தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற இந்த நடிகை, பாலிவுட் வரை சென்று கலக்கலாம் என நம்பினார். ஆனால் விதி வேறு மாதிரி விளையாடியது.
கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி திரையுலகில் "பேபி ஜான்" என்ற படத்தில் நடித்தார். அட்லி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலமாக, ஹிந்தி திரையுலகில் தனது தடத்தை பதிக்கலாம் என்று கீர்த்தி சுரேஷ் நம்பினார்.
ஆனால் படம் வெளியானது. கீர்த்தி சுரேஷின் கனவெல்லாம் தவிடுபொடியானது.
"பேபி ஜான்" படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தப்படம் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 700 கோடி வசூல் செய்த 'சாவா' படத்தின் வாய்ப்பை தவற விட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அதாவது, ராஷ்மிகா மந்தனா நடித்த அந்த கதாப்பாத்திரத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்தாராம்.
ஆனால், கீர்த்தி சுரேஷ் அந்த நேரத்தில், "பேபி ஜான்" படத்தில் நடித்து வந்ததால் சாவா படத்தின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
இந்த வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு சென்று சேர்ந்துள்ளது. ராஷ்மிகாவிற்கு ஹிந்தி திரையுலகில் மிக பெரிய வெற்றிப்படமாக சாவா அமைந்துள்ளது.
ஒரு பக்கம் சினிமா வாழ்க்கை சரிவை சந்திக்க, இன்னும் ஒரு பக்கம், மிக பெரிய வெற்றியை பெறும் ஹிந்தி படத்தின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
பேபி ஜான் படத்திற்காக மெகா ஹிட் படத்தை மிஸ் செய்த கீர்த்தி சுரேஷ். இந்த சம்பவத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கமெண்டில் சொல்லுங்க.
#KeerthySuresh #BabyJohn #Chhaava #RashmikaMandanna #MissedOpportunity