை பற்றி உங்கள் கருத்துக்களை விவரிக்க.

  • படிக்கத் தெரியாது என்ற வார்த்தை மேரியினுடைய வாழ்க்கையே புரட்டி போட்டு இருக்கிறது.
  • மேரியின் அதிகபட்ச ஆசை பருத்திக்காட்டில் முதல் பருத்தி வெடிப்பதை பார்ப்பது தான்.
  • ஒரு நாள் தாய் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற மேரி அங்குள்ள குழந்தை படிக்கத் தெரியாது என்று கூறியது அதனை கேட்டவுடன் அவள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.
  • அந்த எண்ணத்தின் காரணமாக பென் வில்சன் உதவியுடன் படித்து சாதனையும் புரிந்து காண்பித்தால் என்பது இந்த கதை மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.

5) ஒருவன் இருக்கிறான்

முன்னுரை

கு அழகிரிசாமி எழுதிய ஒருவன் இருக்கிறான் என்னும் கதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் மாந்தர்களை பற்றி பார்ப்போம்.

  • குப்புசாமியும் வீரப்பனும் உயிர் நண்பர்களாக இருந்தனர்.
  • குப்புசாமியின் நோய்வாய்ப்பட்டு துன்பப்பட்டு கொண்டிருந்த காலத்தில் வீரப்பன்தான் சைக்கிள் கடையில் வேலை பார்த்த அவனுக்கு உதவி செய்தான்.
  • பிறகு நோயின் உடைய தன்மை அதிகமான காரணத்தால் அவன் வெளியூரில் உள்ள தன் மாமா வீட்டிற்கு செல்ல நேரிட்டது.
  • அங்கு இருந்த பக்கத்து வீட்டுக்காரன் இவனுக்கு யாரும் இல்லை என்று நினைத்தான்.
  • அப்பொழுது வீரப்பன் குப்புசாமிக்கு எழுதி இருந்த கடிதத்தைப் பார்த்து இவனுக்கு இப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒரு நண்பன் இருக்கிறான் என உணர்ந்து மனம் மாறினான்.

6) மகளிர் நாள் விழா

அறிக்கை: 8.3.2020 அன்று மகளிர் நாள் விழா பள்ளியில் தொடங்கியது. ஆசிரியர்களும் மாணவர்களும் மேலாக கலந்து கொண்டிருந்தனர். அப்பொழுது சிறப்புரை ஆற்ற கலையரசி அவர்கள் வந்திருந்தார். மகளிர் நாள் விழா பற்றி எடுத்துக் கூறி மாணவர்களை முன்னேற்ற பாதைக்குச் செல்லுமாறு கூறினார்.


பொதுக்கட்டுரை

1) சான்றோர் வளர்த்த தமிழ்

முன்னுரை

நம் எண்ணங்களை மற்றவருக்கு தெரிவிக்க கருவியாக உள்ள மொழி தமிழ். இந்த தமிழ் வளர்த்த சான்றோர்கள் பற்றி காண்போம்.

தமிழ் வளர்த்த சான்றோர்கள்:

  • வீரமாமுனிவர்
  • குணங்குடி மஸ்தான் சாகிப் போன்ற பலர் உள்ளனர்.

சிறப்பு :

  • வேங்கட முதல் குமரி வரை தமிழ் பரவி இருந்தது.
  • கடவுளையோ மக்கள் சிறந்த வரியோ குழந்தையாக பாவித்து பாடுவது பிள்ளைத்தமிழ். நூறு பொருள் அமையப்பெற்றது சதகம்.

முடிவுரை

தேன் மதுரை தமிழோசை உலகமெல்லாம் பரவ செய்ய வேண்டும்.

2) கல்பனா சாவ்லா

முன்னுரை

சாதனை புரிந்த பெண்கள் குளத்தில் தோன்றிய பொன் விளக்கு கல்பனா சாவ்லா அவர்களை பற்றி பார்ப்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

1995 நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 372 மணி நேரம் வானில் பறந்து சாதனை புரிந்து முதல் இந்திய பெண் ஆவார்.

பெற்ற விருதுகள் :

  • அமெரிக்க காங்கிரஸின் விண்வெளிப்பதக்கம்
  • நாசாவின் விண்டோராப் பதக்கம்

முடிவுரை

கனவுகளை நினைவாக்க வேண்டும் என்று உணர்த்திச் சென்ற வீர பெண்ணை நாமும் போற்றுவோம்.

3) அரசு பொருட்காட்சி

முன்னுரை:

அரசு பொருட்காட்சியில் அரசின் பல வகையான திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டு இருந்தது.

நுழைவுச்சீட்டு :

சிறியவர்களுக்கு 20 ரூபாயும் பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாயும் வசூலித்தனர்.

பல்துறை அரங்குகள் :

வேளாண்மைதுறை, மின்சாரத்துறை, பட்டு வளர்ப்பு துறை போன்றவை இருந்தன.

பொழுதுபோக்கு அம்சங்கள்:

குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்களும் மற்றும் உண்ண உணவும் அதனை உண்டு மகிழ்ந்து வீட்டிற்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் திரும்பினோம்.

4) சாலை பாதுகாப்பு

முன்னுரை :

மனித தேவைகளில் முக்கியமானது போக்குவரத்து ஆகும்.பாதுகாப்பான சாலை போக்குவரத்திற்கு சாலை விதிகள் மிகவும் அவசியம்.

  • தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வார்த்தைக்கு ஏற்ப தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்
  • ஒவ்வொருவரும் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  • சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும்.
  • மஞ்சள் விளக்கு எரிந்தால் தயாராக இருக்க வேண்டும்.
  • பச்சை விளக்கு எரிந்தால் புறப்பட்டு செல்ல வேண்டும்.
  • வாகனப்பதிவு சான்று,ஓட்டுநர் உரிமம், காப்பீடு முதலியவற்றை வண்டியில் வைத்திருக்க வேண்டும்.
  • இவை இன்றி வண்டிகளை இயக்கக் கூடாது

முடிவுரை

வேகம் விவேகம் அல்ல மிதவேகம் மிக நன்று .