மாதிரி வினாத்தாள்
பிரிவு - அ (சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக)
(மதிப்பெண்கள்: 5 x 1 = 5)
- காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
- 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -
- எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -
- 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -
- வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -
பிரிவு - ஆ (குறுவினா)
(மதிப்பெண்கள்: 5 x 2 = 10)
- 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
- "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- கீழ்க்கண்ட தொடர்களில் சரியான தொடரைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
- "கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது" - பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
- சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
பிரிவு - இ (சிறுவினா)
(மதிப்பெண்கள்: 1 x 5 = 5) - எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.
- தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
- 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.' இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- `அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' - இவை அனைத்தையும் யாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
பிரிவு - ஈ (நெடுவினா)
(மதிப்பெண்கள்: 1 x 10 = 10) - எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.
- நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
- காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
"கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக!"
- 'புயலிலே ஒரு தோணி' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?