முழுக்க முழுக்க நம்ம அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்துற படமாவே ஆதிக் இந்தப் படத்த எடுத்திருக்காரு. ஒத்த ரூபா தரேன் பாட்டுல ஆரம்பிச்ச இந்த ட்ரெய்லர்ல, "This Is My Game"ன்னு நம்ம தல மங்காத்தா டயலாக்க வில்லன் அர்ஜுன் தாஸ் சொல்றது, "அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்", "இருங்க பாய்"ன்னு வர்ற வசனம்லாம் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
அதுவும் ஜி.வி.பிரகாஷ் இந்த ட்ரெய்லருக்காகப் பண்ணியிருந்த மிக்ஸிங் இருக்கே... வேற லெவல்ல மாஸா இருந்துச்சு. கண்டிப்பா முதல் நாளு தியேட்டர் தெறிக்கப்போகுது... அதுல டவுட்டே இல்ல.
இந்த ட்ரெய்லர்ல த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ்ன்னு எல்லாரும் வந்தாலும், யாருமே எதிர்பார்க்காத மாதிரி பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப் என்ட்ரி குடுத்தாரு பாருங்க.
தமிழில ஆரண்ய காண்டம், பிகில் படத்துலயும் அவரு நடிச்சிருக்காரு. அதுவும் ட்ரெய்லரோட கடைசில சிம்ரன் மேடமோட என்ட்ரி செமையா இருந்தது குறிப்பிடத்தக்கது.!
#GoodBadUglyTrailer
#AjithKumar
#GVPrakash
#JackieShroff
#TamilCinema