கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சினையில் நீதிபதியின் மகன் மற்றும் தர்ஷன் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தர்ஷனை தற்போது போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
ஆனால் நீதிபதியின் மகன் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.
தற்போது தர்ஷன் பார்க்கிங் பிரச்சினையில் கைதாகி இருப்பது பற்றி சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தர்ஷன் கைது என்ற செய்தி கேட்டதும் எனக்கு ஒரு நொடி சந்தோஷமாக இருந்தது.
ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என யோசித்தேன்.
விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பின் மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறார்கள். விசாரணையோ திங்கள்கிழமை அன்றுதான் நடக்கும்.
மருத்துவமனையிலிருந்து பேட்டி கொடுத்த நீதிபதி மகன் சொல்வதுதான் உண்மை என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டிருக்கலாமே.
தப்பு பண்ணாதவர்கள் தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம்
என சனம் ஷெட்டி தற்போது தர்ஷனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.
#SanamShetty
#Darshan
#DarshanArrest
#Kollywood
#ChennaiNews