வைரலாகும் கமல் - சிம்புவின் 'தக் லைஃப்' தோற்றம்!
நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ‘தக் லைஃப்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் பார்ப்பதற்கு பிரமிக்கத்தக்க வகையில் இருக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
#ThugLife
#KamalHaasan
#Silambarasan
#Maniratnam
#IndianCinema