ஓம் விதியின் வடிவங்கள் (Forms of Ohm's Law)
1. ஓம் விதியின் நுண் வடிவம் (Microscopic form of Ohm's law)
விதி: மின்னோட்ட அடர்த்தியானது (Current density), மின்புலத்திற்கு (Electric field) நேர்த்தகவில் இருக்கும்.
சூத்திரம்: → J = σ → E
- → J → மின்னோட்ட அடர்த்தி (Current density)
- σ (சிக்மா) → கடத்தியின் மின்கடத்து எண் (Conductivity of the conductor)
- → E → மின்புலம் (Electric field)
2. ஓம் விதியின் பெரு வடிவம் (Macroscopic form of Ohm's law)
சூத்திரம்: V = IR
- V → மின்னழுத்த வேறுபாடு (Potential difference)
- I → மின்னோட்டம் (Current)
- R → மின்தடை (Resistance)