Advertisement

கடலோர மக்களுக்கு எச்சரிக்கை! ரஜினிகாந்த் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! காரணம் இதுதான்! #CoastalSecurity, #IndiaAlert, #NationalSecurity, #Rajinikanth, #CISFRally,

"நம் நாட்டின் அமைதி, நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி நாச வேலைகள் செய்ய வாய்ப்புள்ளது." என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதற்கு உதாரணமாக, 26/11 மும்பை தாக்குதல் சம்பவங்களை சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த தாக்குதலில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டதை அவர் வேதனையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

கடலோர மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் நடமாடினால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Rajinikanth

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) 100 வீரர்கள், மேற்கு வங்கத்திலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 7,000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.

சிஐஎஸ்எஃப் வீரர்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அவர்கள் உங்கள் ஊர்களுக்கு வரும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CISFRally


#CoastalSecurity

#IndiaAlert

#NationalSecurity

#Rajinikanth

#CISFRally