10th Tamil - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக (இயல் 1 முதல் 9 வரை) முழுமையான தொகுப்பு

Welcome to the ultimate study guide for TN Board Class 10 Tamil exam preparation! In this detailed Concept Guide & Chapter Notes, we have compiled the best answers for காட்சியைக் கண்டு கவினுற எழுதுக (Creative Writing based on Pictures). This topic consistently appears as Question No. 40 in your Tamil Public Exam. Covering topics from Class 10 Tamil Iyal 1 to 9, this post gives you easy-to-memorize poems and highly scannable bullet-point explanations. Master these key textbook concepts, use our included Exam Tips, and secure full marks effortlessly!

Tamil Nadu Education Header

Exam Tip: To score a perfect 5/5 in the "காட்சியைக் கண்டு கவினுற எழுதுக" section, always provide a catchy title, write at least 6 to 8 lines with rhyming words (எதுகை, மோனை), and add a brief 2-point explanation of your poem's inner meaning!

இயல் 1 - மொழிக் கல்வி (Education)

கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் படம்

தலைப்பு: அறிவொளி ஏற்றும் கல்வி

அறியாமை எனும் பூட்டு!
அறிவென்னும் திறவுகோல்!
பூட்டிய சிந்தனையால்
புழுங்கிக் கிடக்கிறது ஒருவன்!
கல்வி எனும் திறவுகோலால்
அறிவுலகைத் திறக்கிறான் மற்றொருவன்!
புத்தகங்கள் பூட்டைத் திறக்கும்;
புதிய உலகைப் படைக்கும்!

விளக்கம்:

  • அற்றம் காத்திடும்: கல்வியானது பகைவரிடம் இருந்து ஒருவனை அரணாக நின்று காக்கும்.
  • அறிவுலகத் திறவுகோல்: பூட்டி இருக்கும் அறியாமையை நீக்கி, தெளிவான சிந்தனையைத் தருவது புத்தக வாசிப்பே ஆகும்.

இயல் 2 - இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் (Environment)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய படம்

தலைப்பு: இயற்கைக் காற்றே வா!

அடிமை நீங்க அகிம்சை!
அறியாமை அகலப் புத்தகப்பை!
சுமப்போம் இன்று...
நோய் நீங்கிட
இயற்கைக் காற்றைச் சுமப்போம் நாளை!
விழித்திடு மானிடா!


இயல் 3 - பண்பாட்டின் விருந்தோம்பல் (Hospitality & Love)

விருந்தோம்பல் பண்பை விளக்கும் படம்

தலைப்பு: அன்புடைமை

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்...
ஒருவேளைக் கூழே உண்டாலும்...
உள்ளம் நிறைய அன்புடனே...
ஒருகை நீயும் அளித்தாயே!
கசங்கிய உடையை அணிந்தாலும்...
கலங்கா உள்ளம் படைத்தாயே!
இல்லா நிலையை அடைந்தாலும்...
இரங்கிய உள்ளம் படைத்தாயே!

விளக்கம்:

  • ஒருவேளைக் கூழே உண்டாலும்: வறுமையின் பிடியில் இருந்தாலும், தன்னிடம் உள்ள உணவை மற்றவர்க்குப் பகிர்ந்து அளிக்கும் தமிழர் பண்பாடு ஈடற்றது.
  • கலங்கா உள்ளம்: தனது ஏழ்மை நிலையைக் கண்டு சிறிதும் கலங்காமல், பிறர் பசி தீர்ப்பதே அறம் என நினைக்கும் மாண்பு.

இயல் 4 - தொழில்நுட்பம் (Technology & Addiction)

தொழில்நுட்ப அடிமைத்தனம் பற்றிய படம்

தலைப்பு: தொழில்நுட்ப அடிமை

கிரகாம்பெல் கண்ட அற்புத விளக்கு!
மார்ட்டின் கூப்பரின் மந்திர விளக்கு!
பேஜ் பிரினின் கூகுள் தேடல்...
சூக்கர் பெர்கின் முகநூல் நட்பு...
ஆளை மயக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பு..!
ஆசை உறவை அலைபேசியில் கண்டாய்!
படிப்பும் பணியும் கைபேசியில் முடித்தாய்!
தொழில்நுட்பத் தொல்லையில் தொலைந்து போனாய்!
தொடுதிரை உலகில் நீ அடிமை ஆனாய்..!

Memory Trick: Use the modern names associated with technology (Google - Page Brin, Facebook - Mark Zuckerberg, Mobile - Martin Cooper) to make your poem unique and impress the examiner!

இயல் 5 - கல்வி மற்றும் மரம் வளர்த்தல் (Tree Plantation)

இயற்கை சூழலில் கல்வி கற்கும் மாணவர்கள்

தலைப்பு: மரம் வளர்த்திடுக!

ஆறறிவு படைத்த மானிடா!
புல்லறிவு கொண்டது ஏனடா?!
சூழல் கெடுத்து சூனியம் வைத்தாய்!
முற்றும் மறந்து உற்றவை அழித்தாய்!
மழை தந்து வாழ வைக்கும்!
மன்னுயிர்க் கெல்லாம் உரமாய் நிற்கும்!
தவமிருந்து மரங்கள் வளர்த்திடு!
தலைமுறை தனைக் காத்திடு!

விளக்கம்:

  • சுவாசமும் சுவர்க்கமும் ஏகின: மரங்களை அழித்ததால் பூமியின் நல்ல சுவாசமும், அதனால் உண்டான இனிய சுவர்க்கமும் பூமியை விட்டு நீங்கின.
  • புல்லறிவு: இயற்கையை அழித்து தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொள்ளும் கீழான அறிவைக் குறிக்கிறது.

இயல் 6 - ஒயிலாட்டம் (Traditional Art)

ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள்

தலைப்பு: ஒய்யாரக் கலை

காலின் சலங்கையில் கனவுகள் நில்லும்!
கைச்சிறு துணியில் காரியம் செல்லும்!
இடுப்பின் கச்சையில் ஈரம் சிந்தும்!
உருமியின் ஓசையில் உணர்ச்சிகள் உந்தும்!
ஒய்யார ஆட்டத்தில் வீரமே முந்தும்!
தாளத்தின் நீளத்தில் தாவலும் இருக்கும்!
ஒத்த அசைவில் ஓர்மை ஒளிரும்!
கலையின் நிறைவில் கண்கள் மிளிரும்!


இயல் 7 - விவசாயம் மற்றும் உழவன் (Agriculture)

வயலில் உழைக்கும் விவசாயி

தலைப்பு: உழவன்

ஏர்பிடித்து உழுபவன்...
ஏற்றம்கட்டி இறைப்பவன்...
இறைவனுக்கு அடுத்தவன்...
இருதொழிலே தெரிந்தவன்...
வள்ளலாரின் மூத்தவன்...
பசிப்பிணி அறிந்தவன்...
பேரிடரைப் பொறுப்பவன்...
பெருமைதான் சொல்லிடவோ..!

விளக்கம்:

  • இருதொழிலே தெரிந்தவன்: இறைவன் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்கின்றான். ஆனால், உழவன் 'ஆக்கல்', 'காத்தல்' ஆகிய இரு தொழில்களை மட்டுமே செய்கின்றான். இது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.
  • வள்ளலாரின் மூத்தவன்: 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் வள்ளலார். பயிர் வாடும் போதெல்லாம் முதலில் வாடுவது உழவரின் முகமே என்பதால் உழவன் வள்ளலாருக்கு மூத்தவன் எனப்படுகிறான்.

இயல் 8 - அறம் செய விரும்பு (Charity / Eegai)

உழைப்பின் முக்கியத்துவம்

தலைப்பு: ஈகை

அன்பே அகிலம் ஆள வேண்டும்
ஆசை நிலவாய்த் தேய வேண்டும்
இன்பம் கடலாய்ப் பெருக வேண்டும்
ஈகை என்றும் நிலைக்க வேண்டும்
உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்
கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்
தானம், தருமம் வளர வேண்டும்


இயல் 9 - மனிதமும் மோகமும் (Humanity & Social Media)

உதவியை விளம்பரப்படுத்தும் மனிதர்

தலைப்பு: எல்லாம் இழந்த கணம்!

வலக்கையில் செல்பேசி பிடித்தபடி
வள்ளல்போல் இடக்கையில் கொடுத்தபடி
தன்பி (Selfie) எடுப்போரும் உளர்!!
காட்சியில் மனிதம் பிணம்!
காணும் என்மனம் கனம்!
பெருக வேண்டும் உண்மையான தானம்!

விளக்கம்:

  • காட்சியில் மனிதம் பிணம்: ஈகைப் பண்பு இயல்பாக இல்லாமல், தற்பெருமைக்காகவும் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவதற்காகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் மனிதநேயம் இங்கு செத்துவிட்டது என உரைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் படங்கள் / வினாத்தாள் தொகுப்பு (Gallery & Question Bank)

கீழே பல்வேறு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் கற்றல் தொடர்பான கூடுதல் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

A fish jumping from one pot to another
10th Standard 1st Mid Term Exam 2024 Original Question Paper
An Ant lifting Heavy weight Moral about Hardwork
Science Experiment with test tubes and chemicals
9th Tamil Guide Book Cover
A man, a dog, and a friendly robot standing together
Quarterly Exam 2024 Paper
Original Question Paper
Math Problem - Varshika Drew 6 circles
Math Problem - Two wheeler parking
Math Problem - Pipes sum
Math Graph - Linear function y = 1/2x
Math Graph - xy = 24
Math Geometry - Construct a triangle
💡 Exam Tip: Bookmark this page! For board exam students, we highly recommend starting with the Previous Year Board Papers and Important Question Banks to understand the paper pattern and high-weightage topics before diving deeply into chapter-wise solutions.

📙 Maharashtra State Board Study Hub

Your one-stop destination for all study materials, including textbook solutions, guides, official question papers, and timetables for the Maharashtra Board.


🎓 Higher Secondary (11th & 12th Standard)


🏫 High School (9th & 10th Standard)

  • 10th Standard (SSC) Main Hub

    Latest Syllabus Solutions, Official Question Papers, and Answer Keys for Maharashtra Board.

    Explore 10th Resources 📝 →

  • 9th Standard Hub

    Complete Maharashtra Board Study Materials and foundation-building Textbook Solutions.

    View 9th Guides 📚 →

📝 Board Exam Related

🗣️ SSC Languages Section

🔬 SSC Sciences Section

➗ SSC Mathematics Section

🌍 SSC Social Studies Section

  • History

    Historical events, important timelines, and complete chapter exercises.

  • Political Science

    Constitution notes, democracy concepts, and political processes.

  • Geography

    Map marking guides, environment, and economy study materials.


🌟 Board Exam Importants (Target 2027)

  • 🎯 HSC IMPs (12th Standard)

    Most Important Questions, diagrams, and Study Materials for the upcoming HSC Board Exam.

    Get HSC Importants 🚀 →

  • 🚀 SSC IMPs (10th Standard)

    Official Question Bank, repeated questions, and Study Materials for the SSC Board Exam.

    Get SSC Importants 🎯 →


🎒 Middle & Primary School

  • 7th Standard

    Latest Syllabus Solutions, Official Question Papers, and Answer Keys.

    Download 7th Solutions 📗 →

  • 6th Standard

    Latest Syllabus Solutions, Official Question Papers, and Answer Keys.

    Download 6th Solutions 📘 →

  • 5th Standard

    Latest Syllabus Solutions, basic concepts, and Answer Keys.

    Get 5th Std Solutions 🖍️ →