Search This Blog

10th Standard Tamil: Quick Revision - Works, Authors, and Characters

கணப்பொழுதில் ஒரு விரைவுப் பார்வை(10ஆம் வகுப்பு - ஒரு மதிப்பெண் வினா - விடைகள்)

படைப்புகளும் ஆசிரியர்களும்

இயல் படைப்புகள் ஆசிரியர்கள்
1 அன்னை மொழியே பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம் தேவநேயப் பாவாணர்
காலக்கணிதம் கண்ணதாசன்
புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
2 பரிபாடல் கீரந்தையார்
மேகம் நாகூர்ரூமி
பிரம்மம் பிரபஞ்சன்
3 காசிக்காண்டம் அதிவீரராம பாண்டியர்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன்
4 திருவிளையாடற் புராணம் பரஞ்சோதி முனிவர்
புதிய நம்பிக்கை கமலாலயன்
5 கம்பராமாயணம் கம்பர்
பாய்ச்சல் சா. கந்தசாமி
6 சிற்றகல் ஒளி ம.பொ.சிவஞானம்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
7 தேம்பாவணி வீரமாமுனிவர்
அக்கறை கல்யாண்ஜி
திருக்குறள் திருவள்ளுவர்

பாடத்தலைப்புகள், ஆசிரியர் மற்றும் கதைமாந்தர்கள்

இயல் பாடத்தலைப்புகள் ஆசிரியர் கதைமாந்தர்கள்
1 புயலிலே ஒரு தோணி
(விரிவானம்)
ப. சிங்காரம் பாண்டியன், கப்பித்தான் (மாலுமி), சுமத்ரா பிரயாணிகள், ஜப்பான் அதிகாரி
2 பிரம்மம்
(விரிவானம்)
பிரபஞ்சன் சௌந்தரா (தங்கை), அப்பா, அம்மா, அண்ணன், பாட்டி
3 கோபல்லபுரத்து மக்கள்
(விரிவானம்)
கி. ராஜநாராயணன் சுப்பையா, அன்னமய்யா, மணி, கொத்தாளி
4 திருவிளையாடற் புராணம்
(கவிதைப்பேழை)
பரஞ்சோதி முனிவர் குலேசபாண்டியன், புலவர் இடைக்காடனார், இறைவன்
புதிய நம்பிக்கை
(விரிவானம்)
கமலாலயன் மேரிஜேன், அம்மா-பாட்ஸி, வெள்ளைச்சீமி, தந்தை-சாம், மிஸ்-வில்ஸன்
5 பாய்ச்சல்
(விரிவானம்)
சா. கந்தசாமி அழகு, அனுமார (குரங்கு), ராமு
6 மங்கையராய்ப் பிறப்பதற்கே
(விரிவானம்)
- பத்தாம் வகுப்பு மாணவிகள்
  • தொகுப்பாளர்
  • முகில்நாச்சி (எம்.எஸ் சுப்புலட்சுமி)
  • மோகனா (பால சரஸ்வதி)
  • வளர்மதி (ராஜம் கிருஷ்ணன்)
  • அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்)
  • மாதவி (சின்னப்பிள்ளை)
7 தேம்பாவணி
(கவிதைப்பேழை)
வீரமாமுனிவர் கருணையன்
இராமானுசர் - நாடகம்
(விரிவானம்)
- இராமானுசர், கூரேசர், முதலியாண்டான், பூரணர்

ஆசிரியர் - இயற்பெயரும், சிறப்புப் பெயர்களும்

வ. எண் ஆசிரியர் இயற் பெயர், சிறப்புப் பெயர்
1. பெருஞ்சித்திரனார் பாவலரேறு (சிறப்புப் பெயர்)
2. கண்ணதாசன் முத்தையா (இயற்பெயர்)
3. நாகூர்ரூமி முகம்மது ரஃபி (இயற்பெயர்)
4. பிரபஞ்சன் வைத்தியலிங்கம் (இயற்பெயர்)
5. கி. ராஜநாராயணன் கரிசல் எழுத்தாளர் (சிறப்புப் பெயர்)
6. திருவள்ளுவர் பெருநாவலர், முதற்பாவலர், பொய்யில்புலவர், தெய்வப்புலவர் (சிறப்புப்பெயர்கள்)
7. கமலாலயன் வெ. குணசேகரன் (இயற்பெயர்)
8. கம்பர் கல்வியில் பெரியவர் (சிறப்புப் பெயர்)
9. நா. முத்துசாமி கூத்துப்பட்டறை நா. முத்துசாமி, கலைஞாயிறு (சிறப்புப்பெயர்கள்)
10. ம. பொ. சிவஞானம் சிலம்புச்செல்வர் (சிறப்புப் பெயர்)
11. வீரமாமுனிவர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (இயற்பெயர்)
இஸ்மத் சன்னியாசி - பாரசீகம், தூய துறவி - தமிழ் (சிறப்புப்பெயர்கள்)
12. கல்யாண்ஜி கல்யாணசுந்தரம் (இயற்பெயர்)
வண்ணதாசன் (புனை பெயர்)

No comments:

Post a Comment

விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்குச் சென்ற நடிகை ஹன்சிகா!

அமிர்தசரஸ் — குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கத...