6 ஆம் வகுப்பு அறிவியல் தீர்வுகள்
இரண்டாம் இடைப் பருவத் தேர்வு - 2024
பகுதி - I (5x1=5)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
2. 60°C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 60°C வெப்ப நிலையில் உள்ள ஒரு நீர் நிரம்பிய முகவையில் போடும்போது வெப்பமானது
3. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.
4. யூகேரியாட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.
5. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
II. பொருத்துக (5x1=5)
| வினா | விடை |
|---|---|
| 6. வெப்பம் | ஜூல் |
| 7. வெப்பநிலை | கெல்வின் |
| 8. வெப்பச் சமநிலை | வெப்பப் பரிமாற்றம் இல்லை |
| 9. பனிக்கட்டி | 0°C |
| 10. கொதிநீர் | 100°C |
IV. ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும் (5x2=10)
11. வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை: வெப்பமான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு வெப்ப ஆற்றல் பரிமாற்றம் இல்லாத நிலையை வெப்பச்சமநிலை என்கிறோம்.
12. i) பட்டாசு வெடித்தல் என்பது ஒரு _________ மாற்றம். பூமி சுற்றுதல் ஒரு _________ மாற்றம்.
விடை: பட்டாசு வெடித்தல் என்பது ஒரு வேகமான மாற்றம். பூமி சுற்றுதல் ஒரு மெதுவான மாற்றம்.
ii) எடுத்துக்காட்டு தருக.
அ) இயற்பியல் மாற்றம்: பனிக்கட்டி உருகுதல்
ஆ) வேதியியல் மாற்றம்: பால் தயிராதல்
13. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் யாவை?
விடை: செல்சுவர் மற்றும் பசுங்கணிகங்கள்.
14. அ) உணவு உற்பத்தியாளர் : பசுங்கணிகம். ஆற்றல் மையம் : __________
விடை: மைட்டோகாண்ட்ரியா
ஆ) ஸ்பைரோகைரா : தாவர செல் :: அமீபா : __________
விடை: விலங்கு செல்
15. யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.
விடை: தாவர செல், விலங்கு செல், பூஞ்சைகள்.
16. கரைசல் என்றால் என்ன?
விடை: கரைபொருள் மற்றும் கரைப்பான் சேர்ந்த ஒருபடித்தான கலவையே கரைசல் எனப்படும்.
17. வெப்பநிலை என்றால் என்ன?
விடை: ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவு வெப்பநிலை எனப்படும்.
V. விரிவான விடையளி (2x5=10)
18. அ) வெப்பவிரிடைதலைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அது விரிவடைவது வெப்ப விரிவு எனப்படும். உதாரணம்: ரயில் தண்டவாளங்களுக்கு இடையே இடைவெளி விடப்படுதல்.
(அல்லது)
ஆ) ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ) மெதுவான / வேகமான மாற்றம்:
மெதுவான மாற்றம்: நகம் வளர்தல்
வேகமான மாற்றம்: பட்டாசு வெடித்தல்
ஆ) மீள்மாற்றம் / மீளாமாற்றம்:
மீள்மாற்றம்: பனிக்கட்டி உருகுதல்
மீளாமாற்றம்: பால் தயிராதல்
இ) விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்:
விரும்பத்தக்க மாற்றம்: காய் கனியாதல்
விரும்பத்தகாத மாற்றம்: இரும்பு துருப்பிடித்தல்
19. அ) எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.
| செல் நுண்ணுறுப்பு | பணிகள் |
|---|---|
| செல் சுவர் | செல்லுக்கு வடிவத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. |
| செல் சவ்வு | செல்லுக்கு பாதுகாப்பளிக்கிறது, பொருட்களை உள்ளேயும் வெளியேயும் அனுப்புகிறது. |
| சைட்டோபிளாசம் | செல் நுண்ணுறுப்புகள் மிதந்து காணப்படும் இடம். |
| மைட்டோகாண்ட்ரியா | செல்லின் ஆற்றல் மையம். |
| நியூக்ளியஸ் | செல்லின் கட்டுப்பாட்டு மையம். |
(அல்லது)
ஆ) தாவர செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
விடை: தாவர செல்லின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை வரைந்து பாகங்களை குறிக்க வேண்டும்.