Search This Blog

ஆட்டுக்கால் சூப்

தேவை : 

ஆட்டுக்கால் - 4
சீரகம் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
மிளகு - 3 தேக்கரண்டி
மல்லி (தனியா) - 2 தேக்கரண்டி
பல் பூண்டு - 5

செய்முறை : 

4 கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும் 3 தேக்கரண்டி மிளகு 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி மல்லி (தனியா) 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, இவற்றை அரைத்துக்கொள்ளவும். பிரஷர் குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி இத்துடன் அரைத்த மசாலா, கால் துண்டுகள் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். விசில் சப்தம் கேட்டு 20 நிமிடங்கள் கழித்து இறக்கவும். திறக்க வந்த பின், வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால்கறியுடன் சேர்த்து கிளறவும்.

Krishnan, Rathika. Chettinadu Asaiva Samayal: Non-Veg. Receipies (Tamil Edition) . Kindle Edition. 

No comments:

Post a Comment

விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்குச் சென்ற நடிகை ஹன்சிகா!

அமிர்தசரஸ் — குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கத...